For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவில் புதிதாக பரவும் தக்காளி காய்ச்சல் - இது தக்காளியால் பரவுகிறதா? உண்மை என்ன?

தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்கள் உள்ளுர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

|

கேரளாவில் உள்ள கொல்லம் என்னும் நகரில் சுமார் 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் இருப்பதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்கள் உள்ளுர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

What is tomato fever: Know causes, symptoms, treatment and prevention in Tamil

தக்காளி காய்சசல் என்பது ஒரு அரிய வகை வைரஸ் நோய்த்தொற்று ஆகும். இது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. கேரளாவின் சுகாதார துறை இந்த தொற்றை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த தொற்று வழக்குகள் பதிவாகியுள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறுகிறது. சரி, தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? அது எவ்வாறு பரவுகிறது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?

தக்காளி காய்ச்சல் என்பது கேரளாவில் கண்டறியப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத காய்ச்சலாகும். ஆனால் தக்காளி காய்ச்சல் ஒரு வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்கன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலின் ஒரு பக்கவிளைவா என்பது இன்னும் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. சிலர் தக்காளி காய்ச்சல் தக்காளியால் பரவுகிறது என்ற தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.

தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்

தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்

தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்றால் அது சரும தடிப்புகள், எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவையாகும். தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட தக்காளி அளவில் சிவப்பு நிற தடிப்புகள் மற்றும் நாக்கில் கடுமையான வறட்சி போன்றவை இருக்கும்.

தக்காளி காய்ச்சலின் பிற அறிகுறிகள்

தக்காளி காய்ச்சலின் பிற அறிகுறிகள்

* அதிகப்படியான காய்ச்சல்

* உடல் வலி

* மூட்டு வீக்கம்

* களைப்பு

* தக்காளி அளவில் சரும தடிப்பு

* வாயில் எரிச்சல்

* கைகள், மூழங்கால்கள் மற்றும் பிட்டத்தில் நிற மாற்றம்

* சில நோயாளிகளுக்கு சரும வெடிப்புகளில் உருவாகும் கொப்புளங்களில் இருந்து புழுக்கள் வருவதாகவும் கூறுகின்றனர்.

தக்காளி காய்ச்சலுக்கான காரணங்கள்

தக்காளி காய்ச்சலுக்கான காரணங்கள்

கேரளாவில் திடீரென்று பரவிக் கொண்டிருக்கும் தக்காளி காய்ச்சல் எந்த காரணத்தினால் பரவுகிறது என்பதைப் பற்றி சுகாதார நிபுணர்கள் இன்னும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தக்காளி காய்ச்சல் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள்

தக்காளி காய்ச்சல் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள்

தக்காளி காய்ச்சல் அவ்வளவு தீவிரமானது அல்ல மற்றும் இது சரிசெய்யக்கூடியது. ஆனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சரியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தக்காளி காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள்

தக்காளி காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள்

* குழந்தைகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

* பாதிக்கப்பட்ட குழந்தைகள் நீரேற்றத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் நீரை நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.

* கொப்புளங்கள் அல்லது தடிப்புக்கள் இருந்தால், அதை சொறிந்துவிடாதீர்கள்.

* சுத்தத்தைப் பேண வேண்டும்.

* வெதுவெதுப்பான நீரால் குளிக்க வேண்டும்.

* தொற்று ஏற்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

* காய்ச்சலின் விளைவுகளைத் தவிர்க்க போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is tomato fever: Know causes, symptoms, treatment and prevention in Tamil

Tomato Flu: Kerala reports at least 82 cases of Tomato Fever-Know Symptoms, Causes, Treatment and Prevention in tamil.
Story first published: Tuesday, May 10, 2022, 15:51 [IST]
Desktop Bottom Promotion