For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? தடுப்பூசி பற்றிய உண்மைகள்!

கொரோனா தடுப்பூசி நோயை எதிர்த்து போராட சிறந்த வழியாக இருந்தாலும் ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சில குழப்பங்கள் இருக்கிறது.

|

கொரோனாவின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனாத் தடுப்பூசி வைரஸை எதிர்த்து போராடவும், ஆபத்தான நிலை ஏற்படாமலும் தடுக்கிறது.

When Should You Get Vaccinated After Recovering From COVID-19?

கொரோனா தடுப்பூசி நோயை எதிர்த்து போராட சிறந்த வழியாக இருந்தாலும் ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சில குழப்பங்கள் இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணமானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? அல்லது சிறிது இடைவெளி விட்டு போட்டுக் கொள்ள வேண்டுமா? எவ்வளவு இடைவெளி விட வேண்டும் என எண்ணற்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குணமான அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்

குணமான அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்

தற்போதைய மதிப்பீடுகளின்படி, அரசு ஒப்புதல் அளித்துள்ள அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் 80% க்கும் மேலாக அறிகுறிகள், தீவிர நிலை, இறப்பு மற்றும் குணமடைய ஆகும் காலம் ஆகியவற்றைக் குறைப்பதில் நம்பமுடியாத அளவிற்கு உறுதியளிக்கின்றன. COVID ஐ மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தடுப்பூசி போடுவது அபாயங்களை திறம்பட குறைக்கும். எனவே, நீங்கள் COVID-ல் இருந்து குணமடைந்து நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தாலும் கூட, தடுப்பூசி பெறுவது உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும், எனவே புறக்கணிக்கக்கூடாது. கொரோனா வைரஸுக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி உண்மையில் எவ்வளவு காலம் நம்மைக் காப்பாற்றும் என்பது நமக்கு தெரியாததால், தடுப்பூசி போடுவது இன்னும் சீரான, நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க உதவுகிறது.

டோஸின் காலம் முக்கியமானது

டோஸின் காலம் முக்கியமானது

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி வாய்ந்த பொதுமக்கள், கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இருப்பினும், குணமடையும் காலத்தில் பாசிட்டிவ் முடிவு வந்தவர்களும், வைரஸ் தாக்கியும் எதிர்மறை முடிவு வந்தவர்களும், சில வாரங்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது ஏனெனில் கொரோனா வைரஸின் கடந்த கால தொற்று ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உங்கள் உடலில் உள்ள ஆன்டிபாடிகளின் அளவு நீங்கள் தடுப்பூசி போடுவதற்கான சிறந்த நேரத்தை தீர்மானிக்க உதவும்.

MOST READ: உங்க ராசிப்படி உங்களின் ஆழ்மனதில் இருக்கும் விபரீதமான பாலியல் ஆசைகள் என்னென்ன தெரியுமா?

எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

சராசரியாக, COVID-19 ஐக் கொண்ட ஒரு நபர் 90-180 நாட்களில் எங்கும் நீடிக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார் என்று ஆய்வுகள் மற்றும் குறிப்பு சான்றுகள் தெரிவிக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, ஒவ்வொருவருக்குமான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடலாம், இது தீவிரமான பாதிப்பு, நாட்பட்ட நோய்கள் மற்றும் நோய்த்தொற்றின் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும். ஆகையால், COVID நோயாளிகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை தீவிரமாக ஊக்குவிக்கும் அதே வேளையில், தொற்றுநோய் தாக்கிய 2-8 வாரங்களுக்கு பின்னர் தடுப்பூசி போடுவது நல்லது. (அதாவது, மீட்பு / தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு).

குணமடைந்த உடனேயே தடுப்பூசி போட்டால் என்ன நடக்கும்?

குணமடைந்த உடனேயே தடுப்பூசி போட்டால் என்ன நடக்கும்?

நோய்த்தொற்று ஏற்பட்ட உடனேயே தடுப்பூசி போடுவது முரணானது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், வைரஸுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதன் வலிமையில் இருக்கும் நேரத்தில் தடுப்பூசி மூலம் பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி பெரிதும் உதவாது. எனவே இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் போது தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

அறிகுறிகளுடன் நெகட்டிவ் வந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

அறிகுறிகளுடன் நெகட்டிவ் வந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

வைரஸின் வளர்ந்து வரும் தன்மையால், பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் தவறான முடிவுகளைப் பெறுகிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் முழுமையாக குணமடையும் வரை, தடுப்பூசி போடுவது நல்லதல்ல. ஒரு தடுப்பூசி போடும் இடத்திற்குச் செல்வது மற்றவர்களுக்கும் தொற்று பரவுவதைத் தூண்டக்கூடும். ஒருவர் முதல் அளவைப் பெற்ற பிறகு கொரோனவால் பாதிக்கப்பட்டால், 2 வார ஓய்வு காலத்தைக் கவனித்து, தடுப்பூசியில் குறிப்பிடப்பட்ட அளவைக் கணக்கிடவும். தவறான நேரத்தில் தடுப்பூசி போடுவது அதனை பயனற்றதாக மாற்றும்.

MOST READ: உங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உ ங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... எச்சரிக்கை!

இரண்டு டோஸ் தடுப்பூசி தேவையா?

இரண்டு டோஸ் தடுப்பூசி தேவையா?

தடுப்பூசி மற்றும் COVID-19 ஐப் பற்றிய கடந்த கால வரலாற்றைச் சுற்றியுள்ள தவறான தகவல்களும் பல உள்ளன. COVID உடையவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். அது முற்றிலும் உண்மை இல்லை. ஒரு தடுப்பூசி டோஸ் முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று சில ஆராய்ச்சி காட்டுகிறது என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இரண்டாவது டோஸ் அவசியம் தேவைப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Should You Get Vaccinated After Recovering From COVID-19?

Read to know when should you get vaccinated after recovering from COVID-19.
Story first published: Friday, May 7, 2021, 11:23 [IST]
Desktop Bottom Promotion