Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
வாஸ்துப்படி, இவற்றை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வெக்காதீங்க... இல்லன்னா அது உங்க முன்னேற்றத்தை தடுக்கும்...
வாஸ்துப்படி, மாடிப்படிக்கு கீழே பொருட்களை சேமித்து வைப்பது கெட்டதாக கருதப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு சேமிக்கும் பேது, அது அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் இடையூறை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு பகுதியும் ஒருவரது நிதி நிலை, உடல் ஆரோக்கியம், தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்து வீடுகளிலும் நிச்சயம் மாடிப்படி இருக்கும். அந்த மாடிப்படிக்கு கீழே இருக்கும் இடத்தில் வீட்டினுள் வைக்க முடியாத சில பொருட்களை மாடிப்படிக்கு கீழே சேமித்து வைப்பார்கள்.

வாஸ்துப்படி, மாடிப்படிக்கு கீழே பொருட்களை சேமித்து வைப்பது கெட்டதாக கருதப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு சேமிக்கும் பேது, அது அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, பண பிரச்சனைகளையும் உண்டாக்குவதாக கூறப்படுகிறது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் மாடிப்படிக்கு கீழே வைக்கக்கூடாத பொருட்கள் என்று சில உள்ளன. கீழே வாஸ்துப்படி வீட்டில் உள்ள மாடிப்படிக்கு கீழே எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

லாக்கர்/பணப்பெட்டி
மாடிப்படிக்கு கீழே உள்ள பகுதி பாதுகாப்பான ஒரு பகுதியாக கருதப்பட்டாலும், அது மறைமுகமான இடம் என்பதால், அந்த இடத்தில் லாக்கரை வைப்பது நல்லதல்ல. லாக்கர் என்பது லட்சுமி தேவி வசிக்கும் ஒரு பொருள். அதை மாடிப்படிக்கு கீழே வைத்தால், லட்சுமி தேவியை அவமரியாதை செய்வது போன்றது மற்றும் இச்செயலால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, வீட்டில் பண தட்டுப்பாடு ஏற்படும்.

குழாய் அமைக்க கூடாது
பெரும்பாலான வீடுகளின் மாடிப்படிக்கு அடிப்பகுதியில் குளியலறை அல்லது கழிவறை இருப்பதை காணலாம். ஆனால் வாஸ்துப்படி படிக்கட்டுக்கு கீழே அமைப்பது நல்லதல்ல. ஒருவேளை இடப்பற்றாக்குறை காரணமாக இந்த இடத்தில் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அங்குள்ள குழாயில் நீர்க்கசிவு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் உள்ளோரை அடிக்கடி நோய்வாய்ப்படுத்தக்கூடும். மேலும் வீட்டில் உள்ள பணம் நீர்க்கசிவது போன்று செலவாகும்.

குப்பைத் தொட்டி
நிறைய பேர் வீட்டின் மாடிப்படிக்கு கீழே குப்பைத் தொட்டியை வைப்பதுண்டு. நீங்களும் உங்கள் வீட்டில் அப்படி வைத்திருந்தால், உடனே அதை எடுத்துவிடுங்கள். குப்பைத் தொட்டியானது கிருமிகள் அதிகம் நிறைந்தது மட்டுமின்றி. வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இதனால் வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படும். எனவே இதைத் தவிர்க்க குப்பைத் தொட்டியை உடனே மாடிப்படிக்கு கீழே இருந்து அகற்றுங்கள்.

பூஜை அறை
உங்கள் வீட்டின் பூஜை அறையை மாடிப்படிக்கு கீழே வைக்கக்கூடாது. மாடிப்படிக்கு கீழே உள்ள பகுதியானது இருட்டாக இருக்கும் பகுதி. இந்த இருட்டான பகுதியில் பூஜை அறையை அமைப்பது வாஸ்துப்படி வீட்டில் தோஷத்தை உண்டாக்கும். எனவே இதைத் தவிர்த்திடுங்கள்.

காலணிகள்
வாஸ்துப்படி, காலணிகளை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வைக்கக்கூடாது. அதேப் போல் காலணிகளை வீட்டினுள்ளும் வைக்கக்கூடாது. ஏனெனில் காலணிகளானது எதிர்மறையை பரப்பக்கூடியது. அவற்றை வீட்டினுள் விடும் போது, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டினுள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications