Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ரசனையோடு செயல்பட்டால் நம் வீடு அழகாகும் !

புத்துணர்ச்சி தரும் மலர்
வீட்டின் நுழைவு வாயிலின் வலது மூலையில், டெரகோட்டா உருளியிலோ, அல்லது வட்டமான பாத்திரத்திலோ, தண்ணீர் நிரப்பி, சிறு பூக்களை அடர்த்தியாய் பரப்பி விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் போதே மனதிற்கு புத்துணர்ச்சி தரும்.
இயற்கை காட்சிகள்
வீட்டின் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். அது உற்சாகத்தை தரும். ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.
சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம். டீபாய் மேல் சின்னதாய் ஒரு பூ ஜாடி வைத்து நம் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களை அன்றாடம் பறித்து அலங்கரிப்பது வீட்டினை உயிரோட்டமுள்ளதாக மாற்றும்.
அழகான பெயிண்டிங்
எம்ராய்டரி செய்த கர்ச்சிப் துணிகளை ப்ரேம் போட்டு சுவர் அலங்காரமாய் மாட்டலாம். அழகான பெயிண்டிங் உள்ள காலண்டர்களை தூக்கிப் போடாமல் ப்ரேம் போட்டு டைனிங் ரூம், ஹாலில் மாட்டலாம். செலவு அதிகம் ஏற்படாது. தரை அழுக்காகமல் இருக்க வினைல் சீட்களை ஒட்டலாம். குறைவான விலையில் நிறைவான அழகை பெறலாம்.
சமையலறை அழகு
சமையலறை அலமாரியில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி தேவையான சாமான்களை நிரப்புங்கள். மிக்சி க்ரைண்டருக்கு மேடை மூலையில் இடம் கொடுங்கள். க்ரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளின் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.
டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது. பூஜை அறைக்கு என்று இடம் இல்லாதவர்கள் சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த தேக்குக்கதவோடு பூஜைக்கான இடம் அமைக்கலாம்.
படுக்கையறை அழகு
படுக்கை அறையின் அழகை கெடுப்பது ஒழுங்காக வைக்கப்படாத தலையணை, போர்வைகள்தான். இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம். இடத்தையும் அடைக்காது. வீட்டில் கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருந்தாலே அதுவே தனி அழகுதான்.



Click it and Unblock the Notifications