For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி... எப்படி வேலைசெய்யும் தெரியுமா?

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் ஓரளவிற்கு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர்.

|

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் ஓரளவிற்கு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மூன்றாவது அலைகுறித்த அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் அவர்களுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பெற்றோர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

Zydus Cadilas ZyCov-D vaccine approved for children above 12 years in India: All you Need Know About Vaccine in Tamil

பெற்றோர்களின் கவலையை ஓரளவிற்கு போக்கும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Zydus Cadila's Covid-19 தடுப்பூசி ZyCoV-D ஆனது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இன்னும் தங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டிய சூழலில்தான் உள்ளனர். இந்த தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று டோஸ் தடுப்பூசி

மூன்று டோஸ் தடுப்பூசி

ZyCoV-D என்பது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசி மற்றும் இது மூன்று டோஸ் தடுப்பூசி ஆகும். இது அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஊசி இல்லாத உட்செலுத்தியைப் பயன்படுத்தி இதைப் பயன்படுத்தலாம்.

டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி

டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி

கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி இதுவாகும். தடுப்பூசி, உட்செலுத்தப்படும் போது, SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்குகிறது மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்துகிறது, இது நோயிலிருந்து பாதுகாப்பதிலும், வைரஸ் அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிளாஸ்மிட் டிஎன்ஏ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட "ப்ளக்-அண்ட்-ப்ளே" தொழில்நுட்பம், வைரஸின் பிறழ்வுகளைச் சமாளிக்க எளிதாக மாற்றியமைக்கக் கூடியது.

MOST READ: இந்தியாவில் விலைமதிப்பற்ற புதையல்கள் இருக்கும் ரகசிய இடங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

ஆறாவது தடுப்பூசி

ஆறாவது தடுப்பூசி

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் தடுப்பூசிகளுக்குப் பிறகு நாட்டில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறும் ஆறாவது தடுப்பூசி இதுவாகும். இவற்றில், கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தற்போது பயன்பாட்டில் உள்ளன.

எவ்வளவு டோஸ் கிடைக்கும்?

எவ்வளவு டோஸ் கிடைக்கும்?

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நாட்டில் உள்ள மக்களுக்கு 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாராக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சைடஸ் காடிலா ஐந்து கோடி டோஸ் வழங்குவார் என்று கூறியிருந்தார். Zydus Cadila ஒரு அறிக்கையில் ZyCoV-D இன் ஆண்டுதோறும் 10-12 கோடி டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

MOST READ: உங்களுக்கு பாலியல் ஆசைகள் அதிகமாக இருக்கா? அப்ப இதுதான் அதற்கு காரணமாம்... ஷாக் ஆகாதீங்க...!

எப்படி செயல்படும்?

எப்படி செயல்படும்?

ZyCov-D தடுப்பூசி சோதனைகளின் கட்டம் 1, 2 மற்றும் 3 ஐ நிறைவு செய்துள்ளது. 28,000 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, அவர்களில் 1,000 பேர் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். மருத்துவ பரிசோதனையின் முடிவு 66 சதவீத செயல்திறனைக் காட்டியது. சோதனை தரவுகளின்படி, தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும் போது தடுப்பூசி எடுத்த பிறகு 67 சதவீத மக்கள் கொரோனா பாசிட்டிவ் அடையவில்லை. இரண்டு டோஸ் கடுமையான அறிகுறிகளைத் தடுக்கும் அதே வேளையில், மூன்று அளவுகள் மிதமான அறிகுறிகளைக் கூட விலக்கி வைத்திருப்பதாக சோதனை தரவு காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zydus Cadila's ZyCov-D vaccine approved for children above 12 years in India: All you Need Know About Vaccine in Tamil

Read to know about Zydus Cadila's ZyCov-D vaccine which approved for children above 12 years in India.
Story first published: Saturday, August 21, 2021, 17:42 [IST]
Desktop Bottom Promotion