Latest Updates
-
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களின் மார்பகங்கள் பெரிதாகவும், தளர்வாகவும் மாற காரணம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த நிலை பொதுவாக வயதான ஆண்கள் மற்றும் டீனேஜ் சிறுவர்களில் காணப்படுகிறது.
சில ஆண்களுக்கு மார்பகங்கள் பெண்களைப் போல பெரிதாக இருக்கும். தசை அதிகரிப்பு காரணமாக இது இயற்கையானதாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதற்கு கின்கோமாஸ்டியா நிலை காரணமாக இருக்கலாம். இது வீக்கத்தின் காரணமாக ஒரு ஆணின் மார்பகங்களை இயல்பை விட பெரிதாக்குகிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த நிலை பொதுவாக வயதான ஆண்கள் மற்றும் டீனேஜ் சிறுவர்களில் காணப்படுகிறது. சிலர் அதனுடன் வாழக் கற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இந்த நிலைக்கு சிகிச்சைப் பெற முயலுகிறார்கள்.

இந்த பதிவில் கின்கோமாஸ்டியா என்றால் என்ன அதற்கான சிசிச்சை முறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கின்கோமாஸ்டியா ஏற்பட காரணங்கள் என்ன?
கின்கோமாஸ்டியா ஏற்பட முக்கியக் காரணம் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மை. உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்போது, அது மார்பக விரிவாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, சில மருந்துகள் மார்பக திசுக்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தும், இதனால் அவை கனமாகவும், பெரிதாகவும் மாறும். பொதுவாக, வீக்கம் காலப்போக்கில் குறையும், அப்படிக் குறையவில்லை என்றால், அவர்கள் மருத்துவரை சந்தித்து உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். கின்கோமாஸ்டியா ஏற்பட பிற காரணங்கள்:
- ஹார்மோன் சமநிலையின்மை
- விரை விதை புற்றுநோய்
- தைராய்டு பிரச்சனை
- மதுப்பழக்கம்
- உடல் பருமன்
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்
- நுரையீரல் நோய் அல்லது நுரையீரல் புற்றுநோய்
- சில மருந்துகள்
அறிகுறிகள்
வயதுக்கு ஏற்ப, ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவதால் இந்த நிலை உருவாகிறது. அதிக உடல் கொழுப்பு மற்றும் குறைந்த ஆண் ஹார்மோன் அளவுகள் உங்கள் மார்பை கொழுப்பு நிறைந்ததாக மாற்றும். கின்கோமாஸ்டியாவின் ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
- மென்மையான மார்பகங்கள்
- உணர்திறன் மார்பகக்காம்புகள்
- விரிவாக்கப்பட்ட மார்பக திசு
- மார்பக அளவு அதிகரிக்கும்
கின்கோமாஸ்டியாவைக் கண்டறிவது எப்படி?
கின்கோமாஸ்டியாவிற்கான சிகிச்சையைப் பெறுவதற்கு, சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது மிகவும் அவசியம். இந்த பிரச்சினைகளை வெளிப்படையாகக் காட்டும் சில அறிகுறிகள் உள்ளன. உங்கள் மார்பகங்களில் அசாதாரணமான ஒன்றை நீங்கள் கண்டறிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும், இந்த நிலையைக் கண்டறிய இரண்டு வழிகள் உள்ளன.
- மார்பக திசுக்களில் வீக்கத்தைக் கண்டறிய மார்பகங்களின் அல்ட்ராசவுண்ட்
- உடலில் உள்ள ஹார்மோன் அளவை சரிபார்க்க இரத்த பரிசோதனைகள்
இந்த இரண்டு சோதனைகளும் நேர்மறையாக இருந்தால், கின்கோமாஸ்டியா உறுதி செய்யப்படும்.
கின்கோமாஸ்டியா சிகிச்சை
கின்கோமாஸ்டியாவின் சிகிச்சை அதன் காரணத்தைப் பொறுத்தது. பருவ வயதில் இருக்கும் ஒரு ஆணுக்கு மார்பக விரிவாக்கம் இருந்தால், அதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. இது காலப்போக்கில் தானாகவே போய்விடும். அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, இருப்பினும், இது நிலை, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் நோயாளியின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து மாறுபடும்.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கின்கோமாஸ்டியா ஏற்படுகிறது என்றால், அதற்கு சிகிச்சை தேவைப்படலாம். மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை விருப்பங்கள் இரண்டும் விரிவாக்கப்பட்ட மார்பகங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். இது அடிப்படை சிக்கலைப் பொறுத்தது.
லிபோசக்ஷன்
இது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும், இந்த முறையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மார்பகங்களில் இருந்து கூடுதல் கொழுப்பை அகற்றி அவற்றை சாதாரண வடிவத்திற்கு கொண்டு வருவார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
