Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஆயுத பூஜைக்கு வீட்டை ஒரே நாளில் ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
Ayudha Pooja Home Cleaning Tips: பொதுவாக பண்டிகை வரப்போகிறது என்றால், வீடு முழுவதையும் சுத்தம் செய்யும் வழக்கம் இருக்கும். அதுவும் இன்னும் சில நாட்களில் ஆயுத பூஜை வரப்போகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் தங்கள் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் பிஸியாக இறங்கியிருப்பார்கள். வேலை செல்பவர்கள் வார இறுதியில் வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டிருப்பார்கள்.
வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வீட்டு வேலைகள் பார்க்கத் தான் சுலபமாக தெரியும். ஆனால் அதை செய்தால் தான் அதன் கஷ்டம் புரியும். அதுவும் சமையலறையை சுத்தம் செய்வது என்பது இன்னும் சவாலானதாக இருக்கும். இது தவிர வீட்டின் ஜன்னல், கதவு, தரை போன்றவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி இவ்வளவு பகுதியை எளிதில் சிரமமின்றி சுத்தம் செய்ய நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இப்படியான கெமிக்கல்கள் விலை அதிகம் என்பதால் அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியாது.
இருப்பினும், வீட்டை சுத்தம் செய்ய உதவும் அற்புதமான இயற்கை க்ளீனரை ஒருசில பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம். இப்போது வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சுத்தம் செய்ய உதவும் சில அருமையான மற்றும் சக்தி வாய்ந்த நேச்சுரல் க்ளீனரை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.
1. சமையலறை மேற்பரப்புகளை சுத்தம் செய்ய...
தேவையான பொருட்கள்:
* வெள்ளை வினிகர் - 1 பங்கு
* தண்ணீர் - 1 பங்கு
* அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் - 10-15 துளிகள்
* ஸ்ப்ரே பாட்டில்
தயாரிக்கும் முறை:
* ஒரு பாட்டிலில் 1 பங்கு வெள்ளை வினிகர், 10-15 துளிகள் அத்தியாவசிய நறுமண எண்ணெய் மற்றும் 1 பங்கு நீரை ஊற்றி பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி குலுக்க வேண்டும்.
* பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எண்ணெய் பசை நிறைந்த சமையலறை திட்டுகள் மற்றும் சுவர்கள், பாத்திரம் கழுவும் தொட்டி, வீட்டு சாதனங்களின் மேற்பரப்புகள் மற்றும் குளியலறை சுவர் போன்ற பகுதிகளில் ஸ்ப்ரே செய்து துடைத்தால், அழுக்குகளும், கறைகளும் எளிதில் நீங்கி, பளிச்சென்று மின்னும்.
* இது தவிர, இந்த க்ளீனரைக் கொண்டு கதவு கைப்பிடிகள், ஜன்னல் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம்.
2. தரையை சுத்தம் செய்ய...
தேவையான பொருட்கள்:
* வெதுவெதுப்பான நீர் - 4 லிட்டர்
* வெள்ளை வினிகர் - 1 கப்
* மைல்டு சோப்பு - 1-2 டீஸ்பூன்
* மாப்பு மற்றும் பக்கெட்
பயன்படுத்தும் முறை:
* ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அத்துடன் வெள்ளை வினிகர், மைல்டு சோப்பு ஆகியவற்றை சேர்தது நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் மாப்பை அந்த நீரில் நனைத்து பிழிந்து, தரையை சுத்தம் செய்தால், தரையில் உள்ள விடாப்பிடியான கரைகள் எளிதில் நீங்கும். இந்த க்ளீனரை பயன்படுத்தினால், கை வலிக்க தரையை அழுத்தி துடைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
3. கண்ணாடியை சுத்தம் செய்யும் க்ளீனர்
தேவையான பொருட்கள்:
* வெள்ளை வினிகர் - 1 பங்கு
* தண்ணீர் - 1 பங்கு
தயாரிக்கும் முறை:
* ஒரு பாட்டிலில் 1 பங்கு வெள்ளை வினிகர் மற்றும் 1 பங்கு நீரை ஊற்றி, பாட்டிலை இறுக்கமாக மூடி நன்கு குலுக்க வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆல்கஹாலை சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த நேச்சுரல் க்ளீனரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை பீரோ கண்ணாடி, கண்ணாடி ஜன்னல் போன்றவற்றில் ஸ்ப்ரே செய்து, மென்மையான துணியால் துடைத்து எடுத்தால், கண்ணாடி பளிச்சென்று புதிது போன்று ஜொலிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications