For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை அலங்கரிக்க பயன்படும் வித்தியாசமான லாந்தர் விளக்குகள்!!!

By Maha
|

பொழுதுபோக்குகள் என்றால் விளையாட்டு, பாட்டு கேட்பது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது போன்றவை மட்டும் இல்லை. அவற்றில் தோட்டம் அமைப்பது, தோட்டத்தை பராமரிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டை பலவாறு அலங்கரிப்பது போன்றவையும் அடங்கும். பொதுவாக வீட்டை அலங்கரிப்பதற்கு கலர் கலர் பேப்பர்கள், பூ ஜாடிகள், சுவருக்கு அழகான நிறத்தில் பெயிண்ட் அடிப்பது என்று தான் செய்வோம்.

ஆனால் வீட்டை லாந்தர் விளக்குகள் கொண்டும் அலங்கரிக்கலாம். லாந்தர் விளக்குகள் என்பது காற்றடித்தாலும் அணையாமல் இருக்கும். அக்காலத்தில் எல்லாம் டார்ச் விளக்குகள் இல்லை. ஆகவே அப்போது அவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளின் மேல் ஒரு கண்ணாடியை வைத்து தான், வெளிச்சத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மண்ணெண்ணெய் விளக்குகள் நாளடைவில் பல்புகள், டியூப் லைட்டுகளாக மாறின.

மேலும் மண்ணெண்ணெய் விளக்குகளை அடிப்படையாகக் கொண்டு தான், லாந்தர் விளக்குகள் பலவாறு வந்துள்ளன. இத்தகைய விளக்குகளைக் கொண்டு, இரவு உணவின் போது, விழாக்களின் போது ஒரு நல்ல அழகான சூழலை உருவாக்கலாம். இப்போது அந்த லாந்தர் விளக்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேப்பர் லாந்தர்கள்

பேப்பர் லாந்தர்கள்

இந்த மாதிரியான பேப்பர் லாந்தர்களை வீட்டில் வைத்தால், அது நன்கு பெரியதாக, வண்ணமயமான பலூன் போன்று பார்ப்பதற்கே அழகாக காணப்படும்.

விண்டேஜ் லாந்தர்கள்

விண்டேஜ் லாந்தர்கள்

இது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு பழமையான பாரம்பரிய லாந்தர் போன்று காணப்பட்டாலும், "ஓல்டு இஸ் கோல்டு" என்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.

செராமிக் லாந்தர்

செராமிக் லாந்தர்

செராமிக் என்பது ஒரு மெட்டீரியல். இத்தகைய செராமிக் வகையான லாந்தர்களை ஓவியம் வரையும் அறைகளில் தொங்கவிட்டால், வரைந்திருக்கும் ஓவியம், இதிலிருந்து வரும் வெளிச்சத்தில் இன்னும் அழகாக இருக்கும்.

கண்ணாடி லாந்தர்கள்

கண்ணாடி லாந்தர்கள்

கண்ணாடி லாந்தர்கள் புத்திசாலித்தனத்தால் வந்தவை. எப்படியெனில் வீட்டில் உள்ள தேவையில்லாத கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு, புத்திசாலித்தனத்துடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டவை என்பதாலேயே ஆகும்.

ஹாலோஜன் விளக்குகள்

ஹாலோஜன் விளக்குகள்

இந்த மாதிரியான விளக்குகள் இருட்டான இடத்தில் அதிகமான வெளிச்சத்தைத் தரக்கூடியவை. அதிலும் இதனை சமையலறை டேபிளில் வைத்தால், சமைப்பதற்கு எளிதாக இருப்பதோடு, சாப்பிடுவதற்கு போதிய வெளிச்சமானதாகவும் இருக்கும்.

பூசணிக்காய் லாந்தர்கள்

பூசணிக்காய் லாந்தர்கள்

வீட்டில் ஏதேனும் விழா நடக்கும் போது, வீட்டை வித்தியாசமாக அலங்கரிக்க வேண்டுமெனில், பூசணிக்காயின் உட்பகுதியில் உள்ள சதைப்பகுதியை நீக்கிவிட்டு, அதனுள் ஆங்காங்கு ஓட்டைகளை போட்டு, அதனுள் மெழுகுவர்த்தியை வைத்துவிட்டால், அழகான வெளிச்சத்தைப் பெறலாம்.

துணி லாந்தர்கள்

துணி லாந்தர்கள்

துணியால் செய்யப்பட்ட லாந்தர்கள் மிகவும் விலை அதிகமானது மற்றும் பார்ப்பதற்கே ஒரு கிராண்ட்டான அலங்காரம் போன்று இருக்கும். குறிப்பாக இந்த லாந்தர்களை பயன்படுத்தும் போது, குறைந்த பவர் கொண்ட பல்புகளை வைப்பது நல்லது. இல்லாவிட்டால், அதிகப்படியான பவரினால், துணியானது எரிந்துவிடும்.

பிளாஸ்டிக் லாந்தர்கள்

பிளாஸ்டிக் லாந்தர்கள்

இந்த வகையான லாந்தர்கள் பொதுவானவை. இவை மிகவும் விலை மலிவானவை. அதிலும் இவற்றில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் இருப்பதைப் பயன்படுத்தினால், மிகவும் அழகாக இருக்கும்.

வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி லாந்தர்கள்

வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி லாந்தர்கள்

நன்கு அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கண்ணாடி லாந்தர்களைப் பயன்படுத்தினால், அது வீட்டிற்கே ஒரு புதுவிதமான பொலிவைக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Lanterns To Decorate Your Home | வீட்டை அலங்கரிக்க பயன்படும் வித்தியாசமான லாந்தர் விளக்குகள்!!!

We can find various types of lanterns for decoration these days. While some types of lanterns still use candles or oil lamps for the vintage look, others have a modern appeal. Here are some ideas for using different types of lanterns to decorate your home.
Story first published: Thursday, May 9, 2013, 17:24 [IST]
Desktop Bottom Promotion