Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
குளிர்காலம் ஏன் சர்க்கரை நோயாளிகளை அதிகம் சோதிக்கிறது? அவர்களை எப்படி காப்பாற்றுவது தெரியுமா?
உலகளவில் அதிகளவு மக்களை வாட்டி வதைக்கும் நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வளர்சிதை மாற்ற நிலையுடன் வாழ்ந்து வருவதால், தேவையான விழிப்புணர்வு மற்றும் அத்னை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் திடீரென ஏற்ற இறக்கத்தை கவனிக்கிறீர்களா? அதற்கு காரணம் மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப, நம் உடலிலும் இன்சுலின் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.

குளிர்காலத்தில் சர்க்கரை நோய் ஏன் அதிகரிக்கிறது?
குளிர்காலம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு பருவகாலமாகும். வெப்பநிலை குறையும்போது, ஒருவர் சோம்பேறியாக மாறலாம். உடற்பயிற்சி செய்யும் விகிதமும் குறைகிறது மற்றும் குளிர்காலத்தில் மக்கள் அதிக வசதியான உணவை சுவைக்க முனைகிறார்கள். எனவே இந்த சீசனில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் சவாலானது.
கடுமையான குளிர் நிலைகள் உங்கள் குளுக்கோஸ் அளவை பாதிக்கலாம், அது தவறான அளவீடுகளுக்கும் வழிவகுக்கும். குறைவான ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் சுருங்கிய இரத்த நாளங்கள் காரணமாக, தவறான ரீடிங் இருக்கலாம். நீரிழிவு மேலாண்மை வாழ்க்கை முறை மாற்றங்களை சார்ந்துள்ளது. குளிர்காலம் நம்மை மெதுவாகவும் மந்தமாகவும் ஆக்குகிறது மற்றும் கலோரிகள் நிறைந்த குளிர்கால உணவுகள் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது, உணவுப் பழக்கத்தை மாற்றுவது மற்றும் கலோரிகளை அதிகரிப்பது போன்றவை உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் உள்ள சில காரணங்களாகும். குளிர்காலத்தில் சர்க்கரை நோயை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டாம். குளிர்காலத்தில், மக்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கலாம், மேலும் அதிக கலோரி உணவுகளை உட்கொண்டிருக்கலாம். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்வது அவசியம்.
இரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணிக்கவும்
ஒவ்வொரு நாளும் உங்கள் குளுக்கோஸ் அளவை சரிபார்க்கவும். குளிர் வெப்பநிலை காரணமாக, சில நேரங்களில் குறைவான ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக அளவீடுகள் மாறுபடலாம். எனவே, உங்கள் உடல் வெப்பநிலை சாதாரணமாக இருப்பதை உறுதிசெய்து, வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
கவனத்துடன் சாப்பிட வேண்டும்
விடுமுறை காலம் மகிழ்ச்சியானதாக இருக்கும், ஆனால் சில சமயங்களில் உணவுகளில் சுயகட்டுப்பாடு அவசியம். உங்கள் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிக இலை காய்கறிகள், பீட்ரூட், கேரட் போன்ற குளிர்கால ஸ்பெஷல் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலை சூடாக வைத்திருங்கள்
குளிர்ந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது உங்கள் உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். வெளியில் செல்வதற்கு முன் சரியான ஆடைகளை அணியவும் மற்றும் உங்கள் வீட்டில் போதுமான வெப்பம் இருப்பதை உறுதி செய்யவும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்
மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது அன்பானவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

