For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ராசிக்காரங்களும், இந்த மாதிரி தான் அவங்க வீட்டை அலங்கரிப்பாங்களாம்... நீங்க எப்படி?

வீடு என்று வரும் போது நமக்கு பிடித்தாற்போல் அமைந்தால் தான், முழு திருப்தி கிடைக்கும். மேலும், சிலர் வீட்டின் உள் அலங்காரத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதை காண முடியும்.

|

ஒரு மனிதரின் குணாதிசயம் என்பது அவரது ராசியை பொறுத்து அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் கூட, ராசியின் பிரதிபலிப்பை காண முடியும் என்றும் கூறகின்றனர். வீடு, வாகனம், தொழில் என அனைத்திலுமே ஜோதிடத்தை நம்பி இறங்குவோர் அதிகம் பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கான ஓர் சிறப்பு செய்தியை தான் இப்போது பார்க்க போகிறோம்...

Know About Your Home Decor Style, As Per Your Zodiac Sign

வீடு என்று வரும் போது நமக்கு பிடித்தாற்போல் அமைந்தால் தான், முழு திருப்தி கிடைக்கும். மேலும், சிலர் வீட்டின் உள் அலங்காரத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதை காண முடியும். ஒவ்வொருவரின் ஸ்டைலிற்கும் ஏற்றாற்போல் தான் அவர்களது வீட்டின் அலங்காரமும் அமைந்திடும் என்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வகை வீட்டு உள் அலங்காரம் ஏற்றது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச அலங்காரத்தையே தேர்ந்தெடுப்பர். இதனால் அவர்கள் வீட்டில் நிறைய காலி இடங்கள் இருக்கும். அதனையே அவர்களும் விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிக ஆர்வம் உடையவராக இருப்பர். அதனால் தான் அவர்களின் வீடுகளில் நிறைய தனித்துவமான விஷயங்களை பார்க்க முடியும். அவர்கள் குறைந்த பராமரிப்பு வேலைகளை மட்டும் விரும்புவர் மற்றும் பெரும்பாலும் அவர்களின் சுவைக்கு ஏற்றவாறான பர்னிச்சர்களை வைத்திருப்பார்கள்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச அலங்காரத்தையே தேர்ந்தெடுப்பர். இதனால் அவர்கள் வீட்டில் நிறைய காலி இடங்கள் இருக்கும். அதனையே அவர்களும் விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிக ஆர்வம் உடையவராக இருப்பர். அதனால் தான் அவர்களின் வீடுகளில் நிறைய தனித்துவமான விஷயங்களை பார்க்க முடியும். அவர்கள் குறைந்த பராமரிப்பு வேலைகளை மட்டும் விரும்புவர் மற்றும் பெரும்பாலும் அவர்களின் சுவைக்கு ஏற்றவாறான பர்னிச்சர்களை வைத்திருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

