For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்?

|

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவார்கள். இது உண்மை தான். ஏனெனில் ஆப்பிளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆனால் ஆப்பிளை அதிகமாக சாப்பிட்டால், அதனால் ஒருசில பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

When And How Many Apples Are Considered Healthy

ஆப்பிள் எப்போதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் ஆப்பிள் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். இது பல நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு வலிமையை அளிக்கக்கூடியது.

பாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய், கொலஸ்ட்ரால்

இதய நோய், கொலஸ்ட்ரால்

ஆப்பிளில் அத்தியாவசிய பாலிஃபீனால்கள் நிறைந்த பொருளாக கருதப்படுகிறது. இந்த உட்பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிப்பவையாக கருதப்படுகிறது. மேலும் ஆப்பிளில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடும் உட்பொருட்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நார்ச்சத்தைக் கரைக்கக்கூடியப் பொருளைக் கொண்டுள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

ஆனால் ஆப்பிளை ஒருவர் அதிகளவில் உட்கொண்டால், பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? பொதுவாக எந்த ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிட்டாலும், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

ஆப்பிளின் பக்க விளைவுகள்

ஆப்பிளின் பக்க விளைவுகள்

ஆப்பிள் சாப்பிடுவதால் ஒருசில பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா? யாருக்கெல்லாம் ஆப்பிள் ரொம்ப பிடிக்குமோ, அவர்கள் கட்டாயம் ஆப்பிளால் ஏற்படும் தீங்கையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

இந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா?

பற்களை பாதிக்கும்

பற்களை பாதிக்கும்

ஆப்பிளில் அதிகளவு அமிலம் உள்ளது. இந்த அமிலம் குளிர்பானங்களை விட நான்கு மடங்கு அதிகமாக பற்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த மாதிரியான சூழ்நிலையில், ஆப்பிளை அளவாகவே சாப்பிட வேண்டும். இதனால் பற்களில் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவே ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதே போதுமானது.

உடல் பருமன்

உடல் பருமன்

ஆப்பிளில் கலோரிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. 4-5 மிதமான அளவிலான ஆப்பிளில் சுமார் 3,500 கலோரிகள் நிறைந்திருக்கும். இந்த அளவு கலோரியானது உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

கார்போஹைட்ரேட் அதிகம்

கார்போஹைட்ரேட் அதிகம்

ஆப்பிளில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளம். ஆப்பிளில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தான், உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. எப்போது ஒருவர் அதிகளவு ஆப்பிளை சாப்பிடுகிறாரோ, அவர்களது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாக ஆரம்பிக்கும்.

இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆப்பிளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். ஆப்பிளை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் காலை வேளையாகும்.

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம்

ஒரு நாளில் அதிகளவு ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டால், அதனால் எலும்புகள் பாதிக்கப்படும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகர் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அது எலும்பு முறிவை உண்டாக்கும்.

ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத செய்யுங்க...

இதய நோய்களுடன் தொடர்பு

இதய நோய்களுடன் தொடர்பு

ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இதய நோயின் அபாயம் அதிகரிக்கும். ஆப்பிளில் ஃபுருக்டோஸ் அதிகளவு நிறைந்துள்ளது. ஃபுருக்டோஸ் என்பது ஒருவகை சர்க்கரை. எப்போது உடலில் ஃபுருக்டோஸ் அதிகமாக தேங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது உடலில் ட்ரைகிளிசரைடுகளின் உற்பத்தி அதிகரித்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் எது?

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் எது?

ஆப்பிளை எந்நேரம் வேண்டுமானாலும் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு ஆப்பிளின் முழு நன்மைகளையும் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட நேரத்தில் தான் உட்கொள்ள வேண்டும். சில ஆய்வுகளின் படி, ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் காலை வேளையாகும்.

உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!

தோலுடன் சாப்பிடலாமா?

தோலுடன் சாப்பிடலாமா?

ஆப்பிளில் டயட்டரி நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. அதுவும் ஆப்பிளின் தோலில் தான் இந்த பொருள் உள்ளது. எனவே ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் தான், முழு நன்மைகளையும் பெற முடியும். அதுவும் காலை உணவின் போது ஆப்பிளை சாப்பிடுவது சிறந்ததாகும்.

செரிமான கோளாறுகள்

செரிமான கோளாறுகள்

உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருந்தால், காலையில் எழுந்ததும் ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் செரிமான செயல்பாடு ஆரோக்கியமாக நடைபெறும். மேலும் குடலியக்கமும் சிறப்பாக செயல்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When And How Many Apples Are Considered Healthy

Want to know when and how many apples are considered healthy? Read on to know more...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more