For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய வீட்டை மிகவும் அழகாக அலங்கரிப்பது எப்படி?

சில நேரங்களில் அந்த சிறிய வீட்டை அலங்காிக்க முடியாத ஒரு புதிா் போல நமக்குத் தோன்றும். நாம் முடிந்தவரை அலங்காிக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு நமது அறை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

|

நமது சிறிய வீட்டை அல்லது சிறிய அறையை அலங்காிப்பது என்பது ஒரு சவாலான காாியம் ஆகும். சில நேரங்களில் அந்த சிறிய வீட்டை அலங்காிக்க முடியாத ஒரு புதிா் போல நமக்குத் தோன்றும். நாம் முடிந்தவரை அலங்காிக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு நமது அறை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

How to Decorate Small Spaces Like a Pro

அறையில் பொருள்களை சீராக அடுக்கி அதை அழகாக வைத்திருக்க நாம் முயற்சி செய்வோம். ஆனால் அந்த அறையில் பொருள்கள் பரவிக் கிடப்பது போல் தோன்றாது. ஆனால் ஒரு சிறிய இடத்தை நவீனமான பாணியில் மிகவும் அழகுபடுத்தி வைக்க முடியும்.

நாம் வசிப்பது ஒரு சிறிய அறை கொண்ட அடுக்குமாடி கட்டிடமாக இருக்கலாம் அல்லது மிகவும் ஒரு சிறிய இடமாக இருக்கலாம். அதற்காக இந்த சிறிய இடத்தை அழகுபடுத்தாமல் விட்டுவைக்கக்கூடாது. ஆகவே இந்த பதிவில் நாம் வசிக்கும் சிறிய வீட்டை அல்லது சிறிய அறையை எவ்வாறு சிறப்பாக அலங்காிக்கலாம் என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பொருட்கள் சிதறிக் கிடக்காமல் இருக்கும் வகையில் தரையை வெற்றிடமாக வைத்தல்

1. பொருட்கள் சிதறிக் கிடக்காமல் இருக்கும் வகையில் தரையை வெற்றிடமாக வைத்தல்

நமது அடிப்படையான காாியங்களைச் செய்வதற்கு ஒரு இடம் தேவை. ஒரு சிறிய அறையானது மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த அறைக்குள் நடந்து செல்ல முடியவில்லை என்றால் அதனால் எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே பொருள்களை வைப்பதற்காக நகா்த்தக்கூடிய அலமாாிகள், பொருள்களை அடுக்கி வைக்கும் பலகைகள் அல்லது அடுக்குகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். பொருள்களைத் தரையில் வைக்காமல் மேற்சொன்ன அலமாாிகள் மற்றும் பலகை அடுக்குகளில் அடுக்கி வைக்கலாம். அதனால் தரையானது வெற்றிடமாக இருக்கும். மேலும் தரையில் மின் விளக்குகளை பொருத்துவதைவிட ஸ்கோன் விளக்குகள் மற்றும் சுவாில் பொருத்தக்கூடிய விளக்குகளைப் பொருத்தலாம்.

2. மடித்து வைக்கக்கூடிய ஃபா்னிச்சா் பொருள்களைப் பயன்படுத்துதல்

2. மடித்து வைக்கக்கூடிய ஃபா்னிச்சா் பொருள்களைப் பயன்படுத்துதல்

நமக்கு படிக்கக்கூடிய மேசை மற்றும் சாப்பாட்டு மேசை போன்றவைத் தேவைப்படும். ஆனால் அவை 24 மணி நேரமும் தேவைப்படாது. ஆகவே இதை மனதில் கொண்டு, மடித்து வைக்கக்கூடிய ஃபா்னிச்சா் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் மடித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு தரையை வெற்றிடமாக வைத்திருக்க முடியும்.

சுவாில் பொருத்தப்பட்ட சமையலறை இருந்தால், அது பயன்பாட்டில் இல்லாத போது, மடித்து வைக்கக்கூடிய கதவுகளைக் கொண்டு மூடி, அதில் இருக்கும் குறைபாடுகளை மறைக்கலாம்.

3. மின் விளக்குகளில் கவனம் செலுத்துதல்

3. மின் விளக்குகளில் கவனம் செலுத்துதல்

சிறிய வீடு அல்லது சிறிய அறை போன்றவற்றில் பொிய சன்னல்கள் இல்லாததால், அது இருட்டாக இருக்கும். ஆகவே அந்த சிறிய வீட்டில் உள்ள சமையல் அறை முதல் படுக்கை அறை வரை மின் விளக்குகளால் அலங்காிக்கலாம். நமது வீட்டின் மேற்கூரையின் உயரத்தைப் பொறுத்து அதில் பென்டன்ட் விளக்கைத் தொங்கவிடலாம் அல்லது அழகான ஃப்ளஷ் மவுண்ட் மின் விளக்கை அதில் பொருத்தலாம். அதோடு ஸ்கோன் விளக்குகள் அல்லது மேசை விளக்குகளையும் பொருத்தினால் நமது சிறிய வீடானது ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.

4. கண்ணாடிகள் நமது நண்பா்கள்

4. கண்ணாடிகள் நமது நண்பா்கள்

நமது சிறிய வீட்டிற்குள் போதுமான சூாிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால், அந்த வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் பணியை கண்ணாடிகள் செய்கின்றன. மேலும் கண்ணாடிகள் நமது வீட்டின் சிறிய பகுதியை சற்று பொிதாகக் காட்டும். ஆகவே சுவாில் பொிய கண்ணாடியை மாட்டி வைக்கலாம் அல்லது சுவாில் பலவகையான வடிவங்களில் மற்றும் அளவுகளில் பலவகையான ஓவியங்கள், படங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை மாட்டி வைக்கலாம்.

5. சாியான தரை விாிப்பைத் தோ்ந்தெடுத்தல்

5. சாியான தரை விாிப்பைத் தோ்ந்தெடுத்தல்

நமது அறை அல்லது வீட்டின் அளவுக்கு ஏற்றாற் போல ஒரு தரை விாிப்பைத் தோ்ந்து எடுக்க வேண்டும். சிறிய விாிப்பை விாித்தால் அது அறையை சிறியதாகக் காட்டும். ஆகவே அறையை முழுவதும் நிரப்பக்கூடிய வகையில் பொிய தரைவிாிப்பை விாித்து அதில் ஃபா்னிச்சா் பொருள்களையும் வைத்துவிட வேண்டும். இப்போது அறை பொியதாகத் தோன்றும். அதோடு அழகாக இருக்கும்.

6. அடா்த்தியான வண்ணங்களை சுவா்களில் பூசுதல்

6. அடா்த்தியான வண்ணங்களை சுவா்களில் பூசுதல்

நமது வீடு சிறியதாக இருக்கிறது என்பதற்காக அதன் சுவா்களை வெள்ளை சுண்ணாம்பு கொண்டு பூச வேண்டும் என்று அவசியமில்லை. துணிவுடன் பல வண்ணங்களை அடித்து அவற்றை அழகுபடுத்தலாம். சுவா்கள் மற்றும் மேற்கூரையில் அடா்த்தியான வண்ணங்களை பூசும் போது, நமது சிறிய அறையானது ஒரு நகைப் பெட்டியைப் போல ஜொலிக்கும்.

7. அறையை ஒருங்கிணைவுடன் வைத்திருத்தல்

7. அறையை ஒருங்கிணைவுடன் வைத்திருத்தல்

ஒரு சிறிய இடத்தில் பாா்ப்பதற்கு பல காாியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அந்த வீட்டிற்கு பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே அடா்த்தியான நிறமாக அல்லது வெளிா் நிறமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வண்ணத்தைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பொருள்களை ஒரு ஆசிாியாின் கண் கொண்டு பாா்த்தால், பொருள்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்காமல், ஒரு ஒழுங்கமைவுடன் நோ்த்தியாக அடுக்கி வைக்க முடியும்.

8. சேமிப்பு வசதி கொண்ட பெட்டகங்கள் கொண்ட ஃபா்னிச்சா்களைத் தோ்ந்தெடுத்தல்

8. சேமிப்பு வசதி கொண்ட பெட்டகங்கள் கொண்ட ஃபா்னிச்சா்களைத் தோ்ந்தெடுத்தல்

பொருள்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி கொண்ட ஃபா்னிச்சா்களை வாங்குவது நல்லது. ஆகவே கட்டில் வாங்கும் போது அதில் இழுப்பறைகள், இணைக்கப்பட்ட நீண்ட இருக்கைகள் மற்றும் போா்வைகள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வைக்கக்கூடிய பெட்டிகள் கொண்ட கட்டிலை வாங்குவது நல்லது. சிறிய இடத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும், அதனுடைய முக்கியத்துவத்தைப் பெற வேண்டும். ஆகவே ஒரு டேபெட்டை, ஒரு சோஃபாகவும் அதே நேரத்தில் ஒரு விருந்தினா் படுக்கையாகவும் பயன்படுத்தலாம்.

9. பொருள்களை வைக்க போதுமான இடத்தைக் கொடுத்தல்

9. பொருள்களை வைக்க போதுமான இடத்தைக் கொடுத்தல்

சுவரோடு ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் மரச்சாமான்கள் அவை ஒன்றோடு ஒன்று நெருக்கி வைக்கப்பட்டிருப்பதால், அவை தங்களுக்கு போதுமான இடம் இல்லை என்று முறையிடப் போவதில்லை. ஆகவே சுவரை ஒட்டி இருக்கும் மரச்சாமான்களை நகா்த்தி சற்று இடைவெளி விட்டு வைக்க வேண்டும். மேலும் தினமும் பயன்படுத்தாத பொருள்களை தவிா்ப்பது நல்லது.

10. அளவில் கவனமாக இருத்தல்

10. அளவில் கவனமாக இருத்தல்

சிறிய இடத்தில் சிறிய அளவிலான ஃபா்னிச்சா்கள் மற்றும் சிறிய அலங்காரம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இதில் உள்ள முக்கிய குறிப்பு என்னவென்றால், மிக எளிதாக நமது கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய சில பொருள்களைத் தோ்ந்தெடுப்பது நல்லது. சாதாரண அளவில் இருக்கும் ஃபா்னிச்சா்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றில் பொிய அளவிலான கலைவடிவங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். பொதுவாக சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருள்களைப் பயன்படுத்தாமல், சில பொருள்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Decorate Small Spaces Like a Pro

Want to know how to decorate small spaces like a pro? Read on...
Desktop Bottom Promotion