Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பேச்சுலர்களுக்கான.. வீட்டை பட்ஜெட்டிற்குள் அலங்கரிக்க சில டிப்ஸ்...
வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் திருமணமாகாத ஆண்களாக இருந்தால் உங்கள் வீட்டை பராமரிக்க நேரம் அதிகம் தேவைப்படும். பெரும்பாலான நபர்கள் தங்களின் வீட்டை திருமணமாகாத ஆண்களுக்கு வாடகைக்கு கொடுக்காமல் இருப்பதற்கு இதுவே முதல் காரணமாகும். ஏனெனில் அவர்கள் தங்கள் வேலைகளுக்கு நடுவே வீட்டை சுத்தம் செய்வதில் நாட்டம் காட்ட மாட்டார்கள். மேலும் பலர்க்கு தான் வசிக்கும் சிறிய அறையை சரியாக பராமரிக்க தெரிவதில்லை.
தற்போதைய தலைமுறையில், பெரும்பாலான திருமணமாகாத ஆண்கள் தங்கள் மேற்படிப்பிற்காகவும் வேலைக்காகவும் ஆசைப்பட்டு தங்களது சொந்த ஊரை விட்டு வந்து விடுகின்றனர். இப்பொழுதுள்ள திருமணமாகாத ஆண்கள் தனித்து இருக்கவே ஆசைப்படுகின்றனர். இடம் விட்டு இடம் மாறி வேலைப் பார்க்கவும் விரும்புகின்றனர். திருமணமாகாத ஆண்கள் தங்கள் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வேறு இடத்திற்கு வரும் போது, தங்களின் சேமிப்பையும் தங்களது பெற்றோரின் பணத்தையும் சிக்கனமாகவே செலவு செய்ய விரும்புகின்றார்கள். அதனால், நீங்கள் இருக்கும் அல்லது தங்கும் இடம் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கிய சிறிய இடத்தைதான் தேர்வு செய்யவேண்டும்.
இதனால் அந்த சிறிய இடத்தை மாடர்னாகவும் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்பதல்ல. உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் அலங்காரப் பொருட்களும் இடத்தை சேமிக்கும் பொருட்களும் நிறையவே இருக்கின்றன. அதனால் நீங்கள் இருக்கும் இடத்தில் தேவையில்லா பொருட்கள் மற்றும் பர்னீச்சர்களை தவிர்ப்பது நல்லது. இவற்றை தவிர்த்து உங்கள் நண்பர்களோடு அமர்ந்து உங்கள் விருப்பமான விளையாட்டை பார்த்து ரசிப்பதற்கு ஒரு அறை உருவாக்கலாம்.
உங்கள் பர்னீச்சர்களை தேர்வு செய்யும் போது அவை இடத்தை சேமிக்கும் பொருட்களாகவே தேர்வுசெய்யுங்கள். பலபயன்கள் கொண்ட பர்னீச்சர்களான சோபா கம் பெட், டைனிங் கம் படிக்கும் மேஜை போன்ற ஏராளமானவை இருக்கின்றன. இவை நீங்கள் வசிக்கும் அறையை பெரிதாக்கி நேர்த்தியாகக் காட்டும். நீங்கள் திருமணமாகாத ஆணாக இருப்பதால் உங்கள் சமையலறை தேவைகள் மற்ற சமையலறைகளில் இருந்து மாறுபட்டே இருக்கும். அதனால் உங்கள் சமையலறை தேவைகளை நீங்களே திட்டமிடுங்கள்.
இதோ திருமணமாகாத ஆண்களுக்கான வீட்டை சிக்கனமாக அலங்கரிக்கும் டிப்ஸ்...

பர்னீச்சர்கள்
இவை உங்கள் இடத்தை பெருவாரியாக ஆக்கிரமிக்கும் பொருளாகும். அதனால் சிறிய பர்னீச்சர்களாகவும் பல பயன்கள் தரும் பர்னீச்சர்களான சோபா கம் பெட், ஸ்டடி கம் டைனிங் மேஜை போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். இவைகள் தற்போது டிரெண்டியாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

சாதனங்கள் (Gadgets)
பேச்சுலர்கள் அறை என்றாலே சிதறிக் கிடக்கும் பொருட்கள் தான் முதலில் தென்படும். எனினும், இப்பொழுதுள்ள அதி நவீன டெக்னாலஜி கொண்டு பல பயன்கள் தரும் சாதனங்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்யும். ஸ்மார்ட் டிவி வாங்கி சுவற்றில் மாட்டி இடத்தை சேமித்து உங்கள் அறையை மேலும் நேர்த்தியாக்குங்கள்.

தரைகள்
நல்ல தரையை பெற்றிருந்தாலும், தரை விரிப்பான் போன்றவற்றிக்கு செலவு செய்யவேண்டும். பாச்செலராக இருப்பதால் சுலபமான வழியையே தேர்ந்தெடுங்கள். மென்மையான விரிப்பாங்களை வாங்கி உங்கள் சோபாவில் போட்டுவிட்டால் பார்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாது உபயோகிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

சமையலறை
வேலைக்கு செல்லும் அல்லது படிக்கும் பேச்சுலராக இருப்பதால் உங்கள் சாப்பிடும் பழக்கங்கள் வேறுப்பட்டே இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ சாப்பிடுவதால், வீட்டில் சமைப்பது குறைவாகத் தான் இருக்கும். அதனால், தேவையற்ற பொருட்கள் தேங்கி இருக்காமல், குறைவான சமையலறை பொருட்களை உபயோகியுங்கள்.

ஏஸ்தடிக் (Aesthetic)
குறைவான பொருட்களே உங்கள் வீட்டை அழகாகக் காட்டும். இதனால் தேவையில்லா அலங்கார பொருட்கள் வாங்குவது குறைக்கப்படும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மீது தேவையில்லா பொருட்களை வைத்து காற்றையும் ஒளியையும் தடுக்காதீர்கள்.

சுவர்கள்
அதிக விலையில் வண்ணம் தீட்டுவது முடியாதது என்றாலும், உங்கள் தகுதிக்கு ஏற்ப நீங்களே வண்ணம் தீட்டி உங்கள் கைவினை பொருட்களை மாட்டலாம். அல்லது, உங்கள் மொபைல் கமெராவில் அழகான படங்களை கிளிக் செய்து அதை பிரேம் செய்து மாட்டி உங்கள் அறையை மேலும் அழகாகக் காட்டலாம்.

விளக்குகள்
அலங்கார விளக்குகளும் அடம்பர விளக்குகளும் பாச்செலர் அறைகளுக்கு தேவையே இல்லை. யுடியுப் உள்ள டூ இட் யுவர்செல்ப் விடியோக்களை பார்த்து நீங்களே தேவையற்ற எக்ஸ் ரே ஷீட்களை பயன்படுத்தி தொங்கும் விளக்குகள் செய்யலாம். இதனால் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கிய நயமிக்க அறையை அலங்கரிக்கலாம்.



Click it and Unblock the Notifications