Just In
- 22 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 57 min ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- News
ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Movies
மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
- Automobiles
விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
எச்சரிக்கை! இந்த எடை இழப்பு வழிகள் ஒருவரை விரைவில் முதுமையடைய வைத்துவிடுமாம்.. கவனமா இருங்க...
இன்று பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு, அவற்றைக் குறைக்க பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். நீங்களும் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால், அவற்றில் சில எடை இழப்பு வழிகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக ஒருவரை விரைவில் முதுமையடையச் செய்துவிடும்.
சில எடை இழப்பு குறிப்புகள் ஒருவரது உடலை வேகமாக முதுமையடையச் செய்து, விரைவில் முதுமைத் தோற்றத்தை தந்துவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைப்பதற்கு கண்மூடித்தனமாக கண்ட வழிகளைப் பின்பற்றுவதற்கு பதிலாக, முதலில் அந்த வழிகளைப் பின்பற்றினால், அது உடல் ஆரோக்கியத்தில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தம் என்பதை அறிந்து பின்னரே பின்பற்ற வேண்டும். இப்போது எந்த எடை இழப்பு வழிகள் ஒருவரை விரைவில் முதுமையாக்கும் என்பதைக் காண்போம்.

கலோரிகளை மட்டும் குறைப்பது
எடையைக் குறைக்க பலர் கலோரிகளில் கவனம் செலுத்துவார்கள். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு கலோரிகளுக்கு மேல் எடுக்காத வரை, எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது உதவாது. ஏனெனில் கலோரிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், பலர் பதப்படுத்தப்பட்ட, குறைந்த ஊட்ச்சத்துக்கள் நிறைந்த மற்றும் போதுமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நிறைவுறா கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். ஆய்வுகளில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் உள்ள செல்களின் வயதை விரைவுடுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த உணவுகளில் ஹைட்ரஜனேட்டட் எண்ணெக்ள் அதிகளவில் உள்ளன. இவை டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்தவை மற்றும் உடலில் நாள்பட்ட அழற்சியை ஊக்குவித்து, செல்களை முதுமையடையச் செய்கிறது.

போதுமான புரோட்டீனை எடுக்காமல் இருப்பது
பல எடை குறைப்பு வழிகள் கலோரி உட்கொள்ளலில் மட்டுமே கவனம் செலுத்துவதால், மக்கள் போதுமான அளவு புரோட்டீனை உட்கொள்ள மறந்துவிடுகிறார்கள். ஒருவர் உடல் எடையைக் குறைக்கும் போது புரோட்டீனை போதுமான அளவு எடுக்காவிட்டால், அது ஆரோக்கியமற்ற முதுமைத் தோற்றத்தை ஊக்குவிக்கும். ஆகவே என்ன தான் எடையைக் குறைக்க கலோரியில் கவனம் செலுத்தினாலும், புரோட்டீனையும் தவறாமல் எடுக்க வேண்டியது முக்கியம்.

உணவு மாற்று பொருட்கள்
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது புரோட்டீன் ஷேக்குகள் அல்லது பார்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், அவற்றை எப்போதாவது மட்டும் சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த தயாரிப்புகள் அதிகம் பாப்படுத்தப்பட்டவை மற்றும் சர்க்கரை அதிகம் நிறைந்தவை. அதிகளவிலான சர்க்கரையை உட்கொள்வது நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மற்றும் முதுமை செயல்முறையை வேகப்படுத்தும்.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது
பலர் எடையைக் குறைக்கும் போது, கார்போஹைட்ரேட் உணவுகள் தீயவை என்று நினைக்கிறார்கள். ஆகவே தங்களின் வழக்கமான உணவில் இருந்து சாதம் மற்றும் சப்பாத்தியை குறைத்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் பழங்கள், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை அகற்றுவது உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளைத் தடுப்பதோடு, முதுமை செயல்முறையை வேகமாக்கும். எனவே கார்போ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடாதீர்கள்.

அனைத்து கொழுப்புக்களையும் தவிர்ப்பது
ஆரோக்கியமான கொழுப்பு உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போதும், உடலுக்கு மிகவும் தேவையானது. எனவே எடையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமற்ற மற்றும் தொகுக்கப்பட்ட கொழுப்பு உணவுகளை மட்டும். கைவிடுங்கள். ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், விதைகள், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது சால்மன் ஆகியவற்றை உணவில் சேர்த்து வாருங்கள். இவை இதயத்திற்கு மட்டுமின்றி, மூளைக்கும் அவசியம்.

உணவு மற்றும் முதுமை
ஒருவரின் நீண்ட ஆயுளில் உணவு முக்கிய பங்கை வகிக்கிறது. தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வருவதற்கான அபாயம் 50% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். முக்கியமாக உடலுக்கு வேண்டிய சத்துக்கள் தினமும் தவறாமல் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.