இந்த ராசியை சேர்ந்தர்கள், பெரும்பாலும் வசதியான ஒன்றை தான் விரும்புவார்கள். அதனாலேயே, அவர்களது வீட்டில் ரிலாக்ஸ் செய்வதற்கென்று தனி இடத்தையே ஒதுக்கிவிடுவார்கள். அந்த இடங்களை கூட பீன் பேக்ஸ், அழகு விளக்குகள் மற்றும் ட்ரீம் கேட்சர்கள் போன்றவற்றை கொண்டு அலங்கரித்திருப்பர். வீட்டு அலங்காரம் அவசியம் என்பதை பெரிதும் நம்புபவர்கள் என்பதால், எப்போதும் வீட்டை அழகாக வைத்திருக்கவே விரும்புவர்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், கேஜெட்கள் மீது அதீத வெறி கொண்டவர்களாக இருப்பர். தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமுள்ள தன்மை கொண்டிருப்பதன் காரணமாக, அவர்களின் வீட்டில் பல ஸ்மார்ட் சாதனங்களை உங்களால் காண முடியும். அவர்கள் சிறு சிறு அலங்கார பொருட்களை விரும்புபவர்களாக இருந்தாலும், அவர்களது வீட்டு சுவர்களை நடுநிலையாக வைத்திருக்கவே விரும்புவர். பழங்கால அலங்காரம் தான் பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்தது ஒன்று. இதனாலேயே அவர்களது வீடு மிகவும் அழகானதாக காட்சியளிக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் குடும்பத்தை சார்ந்தே எப்போதும் இருப்பர். மேலும், அவர்களது அன்பை எப்போதும் வெளிகாட்டும் குணமுடையவர்கள். அவர்களது வீட்டு சுவர்கள், குடும்பம் புகைப்படங்களால் நிறைந்து காணப்படும். எப்போதும் மென்மையான நிறங்களை விரும்புபவர்களாக இவர்கள் இருப்பதால், அவர்களது படுக்கையறை எப்போதும் ஒருவித நேர்மறை ஆற்றலோடு காட்சியளிக்கும். அவர்களின் அறை சில நேரங்களில் கொஞ்சம் கலைந்து இருந்தாலும், அது எப்போதும் வசதியாகவும், நிம்மதியான இடமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் என்றாலே ஒருவித கம்பீரத்தை குறிப்பதாகும். அவர்களது குணாதிசயத்தை கூற இந்த ஒரு வார்த்தையே போதுமானது. இந்த ராசிக்காரர்கள் எப்போதுமே தைரியமான தோற்றத்தை தான் விரும்புவார்கள். அது அவர்கள் வீடாக இருந்தாலும் சரி. ஒரு சிறு விஷயத்தை கூட மிக அழகாக காட்சிப்படுத்த விரும்புவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் பர்னிச்சர்கள், கம்பளி மற்றும் தரைவிரிப்புகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும், அவர்கள் வீட்டு உடை மாற்றும் அறையில் ஆளுயர கண்ணாடி கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள், எந்தவொரு விஷயத்திலும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் கொண்டிருப்பவர்கள். அவர்களின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே வைத்தது வைத்த இடத்தில் அப்படியே இருக்கும். அவர்களின் சிறப்பான ஏற்பாடுகளால், வீட்டு அறைகள் எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கும். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வீட்டை அலங்கரிக்கும் போது, நேர்த்தியான பர்னிச்சர்கள் மற்றும் செடிகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அழகியலின் பெரும் ரசிகர்கள் என்றே கூற வேண்டும். அதனாலேயே அவர்களின் வீடுகள் எப்போதும் அழகாகக் காட்சியளிக்கும். நவீன பர்னிச்சர்களுக்கு, மிக அழகான விரிப்புகள் மூலம் அழகு சேர்ப்பர். துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் மிகுந்த கவனம் செலுத்துக்கூடியவர்கள். அவர்கள் வெளிர் மற்றும் நடுநிலையான வண்ணங்களை விரும்புவதால், அவர்களின் வீட்டு அறைகள் நேர்த்தியாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய விரும்பமாட்டார்கள். அதனால்தான் அவர்களின் வீட்டில் பல ஆடம்பரமான பொருட்கள் காணப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட இடம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அவர்களின் படுக்கையறை அல்லது வசதியான மூலையில் வீட்டின் வேறு எந்த பகுதியையும் விட சற்று கூடுதல் அலங்காரத்துடன் காணப்படலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள், தங்கள் அறையைத் தாங்களே திட்டமிட விரும்புபவர்கள். வீட்டின் சில மூலைகள் நன்றாக வைக்கப்பட்டிருக்கலாம், மற்றவை கலைந்து காணப்படலாம். கலைப்பொருட்கள் மற்றும் ஷோபீஸ்களைக் காண்பிப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கலாம். இவற்றை அவர்களின் லிவ்விங் ரூம்களில் உள்ள அலமாரிகளை பார்ப்பதன் மூலம் கண்டறியலாம்.

மகரம்

மகரம்

மகர ராசிகள் சேமிப்பு இடங்களை கொண்டிருக்க விரும்புவர். அலமாரிகள், சுவரில் கட்டப்பட்ட இழுப்பறைகள், பீரோக்கள் போன்றவற்றில் தேவையற்ற பொருட்களை அடக்குவதன் மூலம், வீடு காலியான இடங்களால் நிரப்பப்பட்டிருக்கும். அவர்கள் நேர்த்தியான பர்னிச்சர்களையே பெரும்பாலும் விரும்புவார்கள். மேலும் அவர்களின் பணி செய்யும் அறைக்கோ அல்லது இடத்திற்கோ சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்கார்களை பொறுத்தவரை, வீடு கலைந்திருந்தால் தான் பிடிக்கும். அப்படிப்பட்ட சூழல் தான் அவர்களுக்கு சற்று நிம்மதியை வழங்கக்கூடும். இது அவர்களின் ஆளுமையை பிரதிபலிக்கிறது. அதனால் தான் அவற்றை அப்படியே வைத்திருக்க விரும்புவார்கள். புத்தகங்களுக்கென ஒரு சிறப்பு மூலையையும் அவர்கள் ஒதுக்கக்கூடும். ஏனென்றால், அவை அவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க உடைமையாக திகழ்கிறது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள், தங்களது இல்லம் நீல நிறத்தில் காட்சியளிக்கவே எப்போதும் விரும்புவர். அப்போது தான் அவர்களது வீடு சற்று உயர்வாக தெரியும் என்பது அவர்களது எண்ணம். இந்த ராசிக்காரர்கள் ஓய்வெடுக்க என்றே தனி இடத்தை ஒதுக்க விரும்புவார்கள். மேலும், அவர்களது படுக்கையில் அல்லது வீட்டு சோஃபாக்களில் அதிகமான தலையணைகளை வைத்து சொகுசாக உட்கார விரும்புவர். அவர்களது அறைகள் அமைதியான அதிர்வைக் கொடுப்பதால், எப்போதும் நிம்மதியான சூழலே நிலவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know About Your Home Decor Style, As Per Your Zodiac Sign

Want to know about your home decor style, as per your zodiac sign? Read on...
Desktop Bottom Promotion