For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டை கண்ணாடியைக் கொண்டு அலங்கரிப்பது எப்படி?

By Srinivasan P M
|

உங்களுக்குக் கண்ணாடி மிகவும் பிடித்தமான விஷயம் என்றால், நீங்கள் அதை உங்கள் வீட்டில் மிகவும் சுவாரசியமான வகையிலும் வித்தியாசமாகவும் பயன்படுத்தி மகிழலாம். மேலும் வீட்டை கண்ணாடியால் அலங்கரித்தால், வீடு வித்தியாசமாக காணப்படுவதோடு, மிகவும் பெரியதாகவும் காணப்படும்.

நம் வீடு அழகாக இருந்தால், நமக்கு நம் வீடே சொர்க்கமாக இருக்கும். இங்கு உங்கள் வீட்டை கண்ணாடியால் அலங்கரிப்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன் படி அலங்கரித்து மகிழுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணாடிக் கலைப் பொருட்கள்

கண்ணாடிக் கலைப் பொருட்கள்

கண்ணாடி பீரோ அல்லது டிரஸ்ஸிங் டேபிளில் வெறும் முகம் பார்ப்பதற்குப் பயன்படுவது மட்டுமல்ல. அதனை கலைக்கண்ணோடு நோக்கினால் பல கலைப் பொருட்களையும் அதில் செய்யலாம். சுவரில் பல்வேறு வடிவங்களில் அல்லது அளவுகளில் தொங்கவிடுவதன் மூலம் கூட ஒரு வித்தியாசமான கலைத் திறனை வெளிப்படுத்தலாம். கலைநயம் கூடிய ஒரே ஒரு கண்ணாடியையும் அதில் சேர்த்து இன்னும் மெருகேற்றலாம்.

வீட்டு வரவேற்பறை

வீட்டு வரவேற்பறை

மும்பை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இடம் ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் வீட்டைப் பெரியதாகக் காட்டும் எந்த ஒரு முயற்சியும் வரவேற்கத்தக்கதே. அந்த விதத்தில், வீட்டு ஹாலில் ஒரு பெரிய கண்ணாடியைப் சுவராகப் பொருத்துவது மிகவும் அழகான ஒரு ஐடியா. உங்கள் வீட்டு ஹாலில் ஒரு சுவரைத் தேர்ந்தெடுத்து, அதை முழுவதும் மறைத்து மரச் சட்டத்துடன் கூடிய ஒரு பெரிய கண்ணாடியைப் பொருத்துங்கள். இது உங்கள் அறையை பிரதிபலித்து, அதனை இருமடங்காகக் காட்டும். அதன் அருகே ஒரு ஜன்னல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், சூரிய ஒளி உள்ளே வந்து அறையைப் பிரகாசமாக்குவதுடன் பெரியதாகவும் காட்டும்.

சமையலறையில் கண்ணாடி அலமாரிகள் மற்றும் சுவர்கள்

சமையலறையில் கண்ணாடி அலமாரிகள் மற்றும் சுவர்கள்

சமையலறையில் எப்போதும் போல டைல்ஸ் பதிப்பதற்குப் பதிலாக கண்ணாடியைப் பதித்துப் பாருங்கள். அது பெரியதாக தென்படும். உங்கள் சமையல் அறை அலமாரிகளில் மரக்கதவுகளுக்குப் பதிலாகக் கண்ணாடிக் கதவை உபயொகித்தால், அங்கே அலமாரி இருப்பதைப் போலவே தெரியாது. இதுப்போன்று சமையலறைகளில் கண்ணாடி பதிக்கும் போது, நீங்கள் வேலைகளுக்கிடையே ஒருவரிடம் பேசும் போது திரும்பிப் பார்க்கும் அவசியம் இல்லாமல் எதிரிலே உள்ள கண்ணாடியைப் பார்த்தே பேசலாம். இது சமையலறையினை பிரகாசமாகவும் வைக்கும்.

மாயத்தோற்றங்களை உருவாக்குங்கள்

மாயத்தோற்றங்களை உருவாக்குங்கள்

வீட்டு ஹாலில் நீங்கள் நடந்து செல்லும் பகுதியை சாதாரணமாக நினைக்காமல், அதில் கண்ணாடியை பதித்தால் அந்த இடம் பெரியதாகக் காணப்படுவதுடன் தாராளமான தோற்றத்தையும் தரும். அதனை சரியாகப் பயன்படுத்தினால், சிறிய கண்ணிற்குப் புலப்படாத அலமாரிகள், அறைக் கதவுகள் ஆகியவற்றைக் கொண்டு மிகவும் வண்ணமயமாகவும், அறையிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்து ஒரு மயக்கும் தோற்றத்தைத் தரும். வேரென்னங்க போகும் போதும் வரும்போதும் ஒருமுறை உங்கள் அழகான முகத்தையும் தோற்றத்தையும் கூட அடிக்கடி பார்த்துக்கலாம்.

டைனிங் ரூமில் கலைநயமிக்க கண்ணாடி

டைனிங் ரூமில் கலைநயமிக்க கண்ணாடி

சாப்பிடுற இடத்துல கண்ணாடி என்னத்துக்குன்னு நீங்க கேக்குறது புரியுதுங்க. ஏன் கூடாது? ஏற்கனவே சொன்னதைப் போல, அது ஒரு சாதாரண உபயோகப் பொருள் மட்டுமல்ல. அது ஒரு கலைத் திறனை உங்களுடைய தோரணையை வெளிப்படுத்தும் பொருளும் கூட. கலைத்திறணுடன் கூடிய மரச்சட்டதினாலோ அல்லது நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய உலோகச் சட்டதினாலோ பிணைக்கப்பட்ட அழகான கண்ணாடியை உங்கள் டைனிங் ரூமில் வைப்பதன் மூலம் அறைக்கு அழகு சேர்வதுடன், உணவு உண்ணுதலையும் ஒரு நல்ல அனுபவமாக மாற்றும். கவனத்தை ஈர்க்கக் கூடியதாக உங்கள் டைனிங் ரூமில் எப்போது அழகைக் எடுப்பாகக் காட்டக்கூடிய ஒன்றாக இந்த கண்ணாடி இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Decorate Your Home With Mirrors

If mirrors fascinate you more than anything, here's how using mirrors differently can make your home look playful and classy at the same time.
Story first published: Saturday, September 12, 2015, 15:05 [IST]
Desktop Bottom Promotion