Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
World Liver Day 2025: கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் விரைவில் பிரச்சினை சரியாகுமாம்...
World Liver Day 2025: இன்று உலக கல்லீரல் தினம். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கல்லீரலில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்றால் அது கொழுப்பு கல்லீரல் நோய்தான். கொழுப்பு கல்லீரலை மருத்துவரீதியாக குணப்படுத்த முடியுமென்றாலும் அதை துரிதமாக்க உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி சில உணவுகளைத் தவிர்த்து குறிப்பிட்ட உணவுகளை அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயை திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் குணப்படுத்தலாம். இந்த பதிவில் கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்த அல்லது கல்லீரலைப் பாதுகாக்க உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

காபி
இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், நமக்கு பிடித்த காபி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட காபி குடிப்பவர்களுக்கு, காபி குடிக்காதவர்களை விட குறைவான கல்லீரல் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பதால் சிரோசிஸ் ஆபத்து 44% மற்றும் ஒரு நாளைக்கு நான்கு கப் 65% குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கீரைகள்
கீரையோ வகைகள் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவுகின்றன. இதுவரை நீங்கள் கீரை சாப்பிடாதவராக இருந்தால் இனியாவது சாப்பிடத் தொடங்குங்கள்.
ஒமேகா-3 அமிலம்
சால்மன், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன, அவை இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் கல்லீரல் கொழுப்பு அளவைக் குறைத்து வீக்கத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நட்ஸ்
நட்ஸ் வகைகள் குறிப்பாக வால்நட்ஸில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நட்ஸ் வகைகளை அடிக்கடி சாப்பிடுவது கல்லீரல் நொதிகளின் அளவை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகம் இருப்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை கல்லீரல் நொதிகளைக் குறைத்து எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சமையலில் அல்லது சாலட்களில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இது வெண்ணெய் அல்லது தாவர எண்ணெய்க்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.
பூண்டு
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூண்டு உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இது எந்த உணவிற்கும் சுவையைத தனித்துவமான கொடுக்கும், மேலும் இது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், எனவே உங்கள் உணவில் தாராளமாக பூண்டைச் சேர்க்கத் தயங்காதீர்கள்.
மஞ்சள்
சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள், நமது சமையலறையில் இருக்கும் தங்க மசாலாவாகும். மஞ்சளில் உள்ள மூலப்பொருளான குர்குமின், வீக்கத்தைக் குறைத்து கல்லீரலில் கொழுப்பு குவிவதை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

