Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
World Lung Day 2024: உங்க நுரையீரலை சுத்தம் செய்யணுமா? இந்த பானங்களை அடிக்கடி குடிங்க போதும்...
World Lung Day 2024: நமது உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றலைத் தரும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. ஆனால் தற்போதைய மாசடைந்த காற்றின் காரணமாக நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர நிறைய வாய்ப்புள்ளது.
இப்படி நுரையீரலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றிவிட்டால், தீவிரமான விளைவுகளைத் தடுக்கலாம். அதுவே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அதுவே பெரிய ஆரோக்கிய பிரச்சனையை வரவழைத்துவிடும்.

இந்த நுரையீரல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலக நுரையீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று உலக நுரையீரல் தினம் என்பதால், நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் சில பானங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த பானங்கள் சுவாச அமைப்பை சுத்தப்படுத்துவதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இப்போது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நுரையீரலை சுத்தம் செய்யவும் உதவும் சில பானங்களைக் காண்போம்.
1. க்ரீன் டீ
க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே இந்த க்ரீன் டீயை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாதுகாப்பு விளைவுகள் நுரையீரல் திசுக்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
2. மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்நத பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
3. எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
4. தேன் கலந்த நீர்
சுடுநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது தொண்டை மற்றும் இருமலைத் தணிப்பதோடு, சுவாசிப்பதில் உள்ள அசௌகரியத்தில் இருந்து நிவாரணத்தை அளிக்கிறது. எனவே எளிய வழியில் நுரையீரலை சுத்தம் செய்ய நினைத்தால், சுடுநீரில் தேன் கலந்து குடியுங்கள்.
5. அன்னாசி ஜூஸ்
அன்னாசிப் பழத்தில் ப்ரோமலைன் என்னும் நொதிப் பொருள் உள்ளது. இந்த அன்னாசியை வெறுமனே சாப்பிடுவதை தவிர, அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அவ்வப்போது குடித்து வந்தால், அது சுவாசக் குழாயில் உள்ள சளியை வெளியேற்றுவதோடு, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
6. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் வளமான அளவில் உள்ளன. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு, ஆக்ஸிஜனை அதிகம் உள்ளிழுக்க உதவி புரிகிறது. அதற்கு பீட்ரூட்டை சாப்பிடுவதைத் தவிர, அவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தும் வரலாம்.
7. பூண்டு நீர்
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன. இவ்விரண்டும் நுரையீரல் ஆரோக்கியத்தை பெரிதும் ஆதரிக்கின்றன. அதற்கு பூண்டு பற்களை தினசரி உணவில் சேர்ப்பதைத் தவிர, அதை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடிக்கவும் செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications