Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
ஆணுறுப்பில் முறிவு ஏற்படக் காரணங்கள் என்ன? ஆண்களே இந்த விஷயங்களை உடலுறவின் போது ட்ரை பண்ணாதீங்க!
பல்வேறு காரணங்களால் மற்றும் நமது அலட்சியத்தால் உடல் உறுப்புகளின் எலும்புகளில் முறிவுகள் ஏற்படலாம். கை, கால் முறிவுகள் பற்றி நாம் நன்கு அறிவோம். பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒரு வகையான எலும்பு முறிவு உள்ளது. இது அரிதான ஆனால் ஆபத்தான எலும்பு முறிவாகும் அதுதான் ஆணுறுப்பு முறிவு.

ஆண்குறி எலும்பு முறிவு என்பது உடலுறவின் போது ஏற்படக்கூடிய காயமாகும். இந்த அரிய எலும்பு முறிவுக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைக்கான வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆணுறுப்பு முறிவு என்றால் என்ன?
இது உங்கள் எலும்பை உடைக்கும் வேறு எந்த வகையான எலும்பு முறிவையும் போல இல்லாத ஒரு எலும்பு முறிவு. ஏனெனில் ஆண்குறியில் ஒரு எலும்பு கூட இருக்காது. ஆண்குறி என்பது கார்பஸ் கேவர்னோசா எனப்படும் மென்மையான பஞ்சு போன்ற திசுக்களைக் கொண்டுள்ளது. ஆண்குறி எலும்பு முறிவு என்பது ஆணுறுப்பின் இரண்டு முக்கிய பகுதிகளான ஆண்குறி உறை மற்றும் கார்போரா கேவர்னோசா பகுதியில் ஏற்படும் முறிவாகும். இது ஒரு ஆணின் ஆணுறுப்பு நிமிர்ந்து இருக்கும் போது ஏற்படும் காயமாகும். இது ஒரு ஆணுறுப்பு பெரிதாக இருக்கும்போது மட்டுமே ஏற்படும்.
விளைவுகள்
இந்த காயம் ஒரு ஆணின் சிறுநீர் செயல்பாடு மற்றும் அவர்களின் பாலியல் செயல்பாடுகளில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்குறி எலும்பு முறிவு என்பது உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஒரு காயமாகும்.
ஆண்குறி எலும்பு முறிவுக்கு என்ன காரணம்?
ஆண்குறி நிமிர்ந்திருக்கும் போது ஆண்குறி எலும்பு முறிவு ஏற்படுகிறது, அந்த நேரத்தில் ஆண்குறியில் உள்ள இரத்தம் கார்போரா கேவர்னோசா எனப்படும் திசுக்களில் குவிகிறது. ஆணுறுப்பு நிமிர்ந்திருக்கும் போது, இந்த திசுக்களின் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் ஒடிந்து ஆணுறுப்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆணுறுப்பு எலும்பு முறிவு ஏற்படும் போது நிமிர்ந்த ஆண்குறிக்கு ஒரு அதிர்ச்சி ஏற்படும். அடிப்படையில் ஆண்கள் படுக்கையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கும்போது இந்த வகையான காயம் ஏற்படுகிறது. ஆண்குறியில் எலும்பு இல்லாததால். ஒரு காயம் காரணமாக ஆணுறுப்பின் உள்ளே உள்ள திசுக்கள் சிதைந்து வலியை ஏற்படுத்துகிறது. இதனால் ஆணுறுப்பு வீங்கி நீல நிறமாக மாறுகிறது.
இந்த காயம் பொதுவாக உடலுறவின் போது நிகழ்கிறது, ஆண்குறி எலும்பு முறிவுக்குப் பின்னால் அது மட்டும் காரணம் இல்லை என்றாலும், வேறு சில சூழ்நிலைகளிலும் இது நிகழலாம்-
-ஒரு கதவு அல்லது கனமான பொருட்களின் மீது ஆணுறுப்பு மோதுவது.
-நிமிர்ந்த ஆண்குறி மீது பொருட்கள் விழுதல்
-
- நிமிர்ந்த ஆண்குறியுடன் படுக்கையில் உருளும் போது
ஆணுறுப்பு முறிவின் அறிகுறிகள்
ஆண்குறி எலும்பு முறிவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஆபத்தான காயங்களில் ஒன்றாகும், இதற்கு சிக்கலைக் கண்டறிய அல்லது மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு அறிகுறிகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஆணுறுப்பில் தோன்றும் அறிகுறிகளே அதனை உங்களுக்கு உணர்த்தும்.
- அடர் கருப்பு/நீல காயப்பட்ட ஆண்குறி
- ஆண்குறியில் இரத்தப்போக்கு
- சிறுநீர் கழிக்கும் போது சிரமம் ஏற்படுவது
- திடீரென்று விறைப்புத்தன்மையை இழப்பது
சிகிச்சை
ஆணுறுப்பு முறிவை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம். ஆண்குறி எலும்பு முறிவு என்பது தாங்க முடியாத வலியுடன் கூடிய காயம் ஆகும். ஆண்குறி எலும்பு முறிவு ஒரு ஆணின் சிறுநீரின் செயல்பாடு மற்றும் பாலுறவு நிரந்தரமாக செயல்படுவதை பாதிக்கும் திறன் கொண்டது. அறுவை சிகிச்சை மூலம் இதனை விரைவில் குணமாக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

