Just In
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 2 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
- 2 hrs ago
மா இலைகளை இப்படி சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் வராதாம் தெரியுமா?
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும்...
Don't Miss
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு.. படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Movies
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
- News
பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்!
- Technology
நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?
- Sports
"ஆத்தாடி.. இவ்ளோ உயரமா?? " போல் வால்ட்டில் உலக சாதனை படைத்த ஸ்வீடன் வீரர்.. வியப்பில் ரசிகர்கள்!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
நாம் அனைவருமே மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகளை சூப்பர் மார்கெட்டுகளில் பார்த்திருப்போம். ஆனால் அதை வாங்கமாட்டோம். ஏனெனில் அதன் நன்மைகள் பற்றி நமக்கு தெரியாது. இருப்பினும், மக்கானா உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாக கருதப்படுகிறது. இதன் சுவை எவ்வளவு அற்புதமானதோ, அதே அளவில் நன்மைகளையும் தருகிறது. குறிப்பாக மக்கானா ஆண்களுக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால் இது திருமணமான ஆண்களுக்கு ஒரு அற்புத மருந்தாக செயல்படுகிறது.
மக்கானா ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாக இருக்கும். அதோடு இது எங்கும் எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும் மற்றும் இது பசியை விரைவில் ஆற்றும். மேலும் மக்கானாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இதில் க்ளுட்டன் இல்லை. இப்போது திருமணமான ஆண்கள் மக்கானாவை சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

ஆண்மை குறைவு நீங்கும்
தற்போதைய வாழ்க்கை முறையால் ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு குறைந்து, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதோடு பல ஆண்களின் விந்தணுக்களின் தரமும் குறைவாக இருப்பதால், தந்தையாவதில் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிதாக திருமணமான ஆண்கள் மக்கானாவை தினமும் உட்கொண்டு வந்தால், ஆண்களின் கருவுறுதல் திறன் மேம்படும்.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்
ஆண்கள் தொடர்ச்சியாக மக்கானாவை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தி சிறப்பாக இருக்கும். இந்த ஹார்மோன் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது.

பாலியல் ஆசையை அதிகரிக்கும்
வயது அதிகரிப்பதன் காரணமாக பல ஆண்களுக்கு பாலியல் ஆசை குறையத் தொடங்குகிறது. இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கானாவை ஆண்கள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அவர்களின் பாலியல் ஆசை அதிகரிப்பதோடு, அனைத்து வகையான பாலியல் பிரச்சனைகளும் நீங்கும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் பலவீனம் நீங்கும்
உடல் பலவீனமும் திருமணமான ஆண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால் மக்கானாவை ஆண்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தசைகள் வலுவடைவதோடு, உடலும் ஃபிட்டாக இருக்கும். ஏனெனில் மக்கானாவில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது.

எலும்புகளுக்கு நல்லது
மக்கானாவில் கால்சியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிடுவது எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்லது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உடலை மன அழுத்தத்தில் இருந்து விலக்கி வைக்கிறது.

எடை குறையும்
மக்கானாவை உட்கொள்வதன் மூலம், ஆண்கள் உடல் எடையை குறைக்கலாம். இதில் புரோட்டீன் இருப்பதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். அதோடு அதிகளவு உண்பதையும் தடுக்கிறது. எனவே நீங்கள் பசி எடுக்கும் போது கண்டதை சாப்பிடாமல் சிறிது மக்கானாவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் வயிற்றை நிரப்பலாம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்
தற்போது ஆண்கள் இதய பிரச்சனையால் அதிகம் இறக்கிறார்கள். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மக்கானா பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மக்கானாவில் மக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளையே உள்ள வேண்டும் என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். மக்கானாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.

இளமையை தக்க வைக்கும்
மக்கானா ஒரு சுவையான ஆன்டி-ஏஜிங் உணவுப் பொருள். மக்கானாவில் ஆன்டி-ஏஜிங் நொதிகள் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த புரோட்டீன்களை சரிசெய்ய உதவுகின்றன. முக்கியமாக இதில் முதுமையை குறைக்க உதவும் கெம்ப்ஃபெரோல் என்னும் ப்ளேவோனாய்டு உள்ளது. ஆகவே நீண்ட காலம் இளமையாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டால், மக்கானாவை சாப்பிடுங்கள்.