For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இனிமேல் வரக்கூடாதுன்னா இந்த ஜூஸ் அடிக்கடி குடிங்க...

மலச்சிக்கல் என்பது பலரும் விவாதிக்க விரும்பாத ஒரு பிரச்சனையாகும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையைப் பற்றி மருத்துவரிடம் பேச வெட்கப்படுகிறீர்கள் என்றால், மலச்சிக்கலைப் போக்க ஒருசில ஜூஸ்களை முயற்சி செய்யலாம்.

|

மலச்சிக்கல் என்பது பலரும் விவாதிக்க விரும்பாத ஒரு பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை சந்தித்தால், அதை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனென்றால், இது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், மூல நோய், குத பிளவு, பெருங்குடல் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

What Juices Are Good For Constipation Problem

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையைப் பற்றி மருத்துவரிடம் பேச வெட்கப்படுகிறீர்கள் என்றால், மலச்சிக்கலைப் போக்க ஒருசில ஜூஸ்களை முயற்சி செய்யலாம். அதற்காக, இந்த இயற்கை வைத்தியம் எந்த வகையிலும் மருத்துவர் வழங்கும் சிகிச்சைக்கு ஒரு சிறப்பான மாற்று வழியாக இருக்கும் என்று அர்த்தமில்லை.

MOST READ: 'மாஸ்டர்' படத்தைப் பார்க்க தியேட்டருக்கு போறீங்களா? இத முதல்ல படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கலுக்கான காரணங்கள்

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

ஒருவருக்கு மலச்சிக்கலானது போதுமான நீரைக் குடிக்காமல் இருந்தால், நார்ச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சாப்பிடாமல் இருந்தால், எரிச்சலூட்டும் குடல் பிரச்சனை, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, கர்ப்பம், குறிப்பிட்ட மருந்துகள், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவற்றால் ஏற்படும். எனவே உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், சரியான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இப்போது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட குடிக்க வேண்டிய சில ஜூஸ்களைக் காண்போம்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசி ஜூஸ்

அன்னாசி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பண்புகள் நிறைந்த ஒரு அற்புதமான மற்றும் சுவையான பழம். இதில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி, குடலியக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு இதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளதால், இது மலம் எளிதில் மலக்குடல் வழியாக செல்வதற்கு வசதியான பாதையை உருவாக்கித் தரும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது அன்னாசி ஜூஸ் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

ஒரு நாள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. ஏனெனில் இந்த அற்புத பழத்தில் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. அதற்கு பிளெண்டரில் ஆப்பிள், சிறிது சோம்பு பொடி மற்றும் அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து, பின் குடிக்க வேண்டும். இதனால் சோம்பில் உள்ள டயட்டரி நார்ச்சத்து, மலத்தில் நீரை தக்க வைக்க உதவி புரிந்து, எளிதில் வெளியேறச் செய்யும்.

திராட்சை ஜூஸ்

திராட்சை ஜூஸ்

நற்பதமான திராட்சையை பிளெண்டரில் போட்டு, அதில் சிறிது இஞ்சி மற்றும் நீர் சேர்த்து ஒருமுறை அடித்து, வடிகட்டி குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து, உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுவதோடு, மலம் எளிதில் வெளியேறவும் உதவும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் சி, கனிமச்சத்து மற்றும் டயட்டரி நார்ச்சத்து போன்றவை நிறைந்த ஆரஞ்சு பழம், உடலை நீரேற்றத்துடன் வைப்பதோடு, குடலியக்கத்தைத் தூண்டவும் உதவும். அதற்கு ஆரஞ்சு பழத் துண்டுகளை பிளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி, அதில் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது தான் எலுமிச்சை. இது மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதில் சிறந்தது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. அத்தகைய எலுமிச்சையைப் பிழிந்து, அதில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அத்துடன் தேன், சீரகப் பொடி சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். எலுமிச்சை பானத்தில் சீரகப் பொடி சேர்ப்பது, செரிமான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Juices Are Good For Constipation Problem

Constipation is one of the most common stomach problems. You can try out some home remedies to treat this problem. In this article, we will discuss homemade juices to treat constipation.
Desktop Bottom Promotion