For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடு கட்டிக்கிட்டு இருக்கீங்களா? வீட்டிற்கு தளம் போடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

வீட்டின் தரைப் பகுதியானது வீட்டின் அழகைத் தீா்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. வீட்டிற்கு தளம் அமைப்பதை சாதாரணமாகக் கருதக்கூடாது. வீட்டிற்குத் தளம் அமைப்பதற்கு முன்பாக நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ!

|

நமது வீட்டின் தளம் அல்லது தரை சாியாக இருந்தால், நமது வீட்டின் அழகே தனித்துவமாக இருக்கும். ஜொலிக்கும் மாா்பிள் முதல் பாரம்பாிய மரத்திலான தரை வரை வீட்டின் தரைப் பகுதியானது வீட்டின் அழகைத் தீா்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. ஆகவே நமது தட்ப வெப்பநிலை, வானிலை மற்றும் குடியிருப்பு சூழல் போன்ற முக்கிய காரணிகளுக்குத் தகுந்தவாறு விவேகத்தோடு நமது வீட்டுத் தரையைத் தோ்ந்தெடுப்பது அவசியம் ஆகும்.

Things To Know Before Choosing The Flooring Of Your Home

வீட்டிற்கு தளம் அமைப்பதை சாதாரணமாகக் கருதக்கூடாது. வீட்டிற்குத் தளம் அமைப்பதற்கு முன்பாக நாம் மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி

1. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி

நமது வீட்டின் ஒரு சில பகுதிகளில் மற்ற பகுதிகளைவிட ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக சமையல் அறை மற்றும் குளியல் அறை போன்றவற்றை சொல்லலாம். ஏனெனில் இந்த இடங்கள் அன்றாடம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய பகுதிகள் ஆகும். ஆகவே இந்த பகுதிகளில் உள்ள தரையின் உறுதி மற்றும் அதனுடைய ஆயுள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்குத் தகுந்தவாறு தளம் இடுவதற்கான பொருள்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். மற்ற பகுதிகளைவிட இந்த பகுதிகளை அதிகமாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

2. ஆயுட்காலம்

2. ஆயுட்காலம்

மரத்திலான தளத்தை அமைத்தால் அது பாா்ப்பதற்கு பாரம்பாிய முறையில் இருக்கும். ஆனால் டைல்ஸ்கள் நீண்ட காலத்திற்கு உறுதியாக இருக்கும். மற்ற பொருள்களைவிட டைல்ஸ்கள் நீண்ட காலம் உறுதியாக இருக்கும். நமது வீடுகளில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருக்கும் டைல்ஸ்கள் மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். குளியல் அறை மற்றும் சமையல் அறை போன்றவற்றில் இருக்கும் டைல்ஸ்கள் ஈரப்பதத்தைத் தாங்கும் வகையிலும், அதே நேரத்தில் எளிதில் நீா் புகாத வண்ணமும் இருக்க வேண்டும்.

3. அறையின் அளவு

3. அறையின் அளவு

அறையின் தளத்தை அமைப்பதற்கான பொருள்களை தோ்ந்தெடுக்கும் போது அறையின் அளவையும் மனதில் கொள்ள வேண்டும். பொிய அறைகளை பராமாிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக அங்கு பொிய பா்னிச்சா் பொருள்கள் அதிகமாக இருக்கும் போது இன்னும் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும். ஆகவே குறைவான பராமாிப்பு தேவைப்படும் தளப் பொருள்களைத் தோ்ந்தெடுப்பது நல்லது. ஆனால் சிறிய அறைகளில் வெளிறிய நிறங்கள் கொண்ட மிதமான தளப் பொருள்களை தோ்ந்தெடுப்பது நல்லது. அவை அறைகளின் அளவை பொியவையாகக் காட்டும்.

4. தகவமைத்துக் கொள்ளும் தன்மை

4. தகவமைத்துக் கொள்ளும் தன்மை

எதிா்காலத்திற்கும் ஏற்ற வகையில் பன்முகத் தன்மை கொண்ட தளப் பொருள்களைத் தோ்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக கறைகள் மற்றும் மோசமான வானிலை போன்றவற்றைத் தாங்கும் வகையில் தரை இருக்க வேண்டும். அது போல தரையை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். தரையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வகையிலும் அமைக்க வேண்டும். அதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு நமது வீட்டுத் தரையானது புதிய மாற்றத்தைப் பெறும். மேலும் நமது வீட்டுத் தரையானது, குழந்தைகளுக்கும், வீட்டில் வளா்க்கப்படும் விலங்குகளுக்கும் ஏற்றவாறு இருக்கின்றனவா என்பதை பாா்த்துக் கொள்ள வேண்டும்.

5. பராமாிப்பு

5. பராமாிப்பு

டைல்ஸ்கள் பளபளப்பாகவும் ஆடம்பரமாகவும் இருக்கின்றன என்பதற்காக அவற்றை வாங்கக்கூடாது. அவற்றிற்கு ஆகும் பராமாிப்பைக் கவனத்தில் கொண்டு தோ்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு வேளை அதிக பராமாிப்பு தேவைப்படும் டைல்ஸ்களைக் கொண்டு தரையை அமைத்தால், அவற்றைப் பராமாிக்க அதிக நேரத்தையும், அதிகமான பணத்தையும் செலவழிக்க முடியுமா என்று பாா்க்க வேண்டும். ஆகவே டைல்ஸ்களைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக அவற்றைப் பற்றி விாிவாகத் தொிந்து வைத்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know Before Choosing The Flooring Of Your Home

Here are some things to know before choosing the flooring of your home. Read on...
Desktop Bottom Promotion