Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
உங்க நாக்கு இப்படி மஞ்சள் நிறத்துல இருக்கா? அப்ப உயிரைப் பறிக்கும் 'இந்த' நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Yellow Tongue Reasons In Tamil: நீங்கள் தினமும் பற்களைத் துலக்கும் போது உங்கள் நாக்கையும் சுத்தம் செய்வீர்களா? அப்படி சுத்தம் செய்யும் போது, உங்கள் நாக்கின் நிறத்தை கவனித்துள்ளீர்களா? இல்லையென்றால் இனிமேல் கவனியுங்கள். ஏனெனில் நாக்கின் நிறம் ஒருவரது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படுத்தும்.
அதுவும் ஒருவரது நாக்கு அடர் மஞ்சள் அல்லது வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருந்தால், உடலில் ஏதோ தீவிரமான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக நாக்கு வெளிரிய பிங்க் நிறத்தில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் நாக்கில் நிறத்தில் சிறு மாற்றங்களை சந்தித்தாலும், உடலினுள் ஆரோக்கிய பிரச்சனை ஒன்று வளர்ந்து கொண்டிருக்கிறது, உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.

அதுவும் நாக்கு மஞ்சள் நிறத்தில் மாறுகிறது என்றால், அதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், புகைப்பிடித்தல், புகையிலையை மெல்லுதல், வாய் வறட்சி, மஞ்சள் காமாலை மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது நாக்கின் நிறத்தை மஞ்சள் நிறத்தில் மாற்றக்கூடிய சில ஆபத்தான நோய்களைப் பற்றி காண்போம்.
மோசமான வாய் சுகாதாரம்
ஆம், மோசமான வாய் சுகாதாரத்தினாலும் நாக்கு மஞ்சள் நிறத்தில் மாறும். அதுவும் தினமும் பற்களைத் துலக்கும் போது, நாக்கை சுத்தம் செய்யாமல் விடும் போது, வாயில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, நாக்கின் நிறத்தை மாற்றுகின்றன.
பாக்டீரியாக்கள் வெறும் துர்நாற்றத்தை மட்டும் உண்டாக்காமல், மஞ்சள் நிறத்திற்கு காரணமான நிறமிகளையும் உற்பத்தி செய்யக்கூடும். எனவே உங்கள் நாக்கு நிறம் மாறுவதைக் கண்டால், முதலில் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இரத்த சோகை
இரத்த சோகை என்பது உடலின் முறையான செயல்பாட்டிற்கு தேவையான இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாத நிலை ஆகும். இரத்த சிவப்பணுக்கள் தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.
இதன் அளவு குறையும் போது, அதை வெளிப்படுத்தும் விதமாக மிகுந்த உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், வெளிரிய சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும். இது தவிர நாக்கின் நிறமும் மஞ்சள் நிறத்தில் மாறும்.
மஞ்சள் காமாலை
நாக்கின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஏனெனில் மஞ்சள் காமாலையானது சருமம் மற்றும் கண்களின் நிறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதோடு நாக்கின் நிறமும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு இரததத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பது தான் காரணம்.
பிலிரூபின் என்பது ஒரு மஞ்சள் நிற கழிவுப் பொருள். இது இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்படும் போது உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருவருக்கு மஞ்சள் காமாலை கல்லீரல் நோய், பித்தப்பை நோய் மற்றும் குறிப்பிட்ட இரத்த கோளாறுகளாலும் ஏற்படலாம்.
கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்
நாக்கின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாற மற்றொரு காரணம் கல்லீரல் செயலிழப்பாகவும் இருக்கலாம். கல்லீரல் செயலிழப்பு என்பது ஒரு தீவிரமான நிலை. இந்நிலையில் கல்லீரல் சரியாக செயல்படாமல் இருக்கும். ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போகும் போது, இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது.
இந்த பிலிரூபின் இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் மஞ்சள் நிற கழிவுப் பொருளாகும். எனவே உங்கள் நாக்கு மஞ்சள் நிறத்தில் மாறுவதைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி, உயிரையே இழக்க நேரிடும்.
சிறுநீரக செயலிழப்பு அறிகுறி
மஞ்சள் நிற நாக்கு சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு என்பது ஒரு தீவிரமான நிலை. இந்நிலையில் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை சிறுநீரகங்களால் சரியாக வடிகட்ட முடியாமல் போகும். இதன் விளைவாக பல்வேறு அறிகுறிகள் தென்பட்டாலும், அதில் ஒன்று நாக்கு மஞ்சள் நிறத்தில் மாறுவது. ஒருவது சிறுநீரக ஆரோக்கியம் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம்.
இப்படி பாதிக்கப்படும் போது இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் சிறுநீரகங்கள் தான் சிறுநீரின் வழியே பிலிரூபினை வெளியேற்றுகிறது. ஆனால் இந்த சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் போகும் போது, பிலிரூபினை வெளியேற்ற முடியாமல், இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதோடு, மஞ்சள் காமாலையையும் உண்டாக்குகிறது.
நினைவில் கொள்ள வேண்டியவை
நாக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படுவதை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது நமது உடல் நமக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை அறிகுறி.
இதை கண்டு கொள்ளாமல் தவிர்க்கும் போது, அதன் விளைவாக ஒரு கட்டத்தில் உயிரையே இழக்க நேரிடக்கூடும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் நாக்கின் நிறத்தை கவனிக்க வேண்டும் மற்றும் நாக்கை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications