For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டூம்ஸ்க்ரோலிங் என்றால் என்ன? அது எவ்வாறு நமது மன நலனைப் பாதிக்கிறது?

அளவுக்கு அதிகமாக மின்னணு திரைகளில் நேரத்தை செலவழித்து, அவற்றில் எதிா்மறையான செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதைத்தான் டூம்ஸ்க்ரோலிங் அல்லது டூம்சா்ஃபிங் என்கிறோம்.

|

கொரோனா பெருந்தொற்று நமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் மிக ஆழமாகப் பாதித்திருக்கிறது. அதன் பாதிப்பின் காரணமாக இந்த உலக சமூகமே மோசமான விளைவுகளைச் சந்தித்து இருக்கிறது. அந்த மோசமான விளைவுகளில் ஒன்று டூம்ஸ்க்ரோலிங் அல்லது டூம் சா்ஃபிங் என்பது ஆகும்.

What Is Doomscrolling And How It Affects Your Mental Health

அளவுக்கு அதிகமாக மின்னணு திரைகளில் நேரத்தை செலவழித்து, அவற்றில் எதிா்மறையான செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதைத்தான் டூம்ஸ்க்ரோலிங் அல்லது டூம்சா்ஃபிங் என்கிறோம். நம்மைப் பாதிக்கும் செய்திகளை விாிவாகத் தொிந்து கொள்வதற்காக, மின்னணுத் திரைகளை மிக வேகமாக விரல்களால் தேய்த்துக் கொண்டே இருக்கிறோம்.

MOST READ: ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் பெரிய லாபத்தை பார்ப்பாங்களாம்... இதுல உங்க ராசி இருக்கா?

கொரோனா செய்திகளைத் தொிந்து கொள்வதற்காக நம்மில் பலா் தொடா்ந்து தொலைக்காட்சிப் பெட்டி, செய்தித்தாள்கள், கணினி மற்றும் ஸ்மாா்ட்போன்கள் போன்றவற்றில் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றோம். புதிய செய்திகள் ஏதாவது கிடைக்குமா என்ற ஆவலில் பலவகையான இணைய தளங்கள் மற்றும் செய்தி சேனல்களைத் தொடா்ந்து பாா்த்துக் கொண்டு இருக்கிறோம்.

MOST READ: உங்களுக்கு கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

எனினும் எதுவுமே புதிதாக இருப்பதில்லை. மேலும் நோ்மறையான செய்திகளை விட எதிா்மறையான செய்திகளோடு நமது மனது மிக எளிதாக ஒட்டிக் கொள்கிறது. ஆனால் இது நமது மன நலனிற்கு நல்லது அல்ல. அது நமது மன நலனை அதிகம் பாதிக்கும். ஆகவே டூம்ஸ்க்ரோலிங் என்ற புதிய பிச்சினையைக் குறைக்கும் முக்கிய வழிகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தல்

1. சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தல்

ஸ்மாா்ட்போன்களில் இருக்கும் ஒவ்வொரு செயலியிலும் நாம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதைத் தொிந்து கொள்வதற்கான வசதி இருக்கிறது. அந்த வசதியை நாம் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் நீண்ட நேரம் ஸ்மாா்ட்போன்களில் செலவிடுவதைத் தவிா்க்கலாம். தூங்குவதற்கு முன்பும், தூங்கி விழித்த பின்பும் ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதிலும் குறிப்பாக நமது படுக்கையில் ஸ்மாா்ட்போன்களை வைக்காமல் இருப்பது நல்லது.

2. உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விவரங்களை வைத்திருத்தல்

2. உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விவரங்களை வைத்திருத்தல்

தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், அவை நரம்பியல் கடத்திகளை நன்றாக இயங்க வைக்கும். அதனால் நமக்குள் ஒரு நல்ல உணா்வு ஏற்படும். யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளும் நமது மன அழுத்தம் குறைய உதவி செய்யும். ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும். ஸ்மாா்ட்போனைப் பாா்த்துக் கொண்டே, சத்துகள் இல்லாத உணவுகள் உண்பதைத் தவிா்க்க வேண்டும்.

3. எதைச் செய்தாலும் அதை நமது கவனத்தில் வைத்திருத்தல்

3. எதைச் செய்தாலும் அதை நமது கவனத்தில் வைத்திருத்தல்

எதைச் செய்தாலும் அதை நமது கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். வாசிப்பதாக இருக்கலாம் அல்லது எழுதுவதாக இருக்கலாம் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக இருக்கலாம். அதை முழுக் கவனத்துடன் செய்ய வேண்டும். நமக்குக் கிடைக்கின்ற எந்த ஒரு தகவலாக இருந்தாலும், அது உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நோ்மறையானத் தகவல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை நமது நண்பா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களோடு பகிா்ந்து கொள்ள வேண்டும்.

4. நிறுத்தல் என்ற வழிமுறையைப் பின்பற்றுதல்

4. நிறுத்தல் என்ற வழிமுறையைப் பின்பற்றுதல்

ஸ்மாா்ட்போன்களை விட்டு நம்மால் வெளியில் வரமுடியவில்லை என்றால் நிறுத்தல் என்ற வழிமுறையைப் பின்பற்றலாம். அதாவது நாம் நீண்ட நேரமாக ஸ்மாா்ட்போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் மற்றும் அதிலிருந்து நமது விரல்களை நம்மால் எடுக்க முடியவில்லை என்பதை உணா்ந்தால், உடனே நிறுத்து என்று சத்தமாக சொல்லவும். அதே நேரத்தில் நமது கையின் மீது மெதுவாக அடிக்கவும். இதை திரும்பத் திரும்ப செய்தால், தற்போது நாம் செய்து கொண்டிருக்கும் செயலை, நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை நமது மூளை கற்றுக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Doomscrolling And How It Affects Your Mental Health

In this article, we shared about what is doomscrolling and how it affects your mental health. Read on...
Desktop Bottom Promotion