Latest Updates
-
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
பாத்ரூமில் போன் யூஸ் பண்ணுபவரா நீங்க? உங்களுக்கு இந்த இரண்டு ஆபத்தான நோய் வரப்போகுதாம்...!
குளியலறை பழக்கம் என்று வரும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி பழக்கங்களைக் கொண்டுள்ளனர். சிலர் பத்திரிக்கைகளைப் படிக்கிறார்கள், சிலர் பாடல் பாடுவார்கள், ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைவரும் தங்கள் கழிவறை நேரத்தை ஸ்மார்ட்போனுடன் செலவழிக்கின்றனர்.
இருப்பினும், உங்கள் மொபைலை உங்கள் கழிவறையில் பயன்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படுமா? நிபுணர்களின் கருத்துப்படி, வெளித்தோற்றத்திற்கு பாதிப்பில்லாத இந்த பழக்கம் சில விரும்பத்தகாத உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். இதில் உள்ள அபாயங்களைக் கண்டறிந்து, அதிலிருந்து வெளிவருவதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூல நோய் ஏற்படலாம்
நீண்ட நேரம் கழிப்பறையில் உட்கார்ந்து சிரமப்படுவது நீங்கள் எதிர்பார்க்காத சிக்கலை ஏற்படுத்தலாம். உங்கள் தொலைபேசியை உங்களுடன் எடுத்துச் செல்வது இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, பைல்ஸ் எனப்படும் மூல நோயை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும். மூல நோய் கடுமையான வலியை ஏற்படுத்தும் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், இரத்தப்போக்கைக் கூட ஏற்படுத்தலாம்.
உங்கள் போனில் தேவையற்ற பாக்டீரியா தொற்று ஏற்படலாம்
உங்கள் கழிவறையில் போனை உபயோகிப்பதால் விரும்பத்தகாத பாக்டீரியாக்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் சமூக ஊடகத்தில் ஸ்க்ரோலிங் செய்யும் போது, உங்கள் தொலைபேசி குளியலறை சூழலுக்கு அருகாமையில் உள்ளது, மேலும் இது உங்கள் வீட்டிலிருக்கும் மிகவும் சுகாதாரமற்ற இடமாகும். இது உங்கள் போனில் மோசமான மாசுபாட்டிற்கு வழிவகுக்கும்.
UTI க்கு வழிவகுக்கும்
உங்கள் செல்போனை கழிப்பறைக்கு எடுத்துச் சென்றால், உங்கள் தொலைபேசி கிருமிகளால் சூழப்படும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கழிப்பறை இருக்கை அல்லது கதவு கைப்பிடி என எல்லா இடங்களிலும் கிருமிகள் உள்ளன. எனவே, நீங்கள் வயிற்றுப்போக்கு, குடல் நோய்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றைப் பெறலாம்.
கழிவறை பழக்கத்தை மேம்படுத்த குறிப்புகள்
முதலில், நீங்கள் குளியலறையில் இருக்கும்போது உங்கள் ஃபோனைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள். இது மூல நோய் உருவாவதைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பாக்டீரியா மாசுபாட்டின் அபாயத்தையும் குறைக்கும்.
ஸ்டெப்பிங் ஸ்டூலை உபயோகிக்க வேண்டும்
உங்கள் குளியலறை அனுபவத்தை மிகவும் எளிதானதாக அல்லது திறமையானதாக மாற்ற, ஸ்டெப்பிங் ஸ்டூலைப் பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கழிப்பறையில் உட்கார்ந்திருக்கும் போது உங்கள் கால்களை உயர்த்துவது மலம் எளிதாக வெளியேற அனுமதிக்கிறது. விஷயங்களை விரைவுபடுத்த இது ஒரு எளிய ஆனால் பயனுள்ள தந்திரமாகும்.
ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிக்கவும்
நீங்கள் குளியலறையில் அதிக நேரம் செலவிடுவதை உணர்ந்தால், உங்கள் உணவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமாக இருக்கலாம். உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்களை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கிவி, டிராகன் பழம், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் கொடிமுந்திரி போன்ற பழங்கள் குடல் இயக்கத்தைத் தூண்ட உதவும். கூடுதலாக, இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நன்மை பயக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

