Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
செலவே இல்லாமல் உங்கள் வீட்டின் தோற்றத்தை அழகாக மாற்ற உதவும் எளிய தந்திரங்கள் என்ன தெரியுமா?
அனைவருக்குமே தாங்கள் வசிக்கும் வீடு அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அது முற்றிலும் நியாயமானதும் கூட. ஆனால் அனைவராலும் பணம் செலவழித்து தங்கள் வீட்டை அழகுபடுத்த முடியாது.
அனைவருக்குமே தாங்கள் வசிக்கும் வீடு அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அது முற்றிலும் நியாயமானதும் கூட. ஆனால் அனைவராலும் பணம் செலவழித்து தங்கள் வீட்டை அழகுபடுத்த முடியாது.

புத்திசாலித்தனமாக நீங்க செய்யக்கூடிய சில தந்திரங்கள் செலவே இல்லாமல் உங்கள் வீட்டை மாளிகைபோல மாற்றக்கூடும். இதற்கு நீங்கள் அதிக சிரமப்பட வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை, மிக எளிதாகவே இதனை செய்யலாம். உங்கள் வீட்டை அழகாக்கும் அந்த எளிய தந்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பர்னிச்சர்களை இடம் மாற்றுங்கள்
பர்னிச்சர்களை இடம் மாற்றுவது போன்ற வீட்டின் தோற்றத்தை மாற்றும் எளிய தந்திரம் எதுவுமில்லை. ஒரு சோபா, ஒரு மேஜை, டிரஸ்ஸர் அல்லது படுக்கையை நகர்த்துவதன் மூலம் உங்கள் வீடு எவ்வளவு வித்தியாசமாகத் தெரிகிறது என்பதை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் அறை இன்னும் கொஞ்சம் பெரியதாக உணரலாம். இது நிச்சயமாக புத்துணர்ச்சியுடனும் புதியதாகவும் இருக்கும்.

சோபாவின் மீது தலையணையை வையுங்கள்
வீட்டை அழகாக மாற்ற சோபா இருக்கும் அறையில் தலையணைகளைப் பயன்படுத்தலாம். சோபாவின் நீளத்தை மறைக்கும் அளவிற்கு தலையணைகளை கொண்டு மறைக்கலாம். சற்று வித்தியாசமான தலையணைகளை பயன்படுத்துவது சிறந்த தோற்றத்தைக் கொடுக்கும். சோபாவின் நிறத்திற்கு எதிர்மறையான தலையணையை பயன்படுத்துங்கள்.

மூன்று பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கவும்
பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்க அலமாரிகளில் உள்ள பொருட்களை மாற்றி வைக்கவும். ஒரு பொது விதியாக, ஒற்றைப்படை பொருட்கள் இரட்டைப்படை பொருட்களை விட மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். கண்ணைக் கவரும் காட்சிக்காக பிரேம்கள் அல்லது பொருட்களை மூன்று அல்லது ஐந்துகளில் ஏற்பாடு செய்யுங்கள்.

கண்ணாடியை சாய்த்து வைக்கவும்
உங்கள் வரவேற்பறையில் கண்ணாடியை மாட்ட துளைகள் இட முடியாவிட்டால் அதற்கு முயலாமல் பெரிய கண்ணாடி ஒன்றை சுவரில் சாய்த்து வைக்கவும். கண்ணாடி உங்கள் வீட்டின் அலங்காரத்தில் பல மாற்றங்களை செய்கிறது. இது உங்கள் வீட்டை பிரகாசமாக்குவதுடன் அதிக இடம் இருப்பது போன்ற மாயையும் உருவாக்குகிறது.

பழங்களை கொண்டு அலங்கரியுங்கள்
பழங்கள் இயற்கையின் கொடையாகும். அவை தாங்கள் இருக்கும் இடத்திற்கு அழகை சேர்க்கின்றன. உங்கள் வீட்டின் வரவேற்பறையில் சிட்ரஸ் பழங்களை கண்ணாடி ஜாரில் போட்டு வைக்கவும். இது உங்கள் அஅறைக்கு எப்போதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

குடும்ப புகைப்படங்கள்
குடும்பப் புகைப்படங்கள் மற்றும் பிற விருப்பமான நினைவுகளை உங்கள் ஹாலில் வைக்கவும். உங்களிடம் உள்ள பிரேம்களைச் சேகரித்து, ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான தோற்றத்திற்கு வண்ணம் தீட்டவும். கருப்பு பிரேம்களில் வெள்ளை புகைப்படங்கள் கேலரி சுவருக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications
