Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
விருந்தினர்களை கவரும் திரைகள் ரசனையாக இருக்கட்டும்!

பட்ஜெட் போடுங்க
தொங்கு திரைகளைத் தேர்வு செய்யும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலில் சிந்திக்கவேண்டியது நமது பட்ஜெட் எவ்வளவு? மேலும் நாம் எவ்வளவு காலம் இந்தத் திரைகளைப் பயன்படுத்துவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வது நலம். முழு நீஅளமாக இருக்கவேண்டுமா, ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கவேண்டுமா, விலை அதிகமான துணியா அல்லது சாதாரண துணியா என்பதை முடிவு செய்யவேண்டும்.
விருந்தினர்கள் அடிக்கடி வருகின்றனர் என்றால் அவர்களை கவர தங்கள் வீடுகளில் ஆடம்பரமான தொங்கு திரைகளை அமைக்கலாம். அல்லது சாதாரணமாக மறைக்க மட்டுமே போதுமானது என்றால் சாதாரணத் திரைகளை வாங்கலாம்.
டிசைன், ஸ்டைல்
வீடுகளின் அமைப்பைப் பொருத்து டிசைன், ஸ்டைல் ஆகியவற்றைத் தீர்மானிக்கவேண்டும். நிறம் அவசியமாக பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்று. சுவரின் நிறம், தரையின் நிறம், ஃபர்னிச்சர் நிறத்திற்கு ஒத்து வரும் திரைகளே அழகு சேர்ப்பதாக அமையும்.
வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான நிறம், ஸ்டைலில் தொங்கு திரை தேர்வு செய்பவர்கள் அரிது. வரவேற்பரை, உணவருந்தும் அறை, படுக்கை அறை, என்று அறைகள் அதிகம் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே தொங்கு திரையைத்தான் தேர்வு செய்பவர்கள் அதிகம். அப்படி எடுத்தாலும் எல்லா அறைக்கும் பொதுவாக நன்றாகத் தோன்றும் துணியைத் தேர்வு செய்யவும்.
ஓவியங்கள் அழகூட்டும்
வீடானது நவீன காலக் கட்டிடம் என்றால் பிளைனாகவோ அல்லது நவீனச் ஓவியங்கள் தீட்டப்பட்ட திரைகளை வாங்கலாம். அதேசமயம் பழங்கால கட்டிடங்கள், உயரமான மேற்கூரைகள் உள்ள வீடு என்றால் பழங்கால ஓவியங்கள் உள்ள தொங்கு திரைகளை வாங்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் துணியின் மாதிரியை வாங்கி வீட்டின் சுவரில் வைத்துப் பார்க்கவும். இதன் மூலம் நல்ல திரைகளை தேர்ந்தெடுக்க முடியும்.
உங்கள் ஜன்னல் கம்பிகள் என்ன டிசைனில் இருக்கிறது என்பதைப் பொறுத்து திரைகளை வாங்கவும், ஜன்னல் கம்பிகள் பூ டிசைனில் இருந்தால் பூ போட்ட டிசைன் திரை பொருத்தமாக இருக்கும். வெறும் கம்பியாக இருந்தால் பிளைன் திரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications