For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் மஞ்சள் பால் குடிக்கக்கூடாது தெரியுமா?

மஞ்சள் சூடான பண்புகளைக் கொண்டதால், உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் பாலை குடிக்கவே கூடாது. இது தவிர வேறு சிலரும் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது.

|

பொதுவாக சளி அல்லது இருமல் போன்ற உடல்நலம் சரியில்லாத போது மஞ்சள் பால் குடிக்க நமது பாட்டிமார்கள் எப்போதும் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் மஞ்சள் பாலில் உடலினுள் ஏற்படும் காயங்களை விரைவில் குணப்படுத்தும் சக்தி உள்ளது. அதே வேளையில், சளி பிடித்திருக்கும் போது மஞ்சள் பால் குடித்தால் விரைவில் குணமாகிவிடும். மஞ்சளானது சூடான பண்புகளைக் கொண்டது. எனவே தான் சளி பிடித்திருக்கும் போது மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும் போது, சளி கரைந்து வெளியேறுகிறது.

Which People Should Not Consume Turmeric Milk

மஞ்சள் சூடான பண்புகளைக் கொண்டதால், உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் பாலை குடிக்கவே கூடாது. இது தவிர வேறு சிலரும் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது. இப்போது யாரெல்லாம் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மஞ்சள் கலந்த பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது. மஞ்சள் பால் மிகவும் சூடாக இருக்கும். கல்லீரல் பிரச்சனையோடு மஞ்சள் பாலைக் குடிக்கும் போது, அது கல்லீரல் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கிவிடும். எனவே தான் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பாலைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைப் பெற்று கொள்ள நினைக்கும் ஆண்கள்

குழந்தைப் பெற்று கொள்ள நினைக்கும் ஆண்கள்

புதிதாக திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் ஆண்கள் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பாலைக் குடிப்பது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது. இது தவிர, மஞ்சள் பால் விந்தணுக்களின் செயல்பாட்டில் பெரும் குறைவை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட ஆரம்பித்து, குழந்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும்.

சூடான உடலைக் கொண்டவர்கள்

சூடான உடலைக் கொண்டவர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வெப்பநிலை வேறுபட்டிருக்கும். ஒருவரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, ஒருபோதும் மஞ்சள் பால் குடிக்கக்கூடாது. சூடான விளைவைக் கொண்ட மஞ்சள் பாலை குடிக்கும் போது, அது உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக அவர்கள் பரு பிரச்சனைகள், அமைதியின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது. ஒருவேளை குடித்தால், அவர்களின் வயிற்றில் வெப்பம் அதிகரித்து, கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே தான் கர்ப்பிணி பெண்களை மஞ்சள் பால் குடிக்கக்கூடாது என்று கூறுகின்றனர். குறிப்பாக கர்ப்பமான ஆரம்ப காலத்தில் குடிப்பது சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which People Should Not Consume Turmeric Milk

In this article, we will tell you which people should not consume turmeric milk. Read on to know more...
Story first published: Wednesday, October 27, 2021, 11:31 [IST]
Desktop Bottom Promotion