Just In
- 59 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
பல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் தீவிரம் இரவு நேரத்தில் தான் மோசமடைகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தரவுகளின் படி, சுமார் 75% பேர் இரவு நேரத்தில் ஆஸ்துமாவின் தீவிரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்துமா ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. இப்பிரச்சனை தனக்கு இருப்பதைக் கண்டறிந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது மெதுவாக மோசமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் தீவிரம் இரவு நேரத்தில் தான் மோசமடைகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தரவுகளின் படி, சுமார் 75% பேர் இரவு நேரத்தில் ஆஸ்துமாவின் தீவிரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த ஆஸ்துமாவைக் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமா குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து உஷாராக இருங்கள்.
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா என்பது ஒரு கடுமையான நிலை. இந்நிலையில் சுவாசப்பாதைகள் வீங்கி சுருக்கமடைந்து, சுவாசிக்கும் செயல்முறையில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த நிலையானது சுவாசப் பாதையின் உள்ளே சளி உற்பத்திக்கு வழிவகுக்கும். இந்நிலையைக் கொண்டவர்கள் சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அதே நேரம் இது வேறு சில கடுமையான உடல்நல பிரச்சனைகளையும் தூண்டலாம்.
ஆஸ்துமாவை எது தூண்டுகிறது?
இரவு நேரத்தில் ஆஸ்துமா தூண்டப்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் நடத்தை, சுற்றுச்சூழல், உடற்பயிற்சி, காற்றின் வெப்பநிலை, தோரணை மற்றும் தூங்கும் இடத்தின் சூழல் ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே ஆஸ்துமாவின் தீவிரத்திற்கு முக்கிய காரணிகளாகும்.
ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத எச்சரிக்கை அறிகுறிகள்
முன்பே கூறியது போல, ஆஸ்துமா இரவில் அதன் அறிகுறிகளைத் தூண்டலாம். ஒருவரை அமைதியாக கொல்லும் இந்நிலையைக் கட்டுப்படுத்த ஒரே வழி, அதன் அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சையை வேகமாக தொடங்குவதாகும். கீழே ஆஸ்துமாவின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
மூச்சுத் திணறல்
ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். எப்போதுமே சுவாசிப்பதில் ஒருவர் சிரமத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சொல்லப்போனால், ஆஸ்துமா நிலை மிகவும் தீவிரமடைந்துள்ளதற்கான முதல் எச்சரிக்கை அறிகுறியாக மூச்சுத் திணறல் இருக்கலாம்.
நாள்பட்ட நெஞ்சு வலி
நள்ளிரவில் திடீரென்று நெஞ்சு வலியை அனுபவித்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா இருந்து நெஞ்சு வலியை சந்தித்தால், அது ஆஸ்துமா தீவிரமடைகிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறியை சாதாரணமாக எடுக்காதீர்கள்.
தூங்குவதில் சிரமம்
ஆஸ்துமா தீவிரமாக இருக்கும் போது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் திடீரென இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டால், அதை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக கருதி, விரைவில் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.