Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அமெரிக்காவில் பரவும் 'ஜாம்பி மான் நோய்' - இதன் அறிகுறிகள் என்ன? மனிதர்களுக்கு பரவுமா? எவ்வளவு ஆபத்தானது?
Zombie Deer Disease In Tamil: தற்போது கொரோனாவின் JN.1 மாறுபாடு உலகெங்கிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வடமெரிக்காவின் வனப்பகுதியில் ஒரு மோசமான மற்றும் மர்மமான நோய் அமைதியாக பரவிக் கொண்டிருக்கிறது. அது ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் வழக்குகள் அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.
வட அமெரிக்கா முழுவதும் உள்ள வனவிலங்குகளிடையே பரவி வரும் நாள்பட்ட கழிவு நோய் (CWD) மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 'ஜாம்பி மான் நோய்' என்றும் அழைக்கப்படும், இந்த நோய் விலங்குகளின் மனநிலையை குழப்பி, ஜொள்ளுவிட வைக்கும். இந்த நோய் முதன் முதலான நவம்பர் மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த நோயானது அமெரிக்காவில் உள்ள மான், எல்க் மற்றும் மூஸ் ஆகியவற்றின் 800 மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் CDC-யின் படி, இந்த வைரஸ் 33 மாநிலங்கள் மற்றும் கனடாவின் 4 மாகாணங்களில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு இந்த வைரஸ் தொற்று குறித்த எச்சரிக்கையும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜாம்பி மான் நோய் என்றால் என்ன?
ஜாம்பி மான் நோய், நாள்பட்ட கழிவு நோய் (Chronic Wasting Disease) என்னும் அழைக்கப்படுகிறது. இது மான், எல்க் மற்றும் மூஸ் ஆகியவற்றின் மூளையை குறிவைத்து, கடுமையான நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் வாயில் இருந்து எச்சில் வழிவதோடு, விலங்குகள் குழப்பத்துடன் இருக்கும் மற்றும் மனிதர்களைக் கண்டால் பயம் இல்லாமலும் இருக்கும்.
தற்போது இந்நோய் எங்கெல்லாம் உள்ளது?
சிடிசியின் கூற்றுப்படி, இந்த நோய் அமெரிக்காவின் 33 மாநிலங்களிலும், கனடாவின் 4 மாகாணங்களிலும் உள்ளது. பின்லாந்து மற்றும் தென் கொரியாவிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. 1960-களின் பிற்பகுதியில் கொலராடோவில் நாள்பட்ட கழிவு நோய் முதன்முதலில் பதிவாகியது. அப்போதிருந்து, இந்த நோய் மத்திய மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களில் உள்ளது. மேலும் இன்னும் அறியாத இன்னும் பல வழக்குகளும் இருக்கலாம்.
இந்நோய் எப்படி பரவுகிறது?
பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் திரவங்களுடன் (இரத்தம், உமிழ்நீர், சிறுநீர் அல்லது மலம்) நேரடி தொடர்பு மூலம் அல்லது பாதிக்கப்பட்ட மண், நீர் அல்லது உணவை தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நாள்பட்ட கழிவு நோய் பரவுகிறது. இந்த நோய் விலங்குகளை மட்டும் தாக்காமல் மனிதர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என்பதால், கவனமாக இருக்க நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜாம்பி மான் நோயின் அறிகுறிகள் என்ன?
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பல மாதங்கள் முதல் வருடங்கள் வரை அதைக் காட்டாமல் இருக்கலாம். ஆனால் போக போக உடல் எடை குறையும், உடல் பலவீனமாகும், தடுமாற்றம், ஜொள்ளு ஒழுகுதல், அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும். மேலும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கண்டால் அஞ்சாமல் இருக்கும். திறந்த வெளியில் அதிகம் சுற்றும். சில சமயங்களில் வேட்டையாடவும் செய்யும்.
ஜாம்பி மான் நோய் மனிதர்களுக்கு பரவுமா?
சிடிசியின் கூற்றுப்படி, ஜாம்பி மான் நோய் விலங்குகளை மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் மனிதர்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த நோய் மனிதர்களுடன் நெருங்கிய மரபணு ஒற்றுமையைக் கொண்ட குரங்குகளை பாதிக்கும் என்று ஒரு பரிசோதனை காட்டுகிறது. எனவே மனிதர்களும் கவனமாக இருப்பதே நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications