Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சமையலறையில் இந்த பொருட்களை தவறான இடத்துல வெச்சுடாதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க..
வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான பகுதியாகும். இந்த சமையலறையானது வாஸ்துப்படி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதோடு அந்த சமையலறையில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும்.
வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான பகுதியாகும். இந்த சமையலறையானது வாஸ்துப்படி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதோடு அந்த சமையலறையில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டியதும் அவசியம். அப்படி சமையலறையில் வைக்கப்படும் பொருட்களானது வாஸ்துப்படி இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.

வீட்டின் சமையலறை நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருக்க வேண்டும். அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூமி, வானம், காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகியவற்றின் கூறுகள் சமநிலையில் இருக்க வேண்டும். வேண்டுமானால் வீட்டின் நேர்மறை ஆற்றலை இன்னும் அதிகரிக்க சமையலறையின் சில பகுதிகளில் மாற்றங்களை செய்யலாம். இப்போது சமையலறைக்கான சில முக்கியமான வாஸ்து டிப்ஸ்களைக் காண்போம்.

சமையலறை இருக்க வேண்டிய திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் தென்கிழக்கு திசை தான் அக்னி தேவனுக்குரிய திசையாகம். அதாவது வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் சமையலறை இருக்க வேண்டும். ஒருவேளை இந்த திசையில் சமையலறையை கட்ட முடியாமல் போனால், வடமேற்கு திசையில் கட்டலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் சமையலறையானது வடக்கு, வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் மட்டும் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சனைகளை அதிகரிக்கும்.

ஸ்டவ், ஓவன், சிலிண்டர்
சமையலறையில் உள்ள கேஸ் ஸ்டவ், சிலிண்டர், மைக்ரோஓவன், டோஸ்டர் போன்ற நெருப்பு தொடர்பான அனைத்து பொருட்களுமே சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் தான் இருக்க வேண்டும். முக்கியமாக சமைப்பவர் கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

வாஷ்பேசின்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கேஸ்டவ், மைக்ரோஓவன் உள்ள ஒரே மேடையிலேயே அல்லது இணையாக வாஷ் பேசின்கள், பைப்புகள் இருக்கக்கூடாது. ஏனெனில் நீரும், நெருப்பும் எதிரெதிர் கூறுகள் என்பதால், அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கலாம். எனவே வாஷ் பேசின்கள், தண்ணீர் குழாய்கள் மற்றும் சமையலறை வடிகால் ஆகியவை சமையலறைக்குள் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜ்
வீட்டின் சமையலறையில் ஃப்ரிட்ஜ் வைப்பதாக இருந்தால், அதை தென் மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். வேறு திசையில் வைத்தால், அது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் பல தடைகளை உண்டாக்கும்.

தானியங்கள் மற்றும் பிற சமையல் பொருட்கள்
சமையலறையில் வைக்கும் தானியங்கள் மற்றும் பிற சமையல் பொருட்களை தென் மேற்கு திசையில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் உண்டாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவம் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கபொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications