Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் செருப்புக்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பிரச்சனை அதிகரிக்கும்..
நமது வீட்டின் வெளியே விடப்படும் காலணிகளும் வாஸ்துவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் காலணிகளை எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த மாதிரியெல்லாம் காலணிகளை வைக்கக்கூடாது என்று சில விதிகள் வாஸ்துவில் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சொல்லப்போனால் ஒரு வீட்டில் ஒரு பொருள் தவறான இடத்தில் இருந்தால், அந்த வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதென்று அர்த்தம். வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பின், நிதி பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை என்று பிரச்சனை மேல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

அந்த வகையில் நமது வீட்டின் வெளியே விடப்படும் காலணிகளும் வாஸ்துவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் காலணிகளை எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த மாதிரியெல்லாம் காலணிகளை வைக்கக்கூடாது என்று சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்போது அதுக்குறித்து காண்போம்.

காலணிகள் தலைகீழாக இருக்கக்கூடாது
வீட்டிற்கு வெளியே கழற்றிவிட்டு வரும் காலணியானது நேராக இருக்க வேண்டும். எப்போதும் காலணிகளை தலைகீழாக விடக்கூடாது. அதேப் போல் காலணிகள் சிதறி இருக்கக்கூடாது. காலணிகள் சிதறி இருக்கும் வீட்டில் சனியின் கெடு பலன்கள் கிடைக்கும். ஏனெனில் காலணிக்கும், சனிக்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.

காலணிகள் அங்கும் இங்கும் இருக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வெளியே விடப்படும் காலணிகளை ஒழுங்கான முறையில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை காலணிகள் அங்கும் இங்கும் ஒழுங்கற்று இருந்தால், அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை நுழையச் செய்து, அந்த வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே காலணிகளை ஒரு மூலையில் சரியாக அடுக்கி வையுங்கள்.

எந்த திசையில் செருப்புக்களை வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, காலணிகளை எப்போதும் மேற்கு திசையில் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். மேலும் வீட்டில் பயன்படுத்தாத மற்றும் அறுந்து போன காலணிகள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அதன் மூலம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல் ஊடுருவி வீட்டில் உள்ளோரிடையே பிரச்சனைகளை அதிகரிக்கும்.

காலணிகளை எங்கு வைக்கக்கூடாது?
செருப்பு, ஷூ வைக்கும் ரேக்கை வீட்டின் பூஜை அறை அல்லது சமையலறை சுவற்றை ஒட்டி வைக்கக்கூடாது. இதனால் லட்சுமி தேவி கோபம் கொண்டு நிதி பிரச்சனையை சந்திக்க வைப்பார். அது மட்டுமின்றி வீட்டின் கிழக்கு, வடக்கு அல்லது, தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் செருப்பு ரேக்கை அமைக்கக்கூடாது. வேண்டுமானால் வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் செருப்பு ரேக்கை அமைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications