Latest Updates
-
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
Aadi Month Horoscope 2026:ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா?
World Hypertension Day 2024: மாரடைப்பை தூண்டும் ஹை பிபி-யை குறைக்கணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
World Hypertension Day 2024: உலகில் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது சிறுநீரகங்களில் சேதம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தீவிரமான நிலைகளில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டவசமாக, இந்த உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பது, தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள் தங்களின் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான சோடியத்தை உட்கொண்டால், அது நிலைமையை தீவிரப்படுத்திவிடும். அதற்கு எண்ணெயில் பொரித்த அல்லது கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதோடு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஒருசில பழங்களை தினமும் சாப்பிடலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று, உலக உயர் இரத்த அழுத்த தினம் / உலக ஹைப்பர்டென்சன் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் உலகளவில் உயர் இரத்த அழுத்தத்துடன் வாழும் 1 பில்லியன் மக்களுக்கு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த உலக ஹைப்பர்டென்சன் தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எந்த மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் சோடியம் மிகவும் குறைவு மற்றும் பொட்டாசியம் அதிகம். எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
2. அவகேடோ
அவகேடோ பழத்தில் ஒலியிக் அமிலம் அதிகம் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவக்கூடியவை. மேலும் அவகேடோ பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதோடு அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. எனவே அடுத்தமுறை அவகேடோ பழத்தைக் கண்டால், அவற்றை வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.
3. தர்பூசணி
கோடையில் அதிகம் கிடைக்கும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, எல் சிட்ருலின் என்னும் அமினோ அமிலமும் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன், வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட தர்பூசணியை இரத்த அழுத்த நோயாளிகள் உட்கொண்டால், பிபி கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. ஆரஞ்சு
புளிப்புச் சுவை நிறைந்த சிட்ரஸ் பழம் தான் ஆரஞ்சு. இந்த ஆரஞ்சு பழத்தில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளன. ஆரஞ்சு பழத்தில் உள்ள முழு சத்துக்களையும் பெற விரும்பினால், அதை ஜூஸ் வடிவில் எடுக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.
5. பெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உயர் இரத்த அழுத்தத்தை வர ஒருவித காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பெர்ரி பழங்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications