Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
வாஸ்து படி இந்த 2 நிறங்களில் ஒன்றில் உங்க வீட்டின் கதவு இருந்தால் உங்க வாழ்க்கையில் நிம்மதியே இருக்காதாம்...!
ஒரு வீட்டின் வாஸ்து சாஸ்திரம் குடும்ப உறுப்பினர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் உங்கள் வீட்டின் நுழைவாயில் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். உங்கள் வீட்டின் நுழைவு வாயில் உங்கள் வீட்டில் உள்ள கதவு மற்ற கதவுகளை விட பெரியதாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
வீட்டின் பிரதான கதவு உங்கள் வீட்டின் வாஸ்துவை நிர்ணயிப்பதில் மிகவும் முக்கியமானதாகும். கதவும் எப்பொழுதும் வீட்டிற்குள் திறக்கும்படி இருக்க வேண்டும். ஆற்றல்களை சமநிலைப்படுத்தவும், நேர்மறையை ஈர்க்கவும், நீங்கள் வாஸ்து படி பிரதான கதவின் நிறத்தை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சரியான கதவு நிறத்தை தேர்வு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கதவின் நிறம்
பிரதான கதவுக்கு பொருத்தமான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது அதன் திசையைத் தேர்ந்தெடுப்பது போலவே முக்கியமானது. உங்கள் வீட்டில் வசிக்கும் எவரின் தலைவிதியையும் அது தீர்மானிக்கும். உங்கள் வீட்டின் பிரதான கதவுக்கு ஒரு வண்ணத்தை முடிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு நிறத்தின் முக்கியத்துவத்தையும் பதெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சில்வர் நிறம்
உங்கள் வீட்டு வாசல் தென்கிழக்கு திசையில் இருந்தால், அது செல்வத்துடன் தொடர்புடையது. இது நெருப்பு உறுப்புக்கு சொந்தமானது, அதை சமப்படுத்த, நீங்கள் சில்வர் நிற கதவைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அது தைரியத்தையும், செல்வத்தையும் கொடுக்கும்.
வெள்ளை
தனி வீடு அல்லது ப்ளாட்களுக்குபிரதானசரியான கதவின் நிறத்தை தேர்வு செய்யும் போது வெள்ளை நிறம் சிறந்த தேர்வாக இருக்கும். வாஸ்து படி பிரதான வாயிலின் வெள்ளை நிறம் அமைதியைக் குறிக்கிறது, இது குடும்பத்தில் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
பச்சை
உங்கள் வீட்டின் வாயில் வடக்கு திசையில் இருந்தால், அது புதிய வாய்ப்புகளை குறிக்கிறது. உங்கள் வீட்டின் நுழைவாயிலில் பச்சை நிற பிரதான கதவைச் சேர்த்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும்.
ஸ்கை ப்ளூ
வாஸ்து படி ஸ்கை ப்ளூ நிற கதவு அதன் மங்களம் மற்றும் அமைதியான தன்மைக்கு பெயர் பெற்றது. உங்கள் வாசல் மேற்கு திசையில் இருந்தால், அது லாபத்தை தரக்கூடிய கிரகத்திற்கு சொந்தமானது. வணிகத்தில் சிறந்த லாபம் பெற ஸ்கை ப்ளூ சரியான நிறமாகும்.
பிங்க்
தெற்கு திசை செல்வம் மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடையது. தங்கள் செல்வத்தை அதிகரிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு போன்ற தீ உறுப்பு நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், வாஸ்து படி பிரதான கதவின் இளஞ்சிவப்பு நிறம், உங்கள் வீட்டிற்கு அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்தும்.
மஞ்சள்
உங்கள் வீட்டின் பிரதான கதவு வாஸ்து குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் நுழைவு வாயில் தென்மேற்கு திசையில் இருந்தால், உங்கள் வீட்டின் கதவு மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகளில் அன்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
அடர் நீலம்
இந்த நிற கதவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எனவே இது உங்கள் வீட்டிற்குள் அதிக எதிர்மறை ஆற்றலை பரப்பும். அடர் நீலத்தின் நுழைவு வாயில்கள் கவர்ச்சிகரமானதாகத் தெரியாது மற்றும் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தையும் ஏற்படுத்தும்.
கருப்பு
வாஸ்துவில் கருப்பு நிறம் பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பங்கள் வெகுசில மட்டுமே உள்ளன. வாஸ்து படி பிரதான கதவின் நிறம் கருப்பாக இருக்கும் போது அது தீய சக்தியைக் குறைக்கிறது. உங்கள் வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வர விரும்பினால் கருப்பை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

