Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
தினமும் உங்க நாக்கை சுத்தம் செய்யுங்கள்... ஏன் தெரியுமா?
வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. யாராவது உங்களின் வாய் துர்நாற்றம் குறித்து கூறினால், நீங்கள் எவ்வளவு சங்கடமான உணர்வை பெறுவீர்கள் என்பது புரிகிறது. அதற்குத் தான் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால், பெரும்பாலான மக்கள் பற்களை பராமரிப்பது மட்டுமே வாய் சுகாதாரம் என்று எண்ணுகின்றனர்.
நாக்கினை பற்றி யோசிக்க மறந்து விடுகின்றனர். ஆனால், நாக்கின் மூலமும் துர்நாற்றம் மற்றும் சில ஆரோக்கிய குறைப்பாடுகள் ஏற்படும். நாக்கு சுத்தமாக இருந்தால், பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வாய் புத்துணர்ச்சியாகவும், உணவு சுவையாகவும் இருக்கும்.

வாயை சுத்தம் செய்வதால் பல நன்மைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பல் துலக்குவதும், வாயைக் கொப்பளிப்பதும் துவாரங்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில சமயங்களில் நாக்கை சுத்தம் செய்வதில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். பல சமயங்களில் பற்களைச் சுத்தம் செய்வதில் காட்டும் அக்கறை நாக்கைச் சுத்தம் செய்வதில் காட்டப்படுவதில்லை. இதனால்.. பல பிரச்சனைகள் ஏற்படும். நாக்கு சுத்தமாக இருந்தால்.. பேசுவதில் தெளிவு இருக்கும், தொண்டையில் கிச் கிச் போன்ற பிரச்சனைகள் வராது.
ஆனால் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான நாக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. புத்துணர்ச்சியை மேம்படுத்துவது முதல் சுவாசத்தை வழங்குவது வரை பல நன்மைகள் உள்ளன. நாக்கை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நாக்கினை சுத்தம் செய்வதன் மூலம் உங்களின் சுவை உணர்வை மேம்படுத்தலாம். நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பிற தேவையற்ற பொருட்கள் நீக்கப்படும். இதனால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள், நீங்கள் உண்ணும் உணவின் சுவையை சிறந்ததாகக் காட்டும். அதேபோல், கசப்பு, இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு உணர்வுகளை சிறப்பாக வேறுபடுத்திக் காட்டும்.
2. ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது பாக்டீரியாவை அழிக்கிறது. நாக்கு மற்றும் வாயை தினமும் சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கிறது.
3. சுவை கூடுகிறது எதைச் சாப்பிட்டாலும், நாக்கு, காரம், புளிப்பு, இனிப்பு எனப் பலவிதமான சுவைகளை வெளிப்படுத்தும். ஒரு சராசரி மனிதனுக்கு 10,000 சுவை மொட்டுகள் உள்ளன. இவை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். நாக்கை சரியாக சுத்தம் செய்யாவிட்டால்.. சுவை மொட்டுகள் கருப்பாகிவிடும். இதனால் ருசி தெரியாமல் உப்பு, சர்க்கரை சேர்த்து உண்கின்றனர்.
4. ஈறு ஆரோக்கியத்திற்கு நாக்கை சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியாக்கள் வளர்ந்து ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே நாக்கை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் ஈறுகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
5. மேலும் பல் துலக்குதல் உணவு மற்றும் பற்களில் சிக்கியுள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மேலும், நாக்கு உட்பட முழு வாயையும் சுத்தம் செய்வது, வயதாகும்போதும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
6. செரிமானம் வாயிலிருந்து தொடங்குகிறது. எனவே வாயில் எச்சில் ஊறினால்தான் செரிமானம் சீராக நடக்கும். நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் உமிழ்நீரை உற்பத்தி செய்து, செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. வாய் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.
7. சுவாச நோய்களைத் தவிர்க்கவும் நாக்கை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். நுரையீரலில் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்த செயல்முறை சுவாசத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
8. தொண்டை பிரச்சனைகளுக்கு நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் தொண்டை பிரச்சனைகளை சரி செய்யலாம். நாக்கில் வெள்ளைப் பூச்சு பூஞ்சையால் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். நாக்கை சரியாக சுத்தம் செய்வதன் மூலம் தொண்டையில் உள்ள சளி மற்றும் பாக்டீரியாவை வெளியேற்ற முடியும். இதனால் தொற்று நோய்களைத் தவிர்க்கலாம்.
இதய ஆரோக்கியத்திற்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாயில் பிளேக் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். இது இரத்தக் கட்டிகளை உருவாக்கி வலியை ஏற்படுத்துகிறது. நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications