Latest Updates
-
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்!
வேலைக்கு போகும் பெண்ணா? இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க கருப்பையில கட்டி இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Uterine Fibroids: பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. ஆண்களை விட பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம். பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திற்காக தங்களின் ஆசைகளை துறந்து, கஷ்டத்தை கூட பொருட்படுத்தாமல் நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். உழைப்பது என்று வரும் போது அது வேலை சென்று உழைப்பது மட்டும் அல்ல, அது குடும்பத்தினருக்காக வீட்டில் செய்யப்படும் வேலையும் அடங்கும்.
முந்தைய காலத்தில் பெண்கள் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளுடன், ஆண்களுக்கு இணையாக வேலைக்கும் சென்று அங்கு கொடுக்கப்படும் இலக்கை அடையவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் தற்போது பல பெண்கள் போதுமான ஓய்வின்றி, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல், இன்னும் பல பெண்கள் அயராது உழைத்துக் கொண்டு தான் உள்ளார்கள்.
அதுவும் இன்றைய காலத்தில் நிறைய பெண்கள் கருப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சனையைக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. இந்த புற்றுநோய் அல்லாத நார்த்திசுக்கட்டிகளானது பெண்களின் தினசரி வாழ்க்கையை சீர்குலைப்பதோடு, அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதித்து, குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
ஆனால் இன்னும் நிறைய பெண்களுக்கு தங்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டி உள்ளது என்பதே தெரியாமல் இருக்கின்றனர். இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். இப்போது கருப்பை நார்த்திசு கட்டிகளின் அறிகுறிகள் மற்றும் அதை திறம்பட நிர்வகிக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கருப்பை நார்த்திசு கட்டிகளின் அறிகுறிகள்
கருப்பை நார்த்திசு கட்டிகள் இருந்தால் அது சில பெண்களுக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் அனைத்து பெண்களுக்குமே அறிகுறிகள் தெரியும் என்பதில்லை. சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். கீழே கருப்பை நார்த்திசு கட்டிகளின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை
* அதிகமான இரத்தப்போக்கு
* அடிவயிற்றுப் பகுதி வீங்கி இருப்பது
* சிறிது உண்டாலே வயிறு நிரம்பிவிடுவது
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* உடலுறவின் போது வலி
* கீழே முதுகு வலி
* பிரசவத்தின் போது சிக்கல்கள்
* கருத்தரிப்பதில் சிரமம்
காரணங்கள்
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் இதில் முக்கிய பங்கை வகிக்கக்கூடும். அவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவில் ஏற்படும் பாதிப்பு அல்லது மாற்றங்கள், பரம்பரை ஆகும். கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், திறம்பட நிர்வகிப்பதோடு, தடுக்கவும் செய்யலாம்.
கருப்பை நார்த்திசுக் கட்டிகளை நிர்வகிக்கும் வழிகள்:
ஹார்மோன் மற்றும் மன அழுத்தத்தைப் பராமரிக்கவும்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருக்கலாம். எனவே ஒருவர் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதுவும் நாள்பட்ட மன அழுத்தம் அறிகுறிகளை அதிகரிக்கலாம். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது முக்கியம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
கருப்பை நார்த்திசுக்கட்டியை நிர்வகிக்க வேண்டுமானால், முதலில் ஒருவர் உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டும். ஆய்வு ஒன்றில் உடல் பருமனுக்கும், கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அழற்சி எதிர்ப்பு உணவுகளான கீரைகள், பெர்ரிப் பழங்கள், நட்ஸ், கொழுப்புள்ள மீன்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
நீரேற்றத்துடன் இருக்கவும்
நிறைய பேர் தினமும் போதுமான நீரைக் குடிக்க வேண்டும் என்ற கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். உடலில் போதுமான அளவு நீர் இல்லாவிட்டால், அது நாம் எதிர்பாராத பல பிரச்சனைகளை வரத்தூண்டும். அதில் ஒன்று தான் கருப்பை நார்த்திசுக்கட்டி. எனவே இதைத் தடுக்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீரை மட்டும் அருந்தாமல், நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தாவர அடிப்படையிலான புரோட்டீன்கள் மற்றும் முழு தானிய உணவுகளை உட்கொண்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வேலை செய்யும் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், அவற்றின் அறிகுறிகளைப் பெண்கள் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், பெண்கள் நார்த்திசுக்கட்டிகளின் தாக்கத்தை திறம்பட நிர்வகிக்கலாம் மற்றும் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











