Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க பழைய தங்க நகைகளை புதுசு போல பளபளப்பாக மாத்தணுமா? செலவே இல்லாத இந்த ஈஸியான வழியை ட்ரை பண்ணுங்க...!
தங்கத்தின் விலை தற்போது மிடில் கிளாஸ் மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தங்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. எவ்வளவுதான் விலை உயர்ந்ததாக இருந்தாலும், நாம் அதை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் இறுதியில் தங்கம் என்பது ஒரு உலோகம்தான். எனவே நாளடைவில் அது தனது பளபளப்பை இழக்கும்.
தங்க நகைகள் பளபளப்பை இழக்கும் போது அதை மீண்டும் புதிதாக மாற்ற நிச்சயம் கடைகளுக்குத்தான் செல்ல வேண்டும், ஆனால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்களின் பழைய தங்க நகைகளை பளபளக்கும் புதிய நகைகளாக மாற்றலாம். உண்மைதான் சில குளியலறை மற்றும் சமையலறை பொருட்களைக் கொண்டு, உங்கள் தங்க நகைகளை புதியது போல பிரகாசிக்கச் செய்யலாம். இந்த பதிவில் பழைய தங்க நகைகள் புதியது போல மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமான பாலிஷை வைத்து தொடங்குங்கள்
அடிக்கடி பாலிஷ் செய்வதன் மூலம் தங்க நகைகள் பிரகாசமாக இருக்கும். உங்கள் தங்க நகைகளை புதியது போல வைத்திருக்க வேண்டியதெல்லாம் காலப்போக்கில் சேரும் தூசு மற்றும் அழுக்குகளை அகற்றுவதுதான். தங்கத்தை மென்மையாக கையாளவும் மற்றும் மிகவும் ஜாக்கிரதையாக வட்ட இயக்கங்களில் தங்க நகைகளின் மேற்பரப்பை தேய்க்கவும். அரிப்பு அல்லது சேதத்தைத் தடுக்க அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
விடாப்பிடியான கீறல்களை நீக்கவும்
தங்கம் என்பது அன்றாட தேய்மானத்தை எதிர்க்கூடிய ஒரு உறுதியான மற்றும் விலைமதிப்பற்ற உலோகம். இருப்பினும், தங்கத்தால் கீறல்களை எதிர்க்க முடியாது. வெதுவெதுப்பான சோப்பு நீரில் சிறிது பேக்கிங் சோடாவைச் சேர்த்து மென்மையான துணியை அதில் நினைக்கவும், இந்த துணியை கீறலின் மீது மெதுவாக தடவினால், தங்க நகைகளின் பளபளப்பை மீண்டும் பெறலாம்.
மென்மையான சோப்பை பயன்படுத்தவும்
தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான மிகவும் எளிய வழி இது. சில துளிகள் மென்மையான பாத்திர சோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, மென்மையான பிரஷ் அல்லது துணியைப் பயன்படுத்தி நகைகள் மீது மெதுவாக தேய்க்கவும். இதை அடிக்கடி செய்தால் உங்கள் தங்க நகைகள் மீண்டும் பிரகாசிக்கும்.
எப்போதும் சூடான நீரை பயன்படுத்தவும்
தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான விரைவான மற்றும் எளிதான வழி வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதுதான். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உங்கள் தங்க நகைகளை கவனமாகப் போடுங்கள். அதை சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் மென்மையான பிரஷைப் பயன்படுத்தி அகற்றவும். வெதுவெதுப்பான நீர் அழுக்கு மற்றும் மாசுகளைத் தளர்த்த உதவுகிறது, இதனால் நகைகள் பளபளப்பாக இருக்கும்.
அம்மோனியா பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
ப்ளீச் அல்லது அம்மோனியா போன்ற கடுமையான இரசாயனங்களை தங்கம் மீது பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மேலும் தங்கத்தை ஒருபோதும் மிகவும் கடினமாக தேய்க்க வேண்டாம். கடுமையான துணியில் ப்ளீச் சேர்த்து கடினமாகத் தேய்ப்பது தங்கத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தும். கண்ணாடிகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மென்மையான லினன் துணிகளை பயன்படுத்துவது நல்லது, குளியலறைகள் அல்லது ஈரப்பதமான இடங்களில் நகைகளை சேமிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் ஈரப்பதம் காலப்போக்கில் நகைகளை சேதப்படுத்தும்.



Click it and Unblock the Notifications
