Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சமையலறையை விசாலமாக வைத்திருக்க 5 எளிதான வழிகள்!!!
எந்த ஒரு வீட்டிற்குமே சமையலறை தான் பிரதானம், முக்கியம். வாடகைக்கு வீடு தேடும் போதும் சரி, புதிதாக வீடு கட்டும் போதும் சரி, சமையலறை எப்படி இருக்க வேண்டும், அது எவ்ளோ பெரிதாக இருக்க வேண்டும் என்று நாம் கட்டாயம் பார்ப்பதுண்டு.
ஏன்? ஏனென்றால், அந்தச் சமையலறையில் தான் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவை நாம் சமைக்கிறோம். அதனால் அது எவ்ளோ சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் வசதியானதாகவும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் பெரும்பாலும் இந்தக் காலத்து வீடுகளிலோ அபார்ட்மெண்டுகளிலோ சமையலறைகள் எவ்வளவு சிறிதாக உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் இத்தகைய சிறிய சமையலறையில் சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை நாம் விசாலமாக மாற்றிக் கொள்ள முடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்...
குப்பைகளைக் கடாசுங்கள்
காலி கேன்கள், சோடா பாட்டில்கள் என்று நாம் எப்போதும் தேவையில்லாத பொருட்களைச் சேர்த்து வைப்பதில் 'ஆர்வம்' காட்டித் தான் வருகிறோம். அவை பெரும்பாலும் சமையலறையில் தான் அடைத்து வைக்கப்படுகின்றன. அவற்றை உடனே வெளியே தூக்கி எறியுங்கள். முடிந்தால் பழைய பேப்பர்காரனிடம் கிடைத்த விலைக்கு விற்றும் விடலாம்.
ஒன்றுக்கு ஒன்று மட்டுமே
சிலர் தங்கள் சமையலறையில் ஒரே பொருளை (உதாரணத்திற்கு, உளுந்து) பல சிறுசிறு டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பார்கள். இது தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். சிறு டப்பாக்களைத் தவிர்த்து, அப்பொருளை ஒரே பெரிய டப்பாவில் அடைத்துவிட்டால் நிறைய இடம் மிச்சமாகும்.
மேடை ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்
சமையல் மேடையில் தேவையே இல்லாமல் பலசரக்கு டப்பாக்களை அடைத்து வைக்கக் கூடாது. அவற்றிலிருந்து சமையலுக்குத் தேவையான அளவுக்கு எடுத்துவிட்டு, கையோடு அவற்றை அலமாரியில் வைத்துவிட வேண்டும்.
மாடுலார் கிச்சன் செட்
எளிதில் மடக்கி இழுக்கக்கூடிய சிறுசிறு இழுப்பறை அலமாரிகளை சமையல் மேடைக்குக் கீழே அமைக்கலாம். அவற்றில் சாப்பிடும் தட்டுக்கள், கரண்டிகள் உள்ளிட்ட அனைத்து சமையல் பாத்திரங்களையும் வைத்துக் கொள்ளலாம். தற்கால மாடுலார் கிச்சன்களில் இது சகஜம்.
ரகவாரியாகப் பிரியுங்கள்
பரிமாறுவதற்குத் தேவையான கரண்டிகள், சாப்பிடுவதற்குத் தேவையான ஸ்பூன்கள், ஃபோர்க்குகள் என ஒவ்வொன்றையும் ரகவாரியாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான நேரத்தில் அவற்றை எடுப்பதற்கு ஈஸியாகவும் இருக்கும்; இடத்தையும் அடைக்காமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications