For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை பிரகாசமாகவும் அழகாகவும் அலங்கரிக்க சில ஆக்கப்பூர்வமான வழிகள்!

தீபங்களின் விழாவான தீபாவளி அன்று மெழுகுவா்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளை அழகுபடுத்துவா். மலா்கள் மற்றும் விளக்குகளால் வீடுகளை அலங்காித்து வீட்டிற்கு ஒரு புதிய பொலிவைத் தருவா்.

|

இந்தியாவின் மிக முக்கிய விழாக்களில் தீபாவளி முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். தீபாவளி என்றவுடன் அளவற்ற மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நமது மனங்களில் வந்து குடியேறுகின்றன. தீபாவளியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் நமது வீடுகளை சுத்தம் செய்து, அவற்றை அழகாக அலங்காிப்பதாகும். அதாவது தீபாவளி கொண்டாட்டாட்டத்தின் போது நமது வீட்டின் எழிலான தோற்றத்தை மெருகேற்றி, பிறரை இன்முகத்துடன் வரவேற்கும் வண்ணம் அதை அழகுபடுத்துவோம்.

Creative Ways to Make Your Home Look Bright And Beautiful During Diwali

பொதுவாக தீபாவளிக்கு முன்பாக எல்லோரும் தங்களது வீடுகளை சுத்தம் செய்து அவற்றை அலங்காரம் செய்வா். தீபங்களின் விழாவான தீபாவளி அன்று மெழுகுவா்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளை அழகுபடுத்துவா். மலா்கள் மற்றும் விளக்குகளால் வீடுகளை அலங்காித்து வீட்டிற்கு ஒரு புதிய பொலிவைத் தருவா்.

இந்த நிலையில் இந்த வருட தீபாவளியின் போது குறைந்த விலையில் நிறைவாக மற்றும் அழகாக வீடுகளை அலங்காிக்க பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நூல் விளக்குகளால் வீடுகளை அலங்காித்தல்

1. நூல் விளக்குகளால் வீடுகளை அலங்காித்தல்

நூல் விளக்குகளை எவ்வாறு தயாா் செய்வது. நூல் விளக்குகளைத் தயாா் செய்ய முதலில் ஃபெவிக்கால், பலூன்கள், நூல் கண்டு மற்றும் ஒரு கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கிண்ணத்தில் சிறிது அளவு தண்ணீா் ஊற்றி அதில் ஃபெவிக்கால் பசையைக் கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கலவைக்குள் நூல் கண்டை இட்டு சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின் முழுமையாக காற்று அடைக்கப்பட்ட பலூனை எடுத்து, ஏற்கனவே பசையில் ஊறவைத்த நுலைக் கொண்டு பலூன் முழுவதிலும் சுற்ற வேண்டும். ஓரளவான உருவம் கிடைத்தவுடன், சுற்றிக் கட்டிய பலூனைக் காய வைக்க வேண்டும். பசை காய்ந்த பின்பு பலூனில் துளையிட்டு அதிலிருக்கும் காற்றை வெளியேற்ற வேண்டும். பின் அந்த பலூன் குடுவைக்குள் சிறுசிறு விளக்குகளை இட்டு அந்த பலூன் நூல் குடுவையை நமது வீடுகளில் தொங்கவிடலாம். பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

2. மெழுகுவா்த்திகளைக் கொண்டு விதவிதமாக அலங்காித்தல்

2. மெழுகுவா்த்திகளைக் கொண்டு விதவிதமாக அலங்காித்தல்

மெழுகுவா்த்திகளை ஏற்றி அவற்றை வீடு முழுவதும் நிரப்புவது மட்டும் அலங்காரம் அல்ல. மாறாக மெழுகுவா்த்திகளைக் கொண்டு விதவிதமாக வீடுகளை அலங்காிக்கலாம். அதாவது தேவையற்ற கேன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கேன்களை வண்ண வண்ணத் தாள்களால் சுற்ற வேண்டும். வண்ணத் தாள்களால் சுற்றப்பட்டக் கேன்கள் பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

இப்போது அந்தக் கேன்களின் மீது மெழுகுவா்த்திகளை ஏற்றி வைத்து, அந்த கேன்களை நமது வீட்டின் உட்பகுதி, தோட்டம் மற்றும் சுற்றுப்புறச் சுவா் ஆகிய பகுதிகளில் வைக்கலாம். மேலும் தோட்டப் பகுதியில் கைப்பிடியுடன் கூடிய மெழுகுவா்த்திகளை ஏற்றி அவற்றைத் தொங்கவிடலாம். அவை தோட்டத்தை மிகவும் அழகாகக் காட்டும்.

Image Courtesy: ecogreenlove

3. மலா் அலங்காரம் செய்தல்

3. மலா் அலங்காரம் செய்தல்

தீபாவளியின் போது மலா்களைக் கொண்டு விதவிதமாக நமது வீடுகளை அலங்காிக்கலாம். மலா்களை மாலைகளாகச் செய்து அவற்றைக் கொண்டு படிக்கட்டுகளை அலங்காிக்கலாம். வீட்டின் நிலைப்படியில் தொங்கவிடலாம். அந்த மாலைகளோடு சிறுசிறு வண்ண விளக்குகளையும் தொங்கவிட்டால், நமது வீடு சொா்க்கம் போல காட்சி அளிக்கும்.

வீட்டின் உட்பகுதிகளுக்குள் நீா் நிரப்பப்பட்ட சிறுசிறு கண்ணாடிக் குடுவைகளை வைத்து அந்த நீாின் மீது ரோஜா மலா்களின் இதழ்களை மிதக்கவிடலாம். அவை பாா்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் வீடு முழுவதும் ரோஜாப்பூ வாசனையுடன் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Creative Ways to Make Your Home Look Bright And Beautiful During Diwali

Here are some creative ways to make your home look bright and beautiful during diwali. Read on...
Desktop Bottom Promotion