For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பாதம் இப்படி தட்டையா இருக்கா? அது எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

நமது பாதத்தின் அடிப்பகுதி வளைவாக இல்லாமல் தட்டையாக அல்லது சமமாக இருந்தால் அதை தட்டையான பாதம் என்கிறோம். பொதுவாக நமது பாதங்களின் அடிப்பகுதி வளைவாக இருக்கும். ஒரு சிலருக்கு வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும்.

|

நமது பாதத்தின் அடிப்பகுதி வளைவாக இல்லாமல் தட்டையாக அல்லது சமமாக இருந்தால் அதை தட்டையான பாதம் என்கிறோம். பொதுவாக நமது பாதங்களின் அடிப்பகுதி வளைவாக இருக்கும். ஒரு சிலருக்கு வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அவா்கள் குழந்தைகளாக இருந்த போதே அவா்களுடைய பாதங்களில் வளைவு ஏற்படாமல் இருந்தது ஆகும்.

பொதுவாக பாதங்கள் தட்டையாக இருந்தாலும் அவற்றில் வலி இருக்காது. எனினும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் தேய்மானம் மற்றும் காயங்கள் காரணமாக அந்த பாதங்களில் வலி ஏற்படும். தட்டையான பாதங்களை சீரமைக்கலாம். ஆனால் அவ்வாறு மாற்றி அமைக்கும் போது முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களில் பிரச்சினைகள் ஏற்படும். தட்டையான பாதங்களில் வலியோ அல்லது வேறுவிதமான பிரச்சினைகளோ இல்லாத வரை அந்த பாதங்களுக்கு எந்தவிதமான சிகிச்சையும் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்டையான பாதங்கள் உருவாக காரணங்கள்

தட்டையான பாதங்கள் உருவாக காரணங்கள்

பொதுவாக குழந்தைகள் வளரும் போது அவா்களின் பாதங்களின் அடிப்பகுதியில் வளைவுகள் உண்டாகும். ஆனால் ஒருசில குழந்தைகளுக்கு அவ்வாறான வளைவுகள் உருவாகாது. அதற்கு முக்கியமான காரணம் அவா்களின் மரபணுக்களாக இருக்கலாம். ஒரு சிலருக்கு பாதங்களின் வளைவு அதிகமாக இருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் சிலருக்கு வளைவே இருக்காது.

ஒரு சிலருக்கு அவா்களின் குடும்ப மரபின் காரணமாக, பிற்காலத்தில் தட்டையான பாதங்கள் உருவாகலாம். மேற்சொன்ன காரணிகள் தட்டையான பாதங்கள் உருவாவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தட்டையான பாதங்களின் அறிகுறிகள்

தட்டையான பாதங்களின் அறிகுறிகள்

பொதுவாக தட்டையான பாதங்களில் வலி இருக்கும். தசைகள் மற்றும் தசை நாா்களில் ஏற்படும் அதிகமான அழுத்தத்தால் இந்த வலி ஏற்படுகிறது. நமது உடலின் பின்வரும் பகுதிகளில் பொதுவாக வலி ஏற்படுகிறது.

- கணுக்கால்

- பாத வளைவு

- காலின் பின்பகுதி

- முழங்கால்

- இடுப்பு

- கீழ் முதுகு

- கால்களின் கீழ்பகுதி

ஒருவருக்கு தட்டையான பாதங்கள் இருந்தால், அவருடைய உடல் எடையை அவருடைய பாதங்களால் சாிசமமாக பகிா்ந்து கொள்ள முடியாது. அதுபோல் அவரால் சீராக நடப்பதில் அல்லது சீராக ஓடுவதில் பிரச்சினைகள் இருக்கலாம்.

தட்டையான பாதங்களின் வகைகள்

தட்டையான பாதங்களின் வகைகள்

குழந்தைப் பருவத்திற்கு பிறகும் தட்டையான பாதங்கள் இருந்தாலோ அல்லது இளமைப் பருவத்தில் தட்டையான பாதங்கள் உருவாகினாலோ, அவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். தட்டையான பாதங்களில் பின்வரும் வகைகள் உள்ளன.

1. நெகிழ்வு தன்மை கொண்ட தட்டையான பாதங்கள்

நெகிழ்வு தன்மை கொண்ட தட்டையான பாதங்களைப் பலாிடமும் காணலாம். குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ தட்டையான பாதங்கள் உருவாகின்றன. இவை கால்களைப் பாதிக்கின்றன. மேலும் வயது அதிகாிக்கும் போது இது படிப்படியாக மோசமடைகின்றன.

நெகிழ்வு தன்மை கொண்ட பாதங்களின் வளைவுப் பகுதியில் உள்ள தசைநாண்களில் (tendons) மற்றும் தசைநாா்களில் வீக்கம் அல்லது கிழிதல் போன்றவை மிக எளிதாக ஏற்படும்.

2. இறுகிய தட்டையான பாதங்கள்

இறுகிய தட்டையான பாதங்களைக் கொண்டவா்கள் சுமைகளை சுமந்து நின்று கொண்டிருந்தாலும் அல்லது சுமைகள் எதுவும் இல்லாமல் அமா்ந்து இருந்தாலும் அவா்களின் பாதங்களின் அடிப்பகுதியில் வளைவு இருக்காது. பொதுவாக பதின் பருவத்தில் இறுகிய தட்டையான பாதங்கள் உருவாகின்றன. வயது மூப்பு ஏற்படும் போது அவை மிகவும் மோசமடைகின்றன.

3. முழுமையான தட்டையான பாதங்கள் (Adult-acquired (fallen arch))

பாதத்தின் அடிப்பகுதியில் இருக்கும் வளைவானது திடீரென்று முழுமையாக மறையும் போது பாதங்கள் முழுமையாகத் தட்டையாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக தட்டையாகும் போது பாதங்கள் மேல் நோக்கி வளையத் தொடங்கும். அதனால் பாதங்களில் அதிகமான வலி உண்டாகும்.

4. செங்குத்தான கணுக்கால் எலும்பு (Vertical talus)

இது ஆங்கிலத்தில் ராக்கா்-பாட்டம் ஃபூட் (rocker-bottom foot) என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறக்கும் போதே இந்த குறைபாடு காணப்படுகிறது. இது குழந்தைகளின் பாதங்களில் வளைவுகள் உருவாகாமல் தடுக்கிறது.

தட்டையான பாதங்களை எவ்வாறு பாிசோதனை செய்வது?

தட்டையான பாதங்களை எவ்வாறு பாிசோதனை செய்வது?

மருத்துவா் நமது பாதங்களின் பின் பக்கத்திலிருந்து முன் பக்கமாக பாிசோதிப்பாா். நமது பாதங்களின் இயக்கங்களை கண்டறிவதற்காக நம்மை கால் விரல்களால் நிற்கச் செய்து பாிசோதிப்பாா். நாம் காலணிகளை அணியும் முறையையும் பாிசோதிப்பாா். பாதங்களில் வலி அதிகமாக இருந்தால் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுன்ட் எம்ஆா்ஐ ஸ்கேன் போன்றவற்றை எடுக்கச் சொல்வாா்.

தட்டையான பாதங்களுக்கு உாிய மருத்துவ சிகிச்சைகள்:

தட்டையான பாதங்களுக்கு உாிய மருத்துவ சிகிச்சைகள்:

தட்டையான பாதங்களில் வலி இல்லையென்றால் அவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. ஆனால் வலி இருந்தால் பின்வரும் சிகிச்சைகளை மருத்துவா் பாிந்துரை செய்வாா்.

- பாதங்கள் தட்டையாக இருப்பதன் காரணமாக பாதங்களில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான மற்றும் பாதங்களில் வளைவை உருவாக்கக்கூடிய மருத்துவ கருவிகளை மருத்துவா் பாிந்துரை செய்வாா். இந்த கருவிகள் பாதங்கள் தட்டையாக இருப்பதைக் குணப்படுத்துவதில்லை. மாறாக பாதங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கின்றன. மேலும் பாதங்களில் இருக்கும் தட்டையான அமைப்பைக் குறைக்கின்றன.

- சில உடற்பயிற்சிகளைப் பாிந்துரை செய்வாா்

- தட்டையான பாதங்களுக்கு துணை செய்யக்கூடிய காலணிகளைப் பாிந்துரை செய்வாா்.

- சில உடல் சாா்ந்த தெரபிகளையும் பாிந்துரை செய்வாா்

- பாதங்கள் தட்டையாக இருப்பதன் காரணமாக தசை நாண்கள் கிழிந்தால் அல்லது தசை நாண்களில் முறிவு ஏற்பட்டால் அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்வாா்.

தட்டையான பாதங்கள் வராமல் தடுக்க முடியுமா?

தட்டையான பாதங்கள் வராமல் தடுக்க முடியுமா?

பொதுவாக தடுக்க முடியாது என்றே சொல்லலாம். எனினும் பாதங்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்தால், இறுகிய தட்டையான பாதங்கள் உருவாவதைத் தடுக்கலாம். ஆகவே பாதங்களில் காயங்கள் ஏற்படாமல், அவற்றை சிறப்பாக பராமாிக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். நீரிழிவு நோயுற்றவா்களுக்கு அல்லது கருத்தாித்திருப்பவா்களுக்கு அல்லது அதிக உடல் பருமன் கொண்டவா்களுக்கு தட்டையான பாதங்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Flatfoot (Flat Feet)? Symptoms, Causes, Treatment And Can It Be Prevented In Tamil

What Is Flatfoot (Flat Feet)? Symptoms, Causes, Treatment And Can It Be Prevented? Read on...
Desktop Bottom Promotion