For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 யோகாசனங்கள்!

நமது உடலை நோயில்லாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு யோகா பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய மற்றும் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய முக்கியமான 5 யோகாசனங்களை பார்க்கலாம்.

|

நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் வளர்த்து அதன் மூலம் கோவிட்-19 என்ற உயிர்க்கொல்லி நோய், வழக்கமாக வரும் நோய்கள் மற்றும் நோய் தொற்றுகள் போன்றவற்றிலிருந்து நமது உடலை காக்க வேண்டியது நமது கடமையாகும். அவ்வாறு நமது உடலை நோயில்லாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு யோகா பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

Yoga For Immunity: 5 Yoga Asanas Which Will Help You Fight Illnesses

யோகா ஒரு பாரம்பரியமான பயிற்சி மட்டும் அல்ல. அது நமது உடலின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது. அதோடு நமது முழுமையான உடல் நலத்திற்கு உத்திரவாதம் வழங்குகிறது. பல நூற்றாண்டுகளாக மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் நல்தகுதியுடனும் வைத்திருக்க யோகா பயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றனர். யோகா புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் தருகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் எதிர்மறையான சக்தியைக் களைந்து நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. நாம் உள்ளும் புறமும் எதிர்ப்பாற்றலுடன் இருக்க யோகா உதவுகிறது.

MOST READ: நற்செய்தி! இந்த டயட் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் - ஆய்வில் தகவல்

யோகாவிலுள்ள சில குறிப்பிட்ட ஆசனங்கள் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊக்கம் கொடுக்கின்றன. உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களை எதிர்த்து யோகாசனங்கள் போரிடுகின்றன. ஆகவே யோகா பயிற்சிகளைத் தினமும் செய்து வந்தால் உடல் அழுத்தத்தைக் குறைக்கும். உடல் வீக்கம் மற்றும் உடல் மெலிதல் போன்றவற்றைத் தடுக்கும். அதோடு நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும்.

MOST READ: உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...

நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய மற்றும் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய முக்கியமான 5 யோகாசனங்களை இங்கு பார்க்கலாம். எனினும் இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் மற்றும் சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனங்களை செய்வதற்கு முன்பு தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள் - அது என்ன அறிகுறி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வஜ்ராசனம் (Vajrasana)

வஜ்ராசனம் (Vajrasana)

5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வஜ்ராசனம் செய்தாலே நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வஜ்ராசனம் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தடையின்றி இரத்தம் செல்ல உதவுகிறது. அதனால் கல்லீரல் தனது பணியை செவ்வனே செய்ய உதவுகிறது. மேலும் வஜ்ராசனம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் அமைதியாகவும் அதே நேரத்தில் நிலையாகவும் வைத்திருக்கிறது. அதனால் தேவையற்ற அழுத்தங்கள் நம்மை அண்டவிடாமல் காக்கிறது.

பத்த கோனாசனா (Baddha Konasana)

பத்த கோனாசனா (Baddha Konasana)

செருப்புத் தைப்பவர் அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் பத்த கோனாசனா என்ற யோகாசனம் நமது இடுப்புகளுக்கு நெகிழ்வுதன்மையைக் கொடுப்பதோடு, நமது குடலுக்கு சீராக இரத்தம் செல்ல உதவுகிறது. யோகா பயிற்சிகளில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு இந்த பத்த கோனாசனா ஆசனம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆசனம் முழுமையான ஆரோக்கியத்தையும் நல்குகிறது. குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் அவர்களின் செரிமான பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

நவுக்காசனம் (Naukasana)

நவுக்காசனம் (Naukasana)

நவுக்காசனம் இரண்டு முக்கியமான பலன்களை நமக்குத் தருகிறது. முதலாவது நமது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்துகிறது. இரண்டாவது நமது முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், கணையம் மற்றும் குடல் போன்றவற்றிற்கு ஆரோக்கியம் தருகிறது. மேலும் நமது இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலில் செரிமான அமைப்பு நன்றாக இருந்தால், அந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்கும். நவுக்காசனம் நமது செரிமான அமைப்பையும் சீர்படுத்துகிறது.

திரிபாதசனம் (Tripadasana)

திரிபாதசனம் (Tripadasana)

திரிபாதசனம் என்ற யோகாசனம் நம்மை சமமான நிலையில் வைத்திருக்கக்கூடிய ஒரு ஆசனம் ஆகும். இந்த ஆசனம் நமது மூளையைத் தூண்டி நமது ஒருமுகப்படுத்தும் சக்தியை மேம்படுத்துகிறது. அதனால் நம்மிடம் இருக்கும் அழுத்தங்கள் முழுமையாக மறைந்துவிடும். மேலும் இந்த ஆசனத்தைத் தவறாது செய்து வந்தால் அது நமது உடல் உறுப்புகளை வலுப்படுத்துவதோடு, நமது அழுத்தங்களையும் குறைத்து நம்மை புத்துணர்ச்சியோடு வாழ வைக்கும்.

பாதஹஸ்தாசனா (Padahastasana)

பாதஹஸ்தாசனா (Padahastasana)

பாதஹஸ்தாசனா, அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்யும் போது இந்த ஆசனம் செய்யப்படுகிறது. இந்த ஆசனம் செரிமான பிரச்சினைகளைக் களைகிறது. இரத்த ஓட்டம் எளிதாக இருக்க உதவுகிறது. மேலும் நமது உடலை உற்சாகம் நிறைந்ததாகவும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga For Immunity: 5 Yoga Asanas Which Will Help You Fight Illnesses

Here are top 5 yoga asanas which will help you fight illnesses. Read on...
Desktop Bottom Promotion