Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
லிவிங் அறையை ஃபெங் சூயி முறைப்படி அலங்கரிக்க சில டிப்ஸ்...
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. ஒவ்வொருவருக்கும் வீடு என்பது இரண்டாம் உலகமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வீட்டை அலங்கரிப்பதில் ஒவ்வொருவரும் அவர்கள் ரசனைக்கேற்ப மெனக்கெடுவார்கள். மேலும் அப்படி அலங்கரிப்பதிலும் ராசி, வாஸ்து மற்றும் ஃபெங் சூயி போன்றவைகள் படி நடந்தால் ஆரோக்கியம், செல்வம், நிம்மதி என அனைத்தும் நம்மை தேடி வரும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
அதிலும் லிவிங் அறையை ஃபெங் சூயி முறைப்படி அலங்கரிக்க வேண்டுமானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் லிவிங் அறையில் தான் வீட்டில் உள்ள அத்தனை உறுப்பினரும் ஒன்று கூடி சந்தோஷமாக நேரத்தைக் கழிப்போம். அதனால் லிவிங் அறையை மனத்திற்கு நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்துமாறு அலங்கரிக்க வேண்டுமல்லவா? ஆகவே கீழ்கூறிய ஃபெங் சூயி குறிப்புகளை பின்பற்றினால் கண்டிப்பாக நேர்மறையான விளைவுகள் வீட்டில் பாய்ந்தோடும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
சூரிய உதயம், தண்ணீர் அல்லது மலைகளை கொண்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த படங்களை தொங்கவிட்டால், நம்பிக்கை பிரதிபலிக்கும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
தெளிந்த அமைதி மற்றும் சிரித்த முகத்துடன் உள்ளவர்களின் புகைப்படம் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
ஓடும் நீரை கொண்ட படங்கள் நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
வடிவியலான முக்கோணம், சதுரம், செவ்வகம் கொண்ட படங்கள், அழிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். ஆகவே அதனை தள்ளியே வைக்க வேண்டும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
கொடூரமான வன விலங்குகளின் படங்கள், உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். அப்படிப்பட்ட படங்களை மாட்ட வேண்டாம்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
சிவப்பு நிற படங்களை மாட்ட வேண்டாம். ஏனெனில் அது எரிச்சலை உண்டாக்கும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
ஆடுகளின் படம் நல்வாய்ப்பை சித்தரிக்கும்.

லிவிங் அறைக்கு ஏற்ற ஓவியங்கள்
நீந்தும் மீன்களின் படங்கள் ஆயுள் நீடிப்பதை சித்தரிக்கும்.

லிவிங் அறைக்கான செடிகள்
முக்கால்வாசி செடிகள், வாடாமல் இருக்கும் வரை தான் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும். கள்ளிச் செடி வகைகள் மற்றும் கூரிய இலைகளை கொண்ட செடிகளை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. ஆகவே பிளாஸ்டிக் மற்றும் செயற்கை செடிகள் பயன்படுத்தினால், எந்த ஒரு நல்ல விளைவையோ அல்லது தீய விளைவையோ ஏற்படுத்தாமல் நடுநிலையாக வைத்திருக்கும்.

லிவிங் அறைக்கான கம்பளங்கள்
லிவிங் அறையில் எந்த திசையில் கம்பளங்களை விரிக்கப் போகிறீர்களோ, அதற்கேற்றார் போல வண்ணத்தை முடிவு செய்யுங்கள். ஒருவேளை முழு அறையையும் மூடுமாறு கம்பளம் தேர்வு செய்தால், அந்த அறையின் திசையை பொறுத்து வண்ணத்தை தீர்மானிக்க வேண்டும்.

பூனைகளை வளர்த்தால்...
பூனைகள் என்பது கிழக்கு திசையை குறிப்பதால், அதன் படுக்கை கருப்பு, ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். சிவப்பு நிறம் என்பது தவறான தேர்வு. மேலும் வாசற்கதவு வடகிழக்கை நோக்கி இருந்தால், தெற்கு அல்லது வடமேற்கு திசைகள் பூனையை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைத்திருக்கும். தென்மேற்கு மற்றும் வடக்கு திசைகள் பூனைகளுக்கு ஆகாத திசைகளாகும்.

நாய்களை வளர்த்தால்...
நாய்கள் பஞ்ச பூதத்தில் உள்ள நிலத்தை குறிக்கும். அதனால் பழுப்பு அல்லது மஞ்சள் நிற படுக்கையை அதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். வெண்ணிற படுக்கைகள் அதனை நோய்வாய் படச் செய்யும். வீட்டின் வாசற்கதவு தென்மேற்கு, வடகிழக்கு அல்லது தெற்கு திசையை நோக்கி இருந்தால், நாய்கள் ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருக்கும். இதுவே கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையை நோக்கி இருந்தால், அது நோய்வாய்படும்.



Click it and Unblock the Notifications