For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மல்லி விதை வைத்து செய்யும் இந்த பானம் உங்க உடலை இரும்பு போல மாற்றுமாம்...!

|

ஆயுஷ் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட்-19 வழிகாட்டுதலின் படி, கொத்தமல்லி விதை உட்செலுத்தப்பட்ட வெதுவெதுப்பான நீர் ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும். இந்தியர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் மிகவும் சத்தான மசாலாப் பொருட்களில் ஒன்று கொத்தமல்லி. கொத்தமல்லியைப் போன்றே மல்லி விதைகளும் நல்ல மணத்துடன் இருக்கும். இது உணவின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.

மனித உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நீங்கள் ஒரே ஒரு தீர்வைத் தேடுகிறீர்களானால், கொத்தமல்லி கலந்த இந்த பானத்தின் நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி அறிய இக்கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொத்தமல்லி விதை பானம் செய்வது எப்படி?

கொத்தமல்லி விதை பானம் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தை எடுத்து, 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை 2 கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். மற்றொரு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு, இறக்கிவிட வேண்டும். சிறிது நேரம் குளிர்விக்கவும், பின்னர், வடிக்கட்டி குடிக்கவும்.

MOST READ: உங்க அந்தரங்க பகுதியில 'இத' செஞ்சத்துக்கு அப்புறம் நீங்க இந்த விஷயங்கள செய்யக்கூடாதாம் தெரியுமா?

வெப்பத்தை குறைக்கும்

வெப்பத்தை குறைக்கும்

அதிகப்படியான காரமான உணவை உட்கொள்வதால் உங்கள் வயிற்றில் அதிக எடை அல்லது வெப்பம் இருக்கும். அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, கொத்தமல்லி விதை தண்ணீரை ஒரு நாளைக்கு 3-5 முறை குடிக்கவும். ஏனெனில், அதன் குளிரூட்டும் பண்புகள் உடனடியாக முடிவுகளை உங்களுக்கு காண்பிக்கும்.

செரிமானத்தில் பயனுள்ளதாக இருக்கும்

செரிமானத்தில் பயனுள்ளதாக இருக்கும்

கொத்தமல்லி விதை பானம் பெரும்பாலும் எடை இழப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் கொத்தமல்லி விதைகளில் செரிமான பண்புகள் உள்ளன, அவை செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் எடை இழப்பு பயணத்தில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

நீங்கள் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் சிறுநீரகங்கள் பலவீனமாக இருந்தால், தினமும் கொத்தமல்லி விதை தண்ணீரைக் குடிக்கத் தொடங்குங்கள். ஏனெனில் இது உடலில் நீர் தக்கவைப்பை குறைக்க வழிவகுக்கிறது மற்றும் அனைத்து வகையான நச்சுகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் வெளியேற்ற உதவுகிறது.

MOST READ: உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க 'இந்த' உணவுகள் போதுமாம்...!

கீல்வாதம் வலியை நீக்குகிறது

கீல்வாதம் வலியை நீக்குகிறது

இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் படி, கொத்தமல்லி விதை மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்த விதைகளில் லினோலிக் அமிலம் மற்றும் சினியோல் போன்ற சேர்மங்கள் நிரம்பியுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மூட்டு அழற்சி வலி மற்றும் வீக்கத்திற்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

கொத்தமல்லி விதை இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். மேலும் கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி நீரை தினமும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why one must have drink Dhania (Coriander) water daily

Here we are talking about the Why one must have drink Dhania (Coriander) water daily.
Story first published: Saturday, May 8, 2021, 13:40 [IST]