Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, வீட்டின் எந்த திசையில் மீன் தொட்டியை வெக்கணும், எத்தனை மீன் இருக்கணும் தெரியுமா?
மீன் தொட்டியை வீட்டில் வைத்திருப்பது வாஸ்துப்படி மிகவும் நல்லது. அதுவும் அந்த மீன் தொட்டியை சரியான இடத்தில் வைத்தால், அந்த வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, செல்வமும் பெருகும்.
நாம் அனைவருமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள பல விஷயங்களை செய்வோம். அதில் சிலர் வீட்டின் அழகை மேம்படுத்த உள் அலங்கார செடிகளை வைப்பார்கள், சிலர் வீட்டில் ஓவியங்கள், சிலைகள் என்று வைப்பார்கள். இன்னும் சிலர் வீட்டில் மீன் தொட்டிகளை வைப்பார்கள். ஆனால் ஒரு வீட்டில் எந்த ஒரு பொருயை வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் வைக்கும் ஒவ்வொன்றும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக மீன் தொட்டியை வீட்டில் வைத்திருப்பது வாஸ்துப்படி மிகவும் நல்லது. அதுவும் அந்த மீன் தொட்டியை சரியான இடத்தில் வைத்தால், அந்த வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, செல்வமும் பெருகும். தவறான இடத்தில் மீன் தொட்டியை வைத்தால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை வீட்டில் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது வீட்டில் மீன் தொட்டியை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து காண்போம்.

மீன் தொட்டியை எங்கு வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மீன் தொட்டியை வைக்க சிறந்த இடம் வீட்டின் ஹால் மற்றும் படிக்கும் அறை தான். மற்ற பகுதிகளில் மீன் தொட்டியை வைத்து விடாதீர்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, நீர் தொடர்பான எந்த பொருளையும் வீட்டின் வட கிழக்கு திசையில் வைப்பதே சிறந்தது. இதனால் வீட்டின் செல்வம் அதிகரிப்பதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டமும் அதிகரிக்கும். எனவே, மீன் தொட்டியை வீட்டில் வைப்பதாக இருந்தால், கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வையுங்கள்.

நீரை அடிக்கடி மாற்றவும்
வாஸ்துப்படி, மீன் தொட்டியில் உள்ள நீரை அடிக்கடி ம்ற்ற வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். தொட்டியில் உள்ள நீர் நீண்ட நாட்களாக மாற்றாமல் இருந்தால், வீட்டின் நிதி நிலையும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நிலையாக இருக்கும். முக்கியமாக மீன் தொட்டியில் பாசி படிய விடாதீர்கள். இல்லாவிட்டால் ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும்.

மீன் தொட்டியில் எத்தனை மீன் இருக்க வேண்டும்?
எப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கும் இடம் மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் அந்த மீன் தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையும் முக்கியம். வாஸ்துப்படி, மீன் தொட்டியில் ஒற்றைப்படை எண்ணில் மீன்கள் இருக்க வேண்டும். அதுவும் 9 மீன்கள் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த 9 மீன்களில் 9 கோல்டன் மீன்களும், 1 கருப்பு மீனும் இருக்க வேண்டும். இந்த எண்ணில் மீன்கள் இருந்தால், வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.



Click it and Unblock the Notifications