Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
குளிர்காலத்தில் வீட்டை அலங்கரிப்பதற்கான சில அசத்தலான ஐடியாக்கள்!!!
குளிர்காலங்களில் நமது உடல் நலத்தை பராமரிப்பது மட்டுமன்றி நமது வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். குளிர்காலங்களில் நம்மை எவ்வாறு பல தொற்றுநோய்கள் தாக்குகின்றதோ அதேபோல் நமது வீட்டில் உள்ள பொருட்களும் இந்த குளிர்காலத்தால் பாதிப்படைகின்றது. அதனால், நமது வீட்டில் உள்ள பொருட்களில் சிறிது மாற்றங்கள் செய்து அவற்றை பாதுகாக்கலாம்.
குளிர்காலங்களில் ஏற்படும் வறண்ட குளிர்ந்த வானிலையால் நாம் அனைவருமே வெப்பமான இடத்தில் இருப்பதற்கே விரும்புவோம். இந்த குளிரை போக்குவதற்கு நமது வீட்டை சற்று வெப்பமாக மாற்றுவதற்கு முயற்சிக்கலாம். இதற்கு நாம் நமது வீட்டில் சிறிதளவு மாற்றங்களை செய்து நமது வீட்டை குளிர்காலத்திற்கு ஏற்புடையதாக மாற்றலாம். வரவிருக்கும் குளிர்காலத்தில் இந்த வீட்டு அலங்கார ஐடியாக்களை பின்பற்றி உங்கள் வீட்டை வெப்பமாக வைக்கலாம்.
குளிர்காலங்களில் வீட்டின் வெளியே வெயில் அடித்தாலும் வீட்டின் உள்ளே சில்லென்று தான் இருக்கும். உங்கள் வீட்டின் சுவற்றில் இருக்கும் வண்ணங்களை மாற்றி உங்கள் வீட்டை வெப்பமாக வைக்கலாம். உங்கள் வீட்டின் சோபா மற்றும் இதர பார்நீச்சர்களின் உறைகளை கம்பளி உறைகளாக மாற்றிவிடலாம். இது குளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும். உங்கள் கம்பளிகளையும் விரிப்பான்களையும் பரணிலிருந்து எடுப்பதற்கான தருணம் இதுதான்.
உங்கள் வீட்டு ஜன்னல்களில் இருக்கும் மெல்லிய திரைச்சீலைகளை தடிமனான திரைச்சீலைகளுக்கு மாற்றிவிடுவதே சிறந்ததாகும். குளிர்காலங்களில் உங்கள் வீட்டின் சோபாக்களில் இருக்கும் தலையணைகளின் உறைகளை குளிருக்கு தகுதாற்போல் கம்பளி உறைகளாக மாற்றியமைக்கலாம். உங்கள் வீட்டு பார்நீச்சர்களை சுவர் மற்றும் ஜன்னல் அருகில் இருந்து வீட்டின் நடுப்பகுதிக்கு நகர்த்தி வைக்கலாம்.

வண்ணங்கள்
வெளியில் இருக்கும் குளிரை போக்குவதற்கு உங்கள் வீட்டின் உள்ளே இருக்கும் வண்ணங்களை மாற்றி அமைத்தால், உங்கள் வீடு வெப்பமாக இருக்க உதவும். ரோஸ், கிரே, பச்சை அல்லது வெள்ளை நிறம் கலந்த சாக்லேட் நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.

பயர் பிளேஸ் (வெப்பமாக்கும் அடுப்பு)
உங்கள் ஹாலில் உள்ள இந்த இடத்தை சுத்தம் செய்து தயார் படுத்துவதற்கான நேரம் இதுதான். இந்த இடத்தை பூந்தாழிகள் அல்லது வண்ணமிகு நிறங்களான ஆரஞ்ச், அரக்கு அல்லது மஞ்சள் நிறம் கொண்ட படங்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

பர்னீச்சர்களை மாற்றியமைத்தல்
இந்த குளிர்காலத்தை சமாளிக்க உங்கள் வீட்டில் உள்ள சோபாக்கள் மற்றும் பர்னீச்சர்களை மாற்றியமைக்கலாம். உங்கள் பர்னீச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து விலக்கி வைக்கலாம். அவற்றை உங்கள் வீட்டின் நடுப்பகுதியிலோ அல்லது பயர் பிளேஸ்(வெப்பமாக்கும் அடுப்பு) அருகிலோ நகர்த்தி வைக்கலாம்.

ஜன்னல் திரைச்சீலைகள்
இந்த குளிர்காலங்களில் ஜன்னல் திரைச்சீலைகள் பொருத்தவரையில், மெல்லிய திரைச்சீலைகளை மாற்றி கனரக திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். இது உங்கள் அறைக்கு மேலும் வெப்பத்தை அளிக்கும்.

உறைகள்
உங்கள் வீட்டில் உள்ள தலையணை மற்றும் சோபாக்களின் சாதாரண உறைகளை மாற்றி கம்பளி உறைகளை பயன்படுத்தலாம். இது குளிர்காலங்களில் நீங்கள் அவற்றில் உட்காரும் போது, உறங்கும் போதும் வெப்பமாக இருப்பதற்கு உதவும்.

அதிக மெத்தைகள்
உங்கள் படுக்கையில் அதிக மெத்தைகளை பயன்படுத்துங்கள். சாதாரண நாட்களில் பயன்படுத்தும் மெத்தை மீது மேலும் சில மெத்தைகளை சேர்த்து அதில் உறங்கலாம். பரணில் இருக்கும் கம்பளிகளை எடுத்து பயன்படுத்தி குளிரை போக்கலாம்.

சாப்பாட்டு மேஜையை அலங்கரித்தல்
உங்கள் சாப்பாட்டு மேஜை மற்றும் இருக்கைகள் மீது கம்பளத்தை விரித்து வெதுவெதுப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் சாப்பிடும் நேரங்களில் உங்கள் மேஜை மீது விலை மலிவான மெழுகுவத்தி ஸ்டாண்ட் அல்லது கண்ணாடி மூடிகள் மீது மெழுகுவத்திகளை ஏற்றி வெப்பமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

உட்காரும் இருக்கைகள்
உங்கள் ஹாலில் இருக்கும் இருக்கைகளை வெப்பமான நிறங்களால் அலங்கரியுங்கள். புத்தகங்கள் படிப்பதற்கு ஏதுவான வெளிச்சமான விளக்குகளை தேர்வு செய்யாலாம். உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு உங்கள் ஹாலில் சிவப்பு, அரக்கு, ரோஸ், ஆரஞ்ச் போன்ற நிறங்களாலான பொருட்களை வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications