Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
தம்பதிகளே! நீங்க நெருக்கமாவும் மகிழ்ச்சியாவும் இருக்க பெட் ரூமில் இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லாத நபரே இல்லை எனலாம். அதுவும் தம்பதிகளின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளும் சிரமங்களும் தொடர்ந்து ஏற்படலாம். எல்லா தம்பதிகளின் வாழ்க்கையிலும் அவர்களின் பாலியல் அல்லது நெருக்கமான வாழ்க்கை சோகமாகவோ, மெதுவாகவோ அல்லது அமைதியாகவோ இருக்கும் ஒரு காலம் வரும்.
இந்த நிலைமையை சரிசெய்ய, தம்பதிகள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனால், வாஸ்து சாஸ்த்திரம் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நெருக்கமாகவும் இருப்பதற்கான சிறந்த வழிகளை கூறுகிறது.

படுக்கையறைக்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படும் படுக்கையறை வாஸ்து குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
படுக்கையறையின் திசை
வீட்டில் படுக்கையறை எங்கு அமைந்திருக்கிறது என்பதில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையின் சந்தோஷமும் அடங்கி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், படுக்கையறை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். ஏனெனில் இது உறவுகளில் அமைதி நிலவவும், மகிழ்ச்சியாய் இருக்கவும், உறவுகளின் வலிமையை மேம்படுத்தவும் உதவுகிறது.
படுக்கை இடம்
கட்டில் அல்லது படுக்கையானது அறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி தலை வைத்து படுக்கும் இடமாக இருக்க வேண்டும். இது தம்பதியினரின் வாழ்க்கையில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது. படுக்கையை பொறுத்தவரை, வாஸ்து படி, மர படுக்கைகள் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.
உலோகம் மற்றும் இரும்பு படுக்கைகள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதாக கூறப்படுகிறது. படுக்கையைச் சுற்றியுள்ள இந்த எதிர்மறை ஆற்றல் மன அழுத்தம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, உலோக அல்லது இரும்பு படுக்கைகளை விட மர படுக்கைகளை வாங்குவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
நிறங்கள்
இளஞ்சிவப்பு, நீலம், பச்சை மற்றும் லாவெண்டர் போன்ற மென்மையான மற்றும் வெளிர் வண்ணங்கள் படுக்கையறைக்கு ஏற்றதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அமைதியான சூழ்நிலையை மேம்படுத்துகின்றன. ஆதலால், உங்க படுக்கை அறையின் ஸ்கீரின், படுக்கை மற்றும் தலையணையின் கவர்களை வெளிர் நிறங்களில் பயன்படுத்துங்கள். பொதுவாக வெளிர் நிறங்கள் நம் மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்.
விளக்கு
படுக்கையறையில் மென்மையான மற்றும் சூடான விளக்குகள் பொருத்தப் பரிந்துரைக்கப்படுகின்றன. கடுமையான அல்லது பிரகாசமான விளக்குகள் பதற்றம் மற்றும் எதிர்மறையை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அறையின் விளக்குகள் பொதுவாக நம் மனநிலையோடு சம்பந்தப்பட்டுள்ளதாக இருக்கும்.
கண்ணாடிகள்
படுக்கையறையில் கண்ணாடிகள் பொறுத்தப்படுவதைத் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவை நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை சீர்குலைத்து பதற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் அறையில் ஒரு கண்ணாடியாவது வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களின் படுக்கை கண்ணாடியில் பிரதிபலிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அலங்காரம்
படுக்கையறையை அலங்கரிப்பது என்பது பொதுவானது. ஆனால், அந்த அலங்காரத்தை குறைந்தபட்சமாகவும் அழகாகவும் வைத்திருங்கள். ஏனெனில், படுக்கையறையில் உள்ள பல பொருள்கள் குழப்பம் மற்றும் இடையூறுகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்
படுக்கையறையில் தொலைக்காட்சி, கணினிகள் அல்லது தொலைபேசிகள் போன்ற மின்னணு சாதனங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும், அவை தூக்க முறைகளில் தலையிடுவதாகவும், தேவையற்ற கவனச்சிதறல்களை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications


