Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டின் சமையலறையில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்!!!
உங்களிடம் செலவழிக்க நிறைய பணமிருந்து அதனை நீங்கள் உங்கள் கிச்சனில் முதலீடு செய்ய விரும்பினால் உங்கள் கிச்சனை மேம்படுத்த எண்ணற்ற வழிகள் உள்ளன.
அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றின் படி சமையலறையை அலங்கரித்தால், சமையலறை மிகவும் அழகாகவும், சமைப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.
சரி, இப்போது வீட்டின் சமையலறையில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

கிச்சன் கேபினெட்
கிச்சன் கேபினெட் கொண்ட சமையலறை இடத்தை குளிர்ச்சியுடனும் சுத்தமாகவும் கூடிய வகையில் தோற்றமளிக்க செய்கிறது. இது பாத்திரங்கள் இறைந்து கிடப்பதை தவிர்ப்பது மட்டுமன்றி, பல பிரிவுகளையும், அலமாரிகளையும் கொண்டு பொருட்களை சிறப்பாக ஒழுங்குபடுத்த உதவுகிறது.

மைக்ரோவேவ்
இது சமையல் செய்யும் நேரத்தை சேமிப்பதோடு மட்டுமன்றி, உணவுபொருட்களை சூடேற்றும் தொந்தரவையும் அகற்றுகிறது. இன்றைய நாட்களில் எண்ணற்ற இந்திய வகை சமையல் குறிப்புகளை இந்த முறையில் சமைக்க முடியும். இதனை தவிர்த்து வேறு பல வகை உணவு குறிப்புகளையும் மைக்ரோவேவ் முறையில் சமைக்க முடியும். இந்த முறையில் குறைவான அளவு எண்ணெயை பயன்படுத்தி உணவினை தயாரிக்க முடியும்.

ஃப்ரிட்ஜ்
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருளாகும். ஃப்ரிட்ஜ்ஜில் அதிக இடம் இருப்பின் அதில் அதிக பொருட்களை பாதுகாத்து சேமித்து வைக்க முடியும்.இதன் மூலம் அழுகும் தன்மையுள்ள அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு, நீங்கள் அடிக்கடி சந்தைக்கு செல்வதை குறைக்க முடியும்.

தி கிச்சன் வோக்
இந்த அற்புதமான சமையலறை பாத்திரம் சிறந்த தேர்வாகும். இதில் உணவு பொருட்களை சமைப்பது ஆனந்தமளிப்பதுடன் உறவினர்கள் முன்னிலையில் கர்வத்துடன் வெளிக்காட்டிக் கொள்ளவும் கூடிய பொருளாகும். இந்த பாத்திரத்தைக் கொண்டு சமைப்பவருக்கும், சமையலை நேசிப்பவருக்கும் நிச்சயம் பெருமை அளிக்க கூடியதாகும்.

கத்திகள் தொகுப்பு
சிறந்த கத்திகள் அடங்கிய தொகுப்பு நமக்கு தருவது உணவுப்பொருட்களை அற்புதமாக வெட்டும் அனுபவம். உணவுப் பொருட்களை சீவ உதவும் கத்தியிலிருந்து நமக்கு வெட்டும் பொருட்களின் தேவைக்கு ஏற்ப எண்ணற்ற கத்திகள் உள்ளன. சிறந்த‘ சமையல்காரர், தாம் பயன்படுத்தும் கத்தியை வாங்க அதிகம் செலவிடுவதே சிறந்தது. ஏனெனில் அவ்வகை கத்திகளே நீடித்து உழைக்கும்.

கட்டிங் போர்ட்
பிளாஸ்டிக்கினால் ஆன கட்டிங் போர்ட்டை தவிர்த்து விடுங்கள். சமையல் செய்யும் பொழுதை நீங்கள் உற்சாகத்துடன் கழிக்க விரும்பினால் மரத்தினால் ஆன கட்டிங் போர்ட்டை பயன்படுத்தி காய்கறிகளை வெட்டுவதே ஆனந்தமளிப்பதாகும்.

ஒயின் கிளாஸ் செட்
மெழுகுவர்த்தி ஒளியுடன் கூடிய உங்கள் இரவு விருந்துகள் சிறந்த ஒயினை உள்ளடக்கிய விருந்தாக அமைய வேண்டும். ஆகவே உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறந்த ஒயின் கிளாஸ்களை தேர்வு செய்து, அதனை சிறப்பான இடத்தில் அழகாக அடுக்கி வையுங்கள். உங்களது வீட்டில் சிறிய அளவிலான பார் இல்லையெனினும் கூட ஒயின் கிளாஸ்களை சேகரித்து வைத்திருப்பது, உங்கள் சமையலறையை வசீகரிக்கும் வண்ணம் அமைக்கும்.

சிறப்பான உணவருந்தும் பாத்திரங்கள்
அனைத்து பொருட்களையும் அதற்குரிய சிறப்பான இடத்தில் வைத்துவிட்டீர்கள் அல்லவா! இப்போது வீட்டில் உணவருந்தும் மனநிலையை தூண்டக்கூடிய சிறப்பான உணவருந்தும் பாத்திரங்கள் உங்கள் சமையலறைக்கு அவசியம் தேவை.

ஃபுட் ப்ராஸசர்
ஃபுட் ப்ராஸசர் சமையல் செய்யும் வழிமுறைக்கு உயர்ந்த தரத்தினை வழங்குகிறது. ஒருமுறை இதனை வீட்டிற்கு கொண்டு வந்த பின்னர், நீங்கள் எல்லையற்ற ஆனந்ததுடன் சமையல் செஃப்பின் நேர்த்தியை அடைவீர்கள். மேலும் இது சமையல் செய்ய நேரமும் சக்தியும் உங்களுக்கு இல்லாத போது உணவு பொருட்களை வெட்டுவதற்கும், நறுக்குவதற்கும் உதவி, உங்கள் சுமையை குறைக்கிறது.

கத்திகள், ஃபோர்க்குகள், ஸ்பூன்கள் அடங்கிய சிறந்த கட்லரி செட்
கட்லரி செட் விஷயத்தில் நீங்கள் நிச்சயம் தவறானதை தேர்ந்தெடுக்க விரும்பமாட்டீர்கள். சந்தையில் உயர்ந்த தரத்துடன் உங்களுக்கு விருப்பமான வடிவிலும், அளவிலும் எண்ணற்ற கட்லரி பொருள்கள் கிடைக்கின்றன. இறுதியில் இவை அனைத்தும் உணவு விஷயத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications