Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
நல்ல விசாலமான ஹாலை அலங்கரிக்க சில டிப்ஸ்...
வீட்டில் நுழைந்ததும் முதலில் இருக்கும் அறை தான் லிவிங் ரூம் எனப்படும் ஹால். மேலும் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிக்கக்கூடிய அறையும் இது தான். இத்தகைய அறையை அழகாக பிடித்தவாறு அலங்கரித்தால், மனம் அமைதியுடன் இருப்பதோடு, வீட்டிற்கு வருபவர்களிடம் பாராட்டும் பெறலாம். சிலரது வீட்டில், இந்த ஹால் மிகவும் பெரியதாக இருக்கும். அப்படி ஹால் பெரியதாக இருந்தால், அதனை சூப்பராக அலங்கரிக்க முடியும்.
ஆனால் பலருக்கு ஹாலை எப்படி அலங்கரிப்பதென்றே தெரியாது. ஆகவே அத்தகைய பெரிய ஹாலில் எவற்றையெல்லாம் வைத்தால், ஹாலானது மிகவும் அழகாக இருக்கும் என்று சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களையெல்லாம் வீட்டின் ஹாலில் வைத்தால், ஹால் பளிச்சென்றும், நிம்மதியைத் தரும் வித்தியாசமான இடமாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஹாலை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்று பார்ப்போம்.

ஓவியங்கள்
ஹாலின் சுவரில் மிகவும் அழகான ஓவியங்களை தொங்கவிட்டால், அது அந்த அறைக்கே வித்தியாசமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும், அந்த ஓவியத்தை பார்த்தே உங்களது ரசனையை புரிந்து கொண்டு பாராட்டுவார்கள்.

கண்ணாடிகள்
கண்ணாடிகளை வீட்டின் படுக்கை அறையில் மட்டும் தான் தொங்கவிட வேண்டும் என்பதில்லை. வீட்டின் ஹாலில் வைத்தாலும், நல்ல அழகைக் கொடுக்கும். அதிலும் மர வேலைபாடுகளுடன் கூடிய கண்ணாடியை வைப்பது சிறந்தது. அதுமட்டுமின்றி, வாஸ்துப்படி ஹாலில் கண்ணாடியை வைத்தால், திருஷ்டி கழியும் என்று சொல்வார்கள்.

நிறம்
ஹாலின் அழகை அதிகரிப்பதில் நிறங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எப்படியெனில் சரியான நிறத்தில் ஹாலில் வண்ணம் தீட்டினால், அது அந்த அறைக்கே கூடுதல் அழகை சேர்க்கும்.

வால்பேப்பர்
நல்ல ஆக்கப்பூர்வமான வால்பேப்பர்களைக் கொண்டும் ஹாலை அலங்கரிக்கலாம். அதிலும் இதனை ஹாலின் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் வைத்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக சரியான வால்பேப்பரை தேர்ந்தெடுத்தால் தான், அது அழகை அதிகரிக்கும்.

டேபிள்
பெரிய ஹாலின் நடுவே அழகான கண்ணாடி அல்லது மரத்தாலான டேபிளை வைத்தால் தான், அது அந்த ஹாலுக்கு முழுமையான அழகைக் கொடுக்கும். அதிலும் இதன் மேல் ஒரு பூ ஜாடியை வைத்தால், அது இன்னும் பிரமாதமாக இருக்கும்.

விளக்கு
நல்ல விசாலமான ஹாலாக இருந்தால், சரியான விளக்குகளைப் பொருத்தினால் தான், ஹால் பளிச்சென்றும், சிறந்ததாகவும் இருக்கும். அதிலும் தொங்கும் சர விளக்குகள் தான் பொருந்தமானதாக இருக்கும். ஏனெனில் இதுவே அறை முழுமைக்கும் வெளிச்சத்தை சிறந்த முறையில் கொடுக்கக்கூடியது.



Click it and Unblock the Notifications