உலகில் பெரும்பாலான மக்கள் தினமும் குளிப்பதில்லை... காரணம் என்ன தெரியுமா? ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான முடிவு!

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு சுகாதாரமும் முக்கியம். சுகாதாரம் என்றால் முதலில் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது குளியல்தான். ஏனெனில் குளியல் ஒருவருக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் அவர்களின் சரும ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.

உண்மையில் நாம்தான் தினமும் குளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகளவில் குளியல் மீதான கருத்து வேறு மாதிரியாக உள்ளது. ஏனெனில் உலகில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் தினமும் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். உண்மையில் அவர்கள் அதை நினைத்து எந்த கவலையும் படுவதில்லை.

Why Skipping Bath Is The New Norm What Study Says

குளியலை தவிர்ப்பதற்கான காரணங்கள்

காலநிலை மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் முதல் சரும பராமரிப்பு மற்றும் நீர் சேமிப்பு வரை குளிப்பதைத் தவிர்ப்பதற்கான காரணங்கள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும். இலட்சக்கணக்கான மக்கள் கணக்கானவர்கள் தினமும் குளிப்பதைத் தவிர்ப்பதற்கான காரணங்கள், அது ஒரு மோசமான விஷயமா இல்லையா என்பதற்கான எண்கள், இதற்கு பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் குளியலை தவிர்ப்பவர்கள் யார்?

Ipsos என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய உலகளாவிய சுகாதார கணக்கெடுப்பின்படி, 42% அமெரிக்கர்கள் தினமும் குளிப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள், அதேபோல பிரிட்டிஷ்காரர்களில் 33% பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை குளிப்பதைத் தவிர்க்கிறார்கள், பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரை 51% பேர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறார்கள், சுறுசுறுப்பான மக்களைக் கொண்டிருக்கும் ஜப்பானில், 90% க்கும் அதிகமானோர் தினமும் குளிக்கிறார்கள். தினசரி குளியல் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது, குறிப்பாக இந்தியாவின் கிராமப்புற மக்கள் தினமும் குளிப்பதை தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள்.

Why Skipping Bath Is The New Norm What Study Says

தினசரி குளிப்பதை ஏன் தவிர்க்கிறார்கள்?

நேரமின்மை

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் மிகவும் சோர்வாகவோ அல்லது குளிக்க நேரம் இல்லாத அவசரத்திலோ இருப்பார்கள். குறிப்பாக அதிக குளிராக இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்கள் தான் இப்படி செய்கிறார்கள்.

குளிரும் குறைந்த வியர்வையும்

இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் குளிர்காலத்தில் அளவிற்கு அதிகமாக குளிர் இருக்கும் என்பதால் மிக குறைவான அளவிலேயே வியர்க்கும். இதனால் பலர் தினசரி குளிக்க தேவையில்லை என நம்புகிறார்கள்.

சரும ஆரோக்கியம் குறித்த கவலைகள்

சமீபத்திய ஆண்டுகளில், அளவிற்கு அதிகமாக குளிப்பது உடலில் இயற்கையாக சுரக்கும் உடலுக்கு தேவையான எண்ணெயை நீக்கி விடும் என்பது தோல் மருத்துவர்களின் அறிவுரை. இதனால் சூடான நீர் மற்றும் கெமிக்கல் நிறைந்த சோப்பு கொண்டு குளிப்பதை நிறுத்தும் வகையில் எச்சரிக்க தொடங்கியுள்ளனர்.

பியாண்ட் சோப்பின் ஆசிரியரான டாக்டர் சாண்டி ஸ்காட்னிக்கி கூறுவதாவது: "நீங்கள் அழுக்காகவோ அல்லது வியர்வையாகவோ இல்லாவிட்டால், தினமும் குளிப்பது மருத்துவரீதியாக அவசியமில்லை. அதிகமாக குளிப்பது அரிப்புடன் கூடிய தோல் அழற்சி, சரும வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும்."

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

கலிபோர்னியா அல்லது ஆஸ்திரேலியா போன்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குளிப்பதன் மூலம் நீர் பயன்பாட்டை உணர்வுபூர்வமாகக் குறைக்க முயற்சிக்கிறார்கள்.

கலாச்சார வேறுபாடுகள்

இந்தியா அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளை போல, பல மேற்கத்திய கலாச்சார நாடுகளில், சுகாதாரம் என்பது சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் உடன் தொடர்புடையது அல்ல. ஆனால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு தொடர்புடையது.

குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்களா?

உண்மையில் இல்லை! 2022 ஆம் ஆண்டு YouGov நடத்திய ஆராய்ச்சி முடிவில், தினமும் குளிக்காதவர்களில் 72% பேர் அதற்காக வெட்கப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது. 40% பேர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும்போதோ தினமும் குளிப்பது பயனற்றது என கூறியிருக்கிறார்கள். 28% பேர் "உடலில் ஏற்படும் இயற்கையான வாசனை இயல்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள கூடியது" என நம்புகிறார்கள். இதற்கு நேர்மாறாக, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உடல் வாசனையை மோசமான மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினையாகக் கருதுகிறார்கள்.

Take a Poll

எவ்வளவு இடைவெளியில் குளிக்க வேண்டும்?

சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி: பெரும்பாலான மக்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை குளிப்பது போதுமானது எனவும், உங்களுக்கு அதிகம் வியர்த்தாலோ, அல்லது உடற்பயிற்சி செய்தாலோ அல்லது மாசுபாட்டிற்கு உட்பட்டாலோ மட்டுமே தினசரி குளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள். நீங்கள் முழுவதும் குளியலை தவிர்த்தாலும், தினமும் உடலின் அக்குள், இடுப்பு மற்றும் கால் பகுதிகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் குளியல் கலாச்சாரம்:

இந்தியாவில் தினசரி குளிப்பது என்பது சுகாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒரு புனிதமான சடங்காகவும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்து மதத்தை சேர்த்தவர்கள் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள். மற்ற மதங்களிலும் குளியலுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக இந்து வீடுகளில் பலர் பிரார்த்தனைக்கு முன் குளிப்பது, கும்பமேளா போன்ற பண்டிகைகள் புனித நதிகளில் குளிப்பதன் மூலம் உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன. மேலும் நீர் பற்றாக்குறை உள்ள நெரிசலான நகர்ப்புறங்களில் கூட, 75% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் குளிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதிலும் வெப்பமான காலநிலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது அதற்கு அதிகமாகவும் குளிக்கிறார்கள்.

சுகாதாரம் என்பது தனிப்பட்டது, உலகளாவியது அல்ல

தினசரி குளிக்காமல் இருப்பது சிலருக்கு அதிர்ச்சியாகவும், அசௌகரியமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், தினசரி குளிப்பது அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரு சுகாதார வழக்கம் கிடையாது. வானிலை, மக்களின் தோல் வகை, வாழ்க்கை முறை, நீர் பயன்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற காரணிகள் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிப்படை சுகாதாரம் என கைகள், முகம் மற்றும் அந்தரங்க பாகங்கள் சரிவர பராமரிக்கப்படும் வரை, தினமும் முழு உடல் குளியல் அனைவருக்கும் கட்டாயமாக இருக்காது. நீங்கள் "தினசரி காலையில் குளிப்பவராக இருந்தாலோ" அல்லது "வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பவராக இருந்தாலோ", சுத்தம் என்பது விழிப்புணர்வைப் பற்றியது மட்டுமே, ஆனால் கட்டாயமானது அல்ல.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion