For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டினுள் சுற்றும் அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தும் உள் அலங்கார செடிகள்!!!

By Ashok CR
|

தற்போது மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இத்தகைய நிலை வெளியிடங்களில் மட்டுமின்றி, வீட்டினுள் கூட உள்ளது என்பது தான் ஒரு ஹைலைட். இதன் காரணமாக பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுதிணறல், நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்த உதவும் 10 செடிகள்!!!

ஆனால் வீட்டினுள் ஒருசில செடிகளை வளர்த்து வந்தால், வீடு அழகாக காட்டியளிப்பதோடு, சுத்தமான காற்றையும் சுவாசித்தவாறு இருக்கும். எனவே வீட்டில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கீழ்கூறிய செடிகளை வைத்து அலங்கரித்து, நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூங்கில் செடி

மூங்கில் செடி

உங்கள் வீட்டை சுற்றிய காற்று மண்டலத்தில் சுற்றித் திரியும் அனைத்து வகையான ரசாயனங்களையும் நீக்க, மூங்கில் பனை செடி சிறந்ததாக விளங்கும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம் அதிகமாக தேவைப்படாது. அதனால் அதனை நிழலாக இருக்கும் வீட்டு பகுதியிலேயே வளர்க்கலாம். அது கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஃபார்மல்டீஹைடு, ஸைலீன், க்ளோரோஃபார்ம் மற்றும் ஏராளமானவற்றை நீக்கும். அதனால் துணி துவைக்கும் அறை, ஹால் அல்லது படுக்கையறையில் வைப்பதற்கு உகந்த செடியாகும் இது.

ரப்பர் செடி

ரப்பர் செடி

இந்தியாவில் ரப்பர் செடிகள் மிகவும் பொதுவான ஒன்று. அவைகள் ஆரோக்கியமாக இருக்க, அவைகளுக்கு அடர்த்தியான ஒளி, தண்ணீர் மற்றும் உரம் அதிகமான அளவில் தேவைப்படும். கார்பன் மோனாக்சைடு, ஃபார்மல்டீஹைடு மற்றும் ட்ரைகுளோரோ ஈத்தலைன் போன்றவற்றை நீக்க இது சிறந்த தேர்வாகும்.

பாக்கு பனை (Areca Palm)

பாக்கு பனை (Areca Palm)

பாக்கு பனை கூட மூங்கில் பனையை போன்றதாகும். வில் வளைவுகளைப் போன்ற இலைகளை கொண்டுள்ள இந்த செடி, பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையிலும் அழகாகவும் காட்சியளிக்கும். காற்றில் ஈரப்பதத்தை கொண்டு வரவும் பென்சீன், கார்பன் மோனாக்சைடு, ஸைலீன், ட்ரைகுளோரோ ஈத்தலைன் மற்றும் ஃபார்மல்டீஹைடு ஆகியவற்றை நீக்கவும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

சாமந்திப்பூ செடி

சாமந்திப்பூ செடி

அழகிய சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.

பாம்பு செடி

பாம்பு செடி

பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால்டிஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Houseplants That Will Purify Your Home

Decorate your living spaces with the following plants to that will filter the air you breathe. Want to know more air purifying house plants? Take a look...
Story first published: Wednesday, July 8, 2015, 14:49 [IST]
Desktop Bottom Promotion