For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா?

நோய்த்தொற்றுகளின் முதல் அலைகளின் போது மக்கள் வித்தியாசமான, கணிக்க முடியாத அறிகுறிகளை அனுபவித்தாலும், தொற்று தீவிரமாகிவிட்டால் அறிகுறிகள் சீரானதாக இருக்கும்.

|

இந்தியாவில் நோய்த்தொற்றுகளில் கடுமையான உயர்வு இருந்தாலும், நோயாளிகளின் குணமடையும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தொற்றைப் பற்றி இன்னும் முழுமையாக தெரியாததால் இலேசான கொரோனா தொற்றுக்கூட மோசமான நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Why Day 5 To 10 Are So Crucial For COVID Positive Patients?

நோய்த்தொற்றுகளின் முதல் அலைகளின் போது மக்கள் வித்தியாசமான, கணிக்க முடியாத அறிகுறிகளை அனுபவித்தாலும், தொற்று தீவிரமாகிவிட்டால் அறிகுறிகள் சீரானதாக இருக்கும். 14-நாள் மீட்புக் காலத்தின் 5-10 நாட்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதற்கும் இதுவே காரணமாகும், மேலும் குணமடையும் காலக்கட்டத்தில் கவனிக்க வேண்டிய நாட்களாக இது பெரும்பாலும் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குணமடையும்போது அறிகுறிகளைக் கண்காணிப்பது ஏன் முக்கியம்?

குணமடையும்போது அறிகுறிகளைக் கண்காணிப்பது ஏன் முக்கியம்?

பெரும்பாலான COVID-19 வழக்குகள் இயற்கையாகவே லேசானவை மற்றும் வீட்டிலேயே நன்கு நிர்வகிக்கப்படலாம் என்றாலும், அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் குணமடையும் காலக்கட்டத்தில் இருந்தாலோ அல்லது சமீபத்தில் பாசிட்டிவ் முடிவை பெற்றிருந்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நீங்கள் குணமடைவது முற்றிலும் அறிகுறிகளைப் பொறுத்தது

நீங்கள் குணமடைவது முற்றிலும் அறிகுறிகளைப் பொறுத்தது

நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கும். பலர் மிகவும் லேசான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் அல்லது அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், உங்கள் நோய்த்தொற்றின் உண்மையான தீவிரத்தை 5-10 நாள் மட்டுமே தீர்மானிக்க முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 5 முதல் 10 நாட்கள் நீங்கள் COVID க்குப் பின் பாதிக்கப்படக்கூடிய சிக்கல்களின் சாத்தியக்கூறுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம், மேலும் உங்கள் நோய்த்தொற்றின் உண்மையான தீவிரத்தை குறிக்கலாம்.

5 ஆம் நாள் தொற்றின் இரண்டாம் கட்டத்தில் நுழைவீர்கள்

5 ஆம் நாள் தொற்றின் இரண்டாம் கட்டத்தில் நுழைவீர்கள்

நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை அனுபவிப்பார்கள். இருப்பினும், நோய்த்தொற்றின் 'இரண்டாவது கட்டம்' எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றில், நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோயை அழிப்பதற்காக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறத., இது 6 அல்லது 7 ஆம் நாளிலிருந்து தொடங்கலாம். COVID-க்கு எதிரான உங்களின் உண்மையான போர் அப்போதுதான் தொடங்கும். இரண்டாம் கட்டத்தில் நிலை மோசமடைவதற்கு முன் வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

MOST READ: மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா?

அதிக கவனம் தேவைப்படும் அறிகுறிகள்

அதிக கவனம் தேவைப்படும் அறிகுறிகள்

5-10 நாட்கள் அறிகுறிகளின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். அறிகுறிகள் மோசமடைவதால் மட்டுமே, அவர்கள் குணமடையத் தொடங்குவதை சிலர் உணரலாம். ஆக்ஸிஜன் செறிவு அளவு குறைதல், மயக்கம், காய்ச்சல் அதிகரிப்பது போன்ற மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இது இருக்கலாம். நோயாளிகள் சுவாச அறிகுறிள் மோசமடைதல், மார்பில் வலி, சுவாச பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஹைபோக்ஸியா என்பது மற்ற அறிகுறிகள் இல்லாமல் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும்போது ஏற்படும் முக்கியமான நிலையாகும், இது நோய்த்தொற்றின் இரண்டாம் கட்டத்திலும் ஏற்படக்கூடும்.

இரண்டாம் கட்டத்தால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

இரண்டாம் கட்டத்தால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

ஆரோக்கிய பிரச்சினைகள், வயது போன்றவை உங்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாக இருக்கலாம். மருத்துவர்கள் பலமுறை பரிந்துரைத்தவற்றிலிருந்து, நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உடல் பருமன், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்கள் இரண்டாம் கட்டத்தில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படுவதால் இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமான நோயாளிகள் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

MOST READ: உங்க ராசிப்படி உங்களின் ஆழ்மனதில் இருக்கும் விபரீதமான பாலியல் ஆசைகள் என்னென்ன தெரியுமா?

நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

COVID-19 இன் தீவிரம் கவலைக்குரிய ஒரு தீவிரமான காரணமாக இருக்கலாம், மேலும் அது ஆபத்தானதாக மாறக்கூடும். எனவே அறிகுறிகளை கண்டறிவது மற்றும் அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியம். கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்படும் பேரழிவை நாம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே சரியான கவனிப்பு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவமனை சிகிச்சை தேவை. எனவே உங்கள் மருத்துவ பராமரிப்பு ஆலோசகருடன் எப்போதும் தொடர்பில் இருங்கள், உங்கள் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்கவும். உங்களின் அறிகுறிகளைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சையை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Day 5 To 10 Are So Crucial For COVID Positive Patients?

Read to know why day 5 to 10 are so crucial for COVID positive patients.
Story first published: Wednesday, May 12, 2021, 14:05 [IST]
Desktop Bottom Promotion